Monday, 20 October 2014

தீபாவளி (தீப ஒளி) திருவிழா பெயர் காரணம் ?

  தீபாவளி (தீப ஒளி) திருவிழா  பெயர் காரணம் ? 



சுவாமி  விவேகானந்தர்  கூறியது  உலக மதத்திற்கெல்லாம்  தாய்  மதமாம்  இந்து  சமயம் என்பது,   நமது சமயத்தில் இறைவடிவமும்   சரி, வழிபாடுகளும் சரி பல்வேறு  வகையில் பின்பற்றுகின்றோம்,  இந்து  சமயத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு  பண்டிகைகளுக்கும்  பின்  ஒரு புராணகதை உண்டு, இதன்படி  இறவனை ஒளியை கொண்டு  வழிபடும் திருவிழாவில் பிரதானமாக  வருவது   தீபாவளி  பண்டிகை  ஆகும்.



பொதுவாக  தீபாவளி  என்பது பகவான் கிருஷ்ணன், நரகா சுரன் என்ற  அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான் இறக் கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதா ல், தீபாவளி என்னும் பண்டிகையை கொண் டாடுவதாக கூறப்படுகிறது  என்பது  அனை வரும்  அறிந்தது, எனினும் தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.







தீபாவளிஎன்றால் என்ன? 'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும் என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.


இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்ல ப்படுகிறது.இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது




அன்னை சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.



அனைவருக்கும்   இனிய  தீப ஒளி  திருநாள் வாழ்த்துகள்   

நன்றி 
ஆஸ்ட்ரோ கண்ணன்

1 comment:

  1. அருமை ஐயா... மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete