பொதுவாக சந்தி என்படுவது சந்திப்பு என பொருள் கொள்ளலாம். உத : இரண்டு வெவ்வெறு சாலைகள் சந்திக்கும் இடம் சந்திப்பு , ஜோதிடத்தில் சந்திப்பு எனப்படுவது ஒன்றின் முடிவு மற்றொன்றின் தொடக்கம் என பொருள் கொள்ளலாம். இவை இலக்கின சந்தி, நட்சத்திர சந்தி, திதி சந்தி என பல உண்டு, ஒரு ஜாதகர் பிறந்த நேரத்தில் இவற்றில் ஒன்றில் இருப்பின் முக்கியமாக இலக்கின சந்தியில் இருப்பின் பலன் தீர்மானித்தலில் குழப்ப நிலை ஏற்படும்.
ஒரு லக்கினத்தின் (ராசி ) 30 பாகையில் முதல் பாகைக்கு உள்ளாக இருந்தாலும், 29 ம் பகையில் இருந்தாலும், முன், பின் இலக்கினமா என்ற கேள்வி உருவாகும், இவை பஞ்சாங்ககளை பொருத்தும்,
அயனாம்சத்தை பொருத்தும், ஜாதகம் கணிக்கும் மென் பொருள்களை பொருத்தும் மாறுபடும். சிலர் இதனை மிக எளிதாக எடுத்து கொள்கின்றனர், ஆனால் இதனால் பலன்களே மாறி விடும்,
உதா : ஒருவர் பிறந்த ஜாதகத்தில் கும்ப இலக்கின சாந்தி ( முடிவு பகை ) யோகாதிபதி புதன் 5ல் ஆட்சி (மிதுனம் ), புதன் திசை நற்பலன்களை தரும், ஆனால் இலக்கின பாகை மீனம் தொடக்கம் ( வேறு பஞ்சாங்க முறைப்படி ) பலன்கள் தலைகீழாக மாறிவிடும், காரணம் மீன லக்கினத்திற்கு புதன் பாதகாதிபதி, பலம் பெற்று 4ல் ஏமாற்றமே மிஞ்சும்.
சந்திகளை கவனத்தில் கொள்வது நன்று.
இத்தகைய ஜாதகத்தினை பிரசன்ன முறையிலும், நடந்த, நடந்து கொண்டிருக்கும் பலன்களை கொண்டும் சரி பார்க்கலாம்.
No comments:
Post a Comment