வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி வருகிற ஜனவரி 8ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. ராகு கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும், கேது மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர்.
இந்த ஜனவரி முதல் அடுத்த 1 1/2 வருடங்கள் இவர்கள் தரும் பலன்களை காண்போம்.
அதற்கு முன் நிழல் கிரகங்களான ராகு, கேதுவை பற்றிய ஜோதிட விபரங்களை பார்ப்போம்.
வான சாத்திர அடிப்படையில் ராகு, கேது கிரகங்கள் அல்ல, கிரகணத்தை ஏற்படுத்தும் புள்ளிகள், நிழல் கிரகங்கள்.
வான சாத்திர அடிப்படையில் ராகு, கேது கிரகங்கள் அல்ல, கிரகணத்தை ஏற்படுத்தும் புள்ளிகள், நிழல் கிரகங்கள்.
இவற்றிக்கென ஆட்சி, உச்ச, நீச வீடுகள் இல்லை.சில கிரகங்களின் வீடுகளில் இவர்கள் ஆட்சி பெறுவதாக ஜோதிட மூல நூல்கள் பலவற்றில் கூறப்படுள்ளது.
சோதிடவியலில் எட்டாவது கோளான இராகுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
கரும்பாம்பு , தமம், மதாப்பகை, மதாயுணி ஆகியனவாகும்.
நிறம் : கருமை.
வடிவம் : உயரம்.
அவயம் : தொடை,பாதம், கணுக்கால்.
உலோகம் : கருங்கல்.
ரத்தினம் : கோமேதகம்.
ஆடை : கறுப்புடன் சித்திரங்கள் சேர்ந்தது.
மலர் : மந்தாரை.
வாகனம் : ஆடு.
சமித்து : அறுகு.
சுவை : கைப்பு.
தான்யம் : உளுந்து.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : பித்த நாடி.
திக்கு : தென் மேற்கு.
அதி தேவதை : காளி,துர்க்கை,
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : கொடி.
நட்பு கோள்கள் : சனி, சுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 18 ஆண்டுகள்.
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : கன்னி.
நீசம் பெற்ற இடம் : ரிசபம்.
உச்சம் பெற்ற இடம் : விருச்சிகம்.
மூலதிரிகோணம் : கும்பம்.
உப கிரகம் : வியதீபாதன்.
காரகத்துவம் : பிதாமஹன். (பிதுர் பாட்டன் )
சேவகத்தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமான தொழில், விகட வினோத வித்தைகள், குஷ்டம், நாள்பட்ட ரோகம், களவு, விஷ்பயம், அங்கவீனம், வெகு பேச்சு, ஜல கண்டம், வெட்டுக்காயம், சிரைப்படல் இவைகளுக்கு எல்லாம் இராகு தான் காரகன்.
..................................................................................................................................................................
சோதிடவியலில் ஒன்பதாவது கோளான கேதுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது. கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை ஆகியனவாகும்.
நிறம் : சிவப்பு.
வடிவம் : உயரம்.
அவயம் : கை, தோள்.
உலோகம் : துருக்கல்.
ரத்தினம் : வைடூரியம்.
மலர் : செவ்வல்லி.
வாகனம் : சிம்மம்.
சமித்து : தர்ப்பை.
சுவை : உறைப்பு.
தான்யம் : கோதுமை.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : பித்த நாடி.
திக்கு : வட மேற்கு.
அதி தேவதை : விநாயகர், சண்டிகேச்வரர்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : மூச்சில்.
நட்பு கோள்கள் : சனி, சசுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 7 ஆண்டுகள்.
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : மீனம்.
நீசம் பெற்ற இடம் : சிம்மம்.
உச்சம் பெற்ற இடம் : கும்பம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உப கிரகம் : தூமகேது.
காரகத்துவம் : மதாமஹன்.
மாதுர் பாட்டன் வம்சம், கபடத்தொழில், கீழ்குலத்தொழில், பாபத்தொழில், பரதேச ஜீவனம், அக்னிகண்டம் இவைகளுக்கு எல்லாம் கேது தான் காரகன்.
...................................................................................................................................................................
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை
மேசம்

5 ஆம் வீடான சிம்மத்தில் ராகு பூர்வீகத்தில் பிரச்சினைகள் தரும், குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை, மருத்துவ செலவுகள் ஏற்படும், தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். எனினும் உடன் குரு இருப்பதால் தீய பலன்கள் குறையும், அஷ்டம சனி காலம் நடைபெற்றாலும், குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் கவலை பட தேவையில்லை, குல தெய்வ வழிபாடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
ரிசபம்
ரிசப ராசிக்கு 4ல் ராகுவும், 10 கேதுவும் பெயர்ச்சிடைகின்றனர், சுக ஸ்தானத்தில் ராகு உடல் நலனை பாதிக்கும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நலம், வீடு, இருப்பிட மாற்றம் ஏற்படும், வாகன போக்குவரத்தில் கவனம் தேவை, 10ல் கேது தொழில், வேலையில் மந்த நிலை ஏற்பட வாய்ப்புண்டு, புதிய முதலீடுகள், வியாபாரம் போன்றவற்றை நன்கு ஆலோசித்து செய்தல் வேண்டும். 7ல் சனி இருந்து ராசியை பார்ப்பதால் ஜூன் வரை சாதகமான நிலை இல்லை. குல தேய்வ வழிபாடு, உடல் ஊனமுற்றோருக்கு உதவுவது சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
மிதுனம்
மிதுனம்

ஸ்ரீ ரங்கநாதரை தரிச்சித்தல், புனித நதிகளில் நீராடுதல், சாது, சந்நியாசிகளுக்கு அன்னதானம் செய்தல் சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
கடகம்
கடகம்
கடக ராசிக்கு 2ல் ராகு மற்றும் 8 ல் கேது பெயர்ச்சியாகின்றனர். 2 மிட ராகு பேச்சில் கவனம் தேவை, உடல் குரு இருப்பதால் சிறந்த தன லாபத்தை தரும், பொருளாதார மேன்மை ஏற்படும், உணவில் கவனம் தேவை.
8ல் கேது உடல் நலக்குறைவு , சோர்வு, தடுமாற்றம் ஏற்படும், போக்குவரத்து வாகனங்களில் கவனம் தேவை, குரு பார்வை இருப்பதால் தீமைகள் குறையும், தீடீர் அதிர்ஷ்டம் மூலம் தன வரவு உண்டு.
அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, அன்னதானம் செய்வது சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
சிம்மம்
சிம்மம்
பெயர்ச்சியடைக்கின்றனர்,
இது வரை ராகு, கேது இருந்த இடம் சிறப்பல்ல மேலும் தற்போது இவர்கள் வரும் இடமும் அவ்வளவு சிறப்பில்லை, மன குழப்பம், சஞ்சலம், ஏற்படும், புதிய முடிவுகளில் கவனம் தேவை, கணவன், மனைவி உறவில் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகும், புதிய நண்பர்களால் சில ஏமாற்றங்கள், இழப்புகள் ஏற்படலாம்.
ராசியில் இருந்து குரு பார்க்கும் இடங்களால் நன்மைகள் அதிகம் ஏற்படும், இறைவழிப்பாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்,
சிவ பெருமான் வழிபாடு, காளகஸ்தி, திரு நாகேஸ்வரம், போன்ற ராகு, கேது ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
கன்னி
கன்னி
கன்னி ராசிக்கு ஜென்மத்தில் இருந்து ராகு 12ம் இடத்திற்கும், 7ல் இருந்த கேது 6ம் இடத்திற்கும் பெயர்ச்சியடைக்கின்றனர்.
இது ஒரு பொற்காலமாகும், காரியங்களில் இருந்த தடை, தாமதம் விலகி வெற்றி கிட்டும், மன குழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். எதிரிகள், தொழில் போட்டியாளர்கள் பின் வாங்குவர், கடன், நோய் தீரும், சேமிப்பு உயரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர்.
குலதெய்வ வழிபாடு, ஸ்ரீ ரங்கம், திருவனந்தபுரம் பெருமாள் வழிபாடு திருக்கோவில் நல பணிகளுக்கு நன்கொடை அளிப்பது சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
துலாம்
துலாம்
கேதுவும் பெயர்ச்சியடைகின்றனர்,
லாப ஸ்தானமான 11ல் ராகு வருவது நன்மையே, லாபம் பெருகும், உடன் குரு இருப்பது சிறப்பு, பொருளாதார நிலை உயரும், ஏற்கெனவே தொடங்கிய காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு தொடர்பு வியாபாரங்களில் மேன்மை உண்டு, வெளிநாடு முயற்சி வெற்றி தரும், 5ல் கேது குழந்தைகள் வகையில் மருத்துவ செலவு, பூர்வீக தொடர்பு பிரச்சனைகள் ஏற்படலாம், முக்கிய முடிவுகளில் கவனம் தேவை,
குல தெய்வ வழிபாடு, சித்தர்கள் வழிபாடு, விநாயகர் வழிபாடு, அன்னதானம் செய்வது சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
விருச்சிகம்
விருச்சிகம்
ராசிக்கு 10ல் ராகுவும், 4 ல் கேதுவும் பெயர்ச்சிடைகின்றனர். பொதுவாக 10ல் பாப கிரகங்களாவது இருக்க வேண்டும் என்பர், 10ம் இட ராகு தொழில் போட்டியை ஏற்படுத்தி உங்கள் திறமையை வெளி கொணரும்,கடின உழைப்பால் முன்னேறுவீர்கள், தொழில் பன்மடங்கு பெருகும், லபாம் கிட்டும், சுக ஸ்தானமான 4ல் கேது உடல்நலன் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவு அதிகரிக்கும், ஜென்ம சனியும் நடைபெறுவதால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நலம்.
விநாயகர் வழிபாடு, சனி பகவான் வழிபாடு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
தனுசு
தனுசு

...................................................................................................................................................................
மகரம்
மகரம்
உடல் நல குறைவு ஏற்படலாம், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்,
குடும்பத்தில் பேச்சினில் கவனம் தேவை, திடீர் பண வரவும் உண்டு, புதிய திட்டம், முயற்சிகளில் சிறு தாமதம் ஏற்படும். மன குழப்பம் தரும், எதிரிகள் தொல்லை நீங்கும், கடன்கள் குறையும். ஜூன் வரை கவனம் தேவை, துர்க்கை வழிபாடு, காளகஸ்தி சென்று வாழிபாடு செய்தல், உடல் ஊனமுற்றோர், வயதானவர்களுக்கு அன்னதானம் செய்தல் சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
கும்பம்
கும்பம்
கணவன் மனைவி இடையே சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்,
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காலம், வீண் கவலை, குழப்பம் ஏற்படலாம், புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை, உடன் குரு இருப்பதால் கவலை கொள்ள தேவை இல்லை, தீய பலன்கள் குறையும், வருமானம் அதிகரிக்கும், கடன்கள் குறையும்,
உற்சாகமாக இருத்தல், விநாயகர் வழிபாடு, செவ்வாய்கிழமை ராகுகால வழிபாடு, குல தெய்வ வழிபாடு செய்தல் சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................
மீனம்
மீனம்
மீன ராசிக்கு சிறந்த காலம், எதிரிகள் தொல்லை நீங்கும், வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும், புதிய முதலீடுகள் அதிகரிக்கும், கடன்கள் கிடைக்கும், தன வரவு நன்றாக இருக்கும், தொழில், வேலையில் இருந்த மந்த போக்கு நீங்கி சுறுசுறுப்பு அடையும், அந்நிய நபர்களால் ஆதாயம் உண்டு, பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர், ஜூன் வரை குரு 6ல் இருப்பதால் சற்று கவனமாக செயல்படுதல் நன்று, குரு பகவான் வழிபாடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்தல் சிறந்த பலன்களை தரும்.
email : astrorkannan@gmail.com