பொதுவாக ஆடி மாதம் சுப நிகழ்ச்சிகளுக்கு விலக்கப்பட்டாலும், தெய்வ வழிபாட்டுக்குரிய மாதமாகும்.
ஆடி மாதம் ஆடிவெள்ளி, செவ்வாய், ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம் ஆகிய விழாக்கள் வருகின்றன.
ஜோதிட ரீதியாக சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் தட்சிணாயண புண்ணிய காலமாகும் , ஆடி 1 முதல் தொடங்கும் ஆடி, ஆவணி , புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். இது தேவர்களுக்கு இரவு பொழுதாகும் (உறக்கம் ),
மார்கழி மாதம் தேவர்கள் விழித்தெழும் காலம், அந்த மாதம் முழுவதும் மக்கள் திருக்கோவில்களில் பஜனை பாடி இறைவழிபாடு செய்வர். தை 1 உத்திராயனத்தின் தொடக்கமாகும்.
மார்கழி மாதம் தேவர்கள் விழித்தெழும் காலம், அந்த மாதம் முழுவதும் மக்கள் திருக்கோவில்களில் பஜனை பாடி இறைவழிபாடு செய்வர். தை 1 உத்திராயனத்தின் தொடக்கமாகும்.
ஆடியில் சூரியன் சஞ்சரிக்கும் ராசி கடகம், ஒரு பெண் ராசி, அதன் அதிபதி சந்திரன் பெண் கிரகம் மேலும் தாய் காரகன் எனவே இது அன்னை, அம்பாள், தாயார் என பல பெயர்களில் அழைப்படும் பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்தாக இருக்கிறது.
திருவிழாக்கள்
ஆடிப்பெளர்ணமி : ஆடி 14ம் தேதி 30.07.2015 வியாழக்கிழமை.
திருவண்ணாமலை போன்ற மலை கோவில்களில் கிரிவலம் வருதல் சிறப்பு
................................................................................................................................................
ஆடிப்பெருக்கு : ஆடி 18ம் தேதி 3.08.2015 திங்கட்க்கிழமை.
ஆடிப்பெருக்கு (18ஆம் பெருக்கு ) என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.
ஆடிப்பெருக்கு அன்று காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக குடும்பத்துடன் விழாவாக காவிரிக் கரையில் கொண்டாடுவது வழக்கம்.
இந்நாளில் குடும்பத்துடன் காவிரியில் நீராடி
இறைவழிபாடு செய்வது சிறப்பு.
................................................................................................................................................
ஆடி கார்த்திகை : ஆடி 23ம் தேதி 8.08.2015 சனிக்கிழமை,
முருக பெருமான் வழிபாடு சிறப்பு
................................................................................................................................................
ஆடி அமாவசை : ஆடி 29 ம் தேதி 14.08.2015 வெள்ளிக்கிழமை,
கடலில் நீராடி முன்னோர்களை வழிபாடு செய்வதற்கும் உகந்த நாள். அன்னதானம் செய்வது சிறப்பு.
பாவங்கள் போக்கும் பிதுர்வழிபாட்டுக்குரிய தலமாக ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது சிறப்பு.
................................................................................................................................................
ஆடிப்பூரம் : ஆடி 31 ம் தேதி 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை,
அம்பிகையை, ஆண்டாள் அன்னையை வழிபாட உகந்த நாள்
ஸ்ரீ ஆண்டாள் தாயார் பிறந்த தினமான இன்நாளில், திருமணம் ஆகாத பெண்கள் , நல்ல வரன் அமைவதற்கு வழிபாடு செய்வது சிறப்பு, பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபாடு செய்ய நன்மைகள் பல பெறுவர்.
ஆஸ்ட்ரோ கண்ணன்