Tuesday, 1 December 2015

மேஷ இலக்கினம் (பொது பலன் )

மேஷ லக்னத்தில் பிறந்தவர். இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம். 
அது, தீயைப்போல உக்ரமானது. உங்கuக்கு அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும். காதல் விவகாரங்களில் நீங்கள் கொஞ்சம்கூட, ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக இருக்கக் கூடியவர். நீங்கள், நல்ல சுபாவமும், வலிமையும் படைத்தவர். நீங்கள் பிறருடன் சண்டைபிடிப்பவர் நாசூக்கு அற்றவர் அவசரப்படக் கூடியவர் கோபக்காரர் செவ்வாயினால் ஆளப்படுபவர். நீங்கள் மகிழ்ச்சியுடனிருந்தாலும் மன உணர்ச்சிவெறி கொண்டவரல்ல நீங்கள் கூரிய புத்தியுடைய அறிவாளி நல்ல பெயர் சேர்க்கக்கூடியவர். அடர்த்தியான புருவங்களைக் கொண்ட நீங்கள், தைர்யம் மிக்கவர். உள்ளத்து உணர்ச்சிகளின் திடீர் உந்தலில் செயல்படுபவர். உங்களுக்கு உயரிய விவேகமும், அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளன. நீங்கள் எப்போதுமே மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய உயரிய லட்சியத்தைக் கொண்டவர். நீங்கள், மற்றவர்களுக்கு ஆணையிட்டு, நிர்வகித்திடும் பணிக்குச் சாலப் பொறுத்தமானவர். உங்களுக்கு, தசைப்பற்றுடைய உடல்வாக்கு இருக்கிறது. நீங்கள் விரைவாக செயல்படக்கூடியவர். நீங்கள் கர்வமானவர் சுயகௌரவத்துக்கு, மிகுந்த முக்யத்துவம் தருபவர். மற்றவர்களின் திறமையை, நீங்கள் குறைத்து மதிப்பிடுபவர் இது உக்ரமான ராசியாதலால், நீங்கள் எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டவர். இதற்கு செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால், நீங்கள் சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment