தாரா, தாரை போன்றவை நட்சத்திரத்தை குறிப்பவை, ஒருவர் பிறக்கும் பொழுது உடல், மனோ காரகன் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திரம் என்பதும், அந்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதுவே ஜென்ம ராசி என்பதும் பொதுவாக அனைவரும் அறிந்ததே. தாரா பலன் மூலம் ஒருவர் வேலை, வியாபாரம், தொழில் தொடக்கம், புதிய முயற்சிகள் போன்ற முக்கிய செயலை துவங்கும் நாளில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திர அடிப்படையில் சாதகமாக அல்லது பாதகமாக இருக்கிறது என்பதை அறியலாம். ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண் 1,2,3,4,5,6,7,8, 9 வரை உள்ள எங்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும். 1 – ஜென்ம தாரை – மனக்குழப்பம் தரும். 2 – சம்பத் தாரை – தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம். 3 -விபத் தாரை – தவிர்க்க வேண்டிய நாள். 4 – ஷேம தாரை – நன்மை தரக்கூடியது 5 – பிரத்யக் தாரை – வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல் தரும். 6 – சாதக தாரை – புதிய முயற்சி, செயல்களுக்கு சாதகமானது. 7 – வதை தாரை – கடுமையான தீமை தரக்கூடியது, 8 – மைத்ர தாரை – மைத்ரம் – புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றது. 9 – பரம மைத்ர தாரை – அதி நட்பு – அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள் உதாரணம் : ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி அன்றைய நட்சத்திரம் பூரம் என இருந்தால் அஸ்வினி முதல் பூரம் 11 நட்சத்திரம் 9ல் வகுக்க மீதி 2வரும், இது சம்பத் தாரை நன்மை தரும். இது போல கணக்கிடு பலன்களை அறிந்து செயல்களை துவங்கலாம். நன்றி ஆஸ்ட்ரோ கண்ணன் செல் : 9600553314
ஆதிகாலம் முதல் மனிதர்கள் இரவு உறக்கத்தில் வரும் கனவுகளை கொண்டு பலன்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர், கனவுகளை பொருத்தவரை அதில் வரும் காட்சிகள், நபர்கள், இடங்கள், செயல்கள் இவற்றின் அடிப்படையில் பலன்கள் அமையும். நவீன காலத்தில் கனவுகளுக்கு பலன்களா என்று கேட்பவர்கள் உண்டு, ஆனால் நடைமுறையில் இவர்கள் தான் முதலில் கனவு பலன்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுவர். நமது ஆழ்மனதில் என்ன உள்ளதோ அதுவே கனவாக வரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. உத . ஒருவருக்கு ஒன்றின் மேல் தீராத மோகம், ஆசை, காமம் போன்றவை இருக்கும் பொழுது நாகங்கள், (சர்ப்பம் ) அவர் கனவில் வரும். ஜாதக ரீதியாக ராகு, கேது திசா, புக்தி நடப்பவர்களுக்கு இது போல நாகங்கள் கனவில் தோன்றும் என்பது என்னுடைய கருத்து மற்றும் அனுபவமும் கூட. ஜாதகத்தில் 12ம் பாவகம் உறக்கத்தை குறிக்கும், இங்கு தீய கிரகங்கள் இருந்தால் உறங்கும் நேரம் குறைவாக இருக்கும், தீய கனவுகளும் அதிகம் வரும். பகலில் காணும் பலிக்காது, அவற்றிக்கு பலன் இல்லை என்றும் கூறப்படுகிறது. உறங்கிய உடனே கனவு கண்டால் ஓராண்டிலும், மூன்று மணி நேரங்களுக்கு பின் கண்ட கனவு 8 மாதங்களிலும், நள்ளிரவில் காணும் கனவு 3 மாதங்களிலும், அதிகாலை கனவு 1மாதத்திலும், காலை எழும் முன் காணும் கனவு உடனடியா கவும் பலிதமாகும். கனவுகள் சுப, அசுப கனவுகள் என உள்ளன, அசுப கனவு கண்டால் உடனே எழுந்து கடவுளை பிரார்த்தனை செய்வதும் வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் கனவில் என்ன என்ன தோன்றுகிறதோ அதன் (சுப, அசுப ) தன்மையை வைத்தே அதன் பலன்களை தீர்மானிக்கலாம். சில கனவுகளும் அதன் பலன்களையும் காண்போம்
1.விமானம், கப்பலில் பயணம், புதிய கட்டிடம் - பணி (வேலை ) மாற்றம். 2. வீடு கட்டுவது போல் கனவு -பிரிந்தவர்கள் ஒன்று சேர்தல். 3.சமையல் செய்தல் - மகிழ்ச்சியான செய்தி வருவது. 4.பறவைகள் - சூழ்நிலை மாற்றம் எற்படும். 5.சுடுகாடு,இடுகாடு - உடல் நலம் பாதிக்க போவதன் அறிகுறி 6.பாலத்தின் அடியில் நடப்பது போல் - கெடுதல், 7.பாலத்தின் மேல் நடப்பது போல் - வெற்றி மேல் வெற்றி 8.எறும்பு கூட்டம் கண்டால்- கவலைகள், தொல்லைகள் உருவாகும். 9.எருமை கடா,கரடி - கெடுதலின் அறிகுறி 10. வாகனம் ஓட்டுவது போல் கனவு - பொருளாதார மேன்மை 11.விபத்து நடப்பது போல் கனவு - போடும் திட்டங்கள் சிதறும். 12.நூல்கள் படிப்பது போல் கனவு - நல்ல எதிர்காலத்தின் அறிகுறி. 13.கடிகாரம் வாங்குவது - வியாபாரத்தில் லாபம். 14.கடைவீதியை கண்டால் - பொருளாதார மேன்மை. 15.பலுன் கனவில் - தேவையற்ற முயற்சி, நேர விரையம் ஏற்படும். 16.எலும்பு கண்டால் - தன வரவு,செல்வ செழிப்பு. 17. பசு, குழந்தைகள், - கவலைகள் அகலும், லாப செய்திகள் வரும். 18.முதலைகள் கண்டால் - எதிரிகள் உருவாவர்கள். 19.மருத்துவர் -நோய் ஏற்படுவதன் அறிகுறி. 20.கழுகு பறப்பது, மாலைகள், வெள்ளை பூக்கள் - லாப செய்தி வரும். 21.வானவில்,மீன் கனவில் வந்தால் -புதிய உறவுகள்,நற்செய்தி, மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி போன்ற பலன்கள் ஏற்படும்.
ஒருவரின் ஜாதகத்தில் அரசியலில் ஈடுபடும் அமைப்பு உள்ளதா ? மக்கள் செல்வாக்கு பெற்று தேர்தலில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளதா ? என்பதற்கான கிரக கிரக நிலைகளை காண்போம், பொதுவாக கால புருஷ தத்துவத்தில் கேந்திரங்கள் எனப்படும் 1,4,7,10 ம் பாவகங்கள் சர இலக்கினங்க ளில் வருவதாலும் , ராஜ கிரகங்கள் எனும் சூரியன், குரு, செவ்வாய் சர இலக்கினங்களில் உச்சம் பெறுவதும், இந்த இலக்கினதாருக்கு அரசியலில், அரசாங்கதில் செல்வாக்கு பெறும் அமைப்பு நன்றாக இருக்கும். கல்யாண வர்மர் சாரவளி நூலில் மேஷம், கடகம், துலாம், மகரம் இவற்றில் ஒன்று இலக்கினமாக அமைந்து சூரியன், குரு, செவ்வாய், சனி ஆகிய வற்றில் மூன்று கிரகங்கள் உச்சம், அல்லது ஆட்சி என்ற நிலை அரச யோகங்கள் ஏற்படும் என கூறியுள்ளார். அரச யோங்கள் என்பது மன்னராட்சி இருந்த காலத்திற்கும், இப்பொழுது உள்ள மக்களாட்சி காலத்திற்கும் மாறுபடும். அன்று நாடுகள் சிறு குறு நில பகுதிகளாக பலபல இருந்தன.அன்றைய நிலையில் மன்னர், அமைச்சர், தளபதி என்ற நிலை என்றால், இன்றைக்கு ஒரு நாட்டின் பிரதமர், முதல்வர், அமைச்சர், பிரதிநிதி, மக்களவை, மாநில உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர், மாநகர, நகர, சிறு நகர , கிராம, பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர் என்ற நிலையில் உள்ளது, கிரகங்கள் பெறும் வலு மற்றும் நடப்பு திசையை பொருத்து ஜாதகர் அடையும் பதிவிகள் அமையும். சூரியன் : அரசாங்கத்தை நிர்வகிக்கும் கிரகம்,அரசியலுக்கு மிக முக்கியமான கிரகம். சனி : மக்கள் சக்தியின் ஆதரவு. செவ்வாய் : செயலாற்றும் திறமை. புதன் : அறிவாற்றல் , திறமை தகுதி 6ம் பாவகம் : தேர்தல், போட்டிகளில் ஈடுபடும் வாய்ப்பு 9ம் பாவகம் : வாய்ப்பு அதிர்ஸ்டம் தரும் பாவகம் 10 ம் பாவகம் : தலைமை தங்கும் திறமை, தகுதி 11ம் பாவகம் : தேர்தல், போட்டிகளில் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கும். 1,6,9,10,11 ம் பாவகங்களுக்கு சூரியன்,குரு,சனி, செவ்வாய், புதன் கிரகங்கள் பெறும் சம்பந்தம், பெறும் வலிமையை பொருத்தும் அரசியலில் வாய்ப்பும், வெற்றியும் அமையும்.
சர இலக்கினமான கடகம் இலக்கின அதிபதி சந்திரன் 11ல் உச்சம், சந்திர கேந்திரத்தில் குரு கஜகேசரி யோகம், 5, 10 அதிபதி செவ்வாய் 7ல் உச்சம் ருசக யோகம் , 7,8 அதிபதி 4ல் உச்சம் சச மஹா யோகம் என ராஜ கிரகங்கள் வலிமையான அமைப்பு, 5 முறை முதல்வர் ஆனவர்.
இந்திய ஜோதிடம் - மேற்கத்திய ஜோதிடம் மேற்கத்திய ஜோதிடத்தில் ராசிகளிற்கும், கிரகங்களிற்கும், பாவகத்திற்கும் இந்திய முறையில் உள்ள பொதுபலன்களே பயன்படுத்தப்படுகிறது. 1. இந்திய ஜோதிடம் நிராயன முறையிலானது. மேற்கத்திய ஜோதிடம் சாயன முறையிலானது. 2. இந்தியா ஜோதிடத்தில் விம்சோத்தரி திசா, பஞ்ச்சோத்தரி திசா , அஸ்டோசோத்தரி திசா என 32 வகையான திசா புக்திகளை கொண்டது. மேற்கத்திய ஜோதிடத்தில் திசா புக்தி அமைப்பு இல்லை. அப்போதைய கோச்சார நிலையின் அடிப்படையில் பலன் காணப்படுகிறது. 3.இந்திய ஜோதிடத்தில் சூரியன் பாப கிரகமாகவும் சூரியன் முதல் கேது வரை 9 கிரகங்கள் மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளப் படுகிறது, மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியன் ஒரு சுப கிரகமாக எடுத்து கொள்ளப்படுகிறது, யுரானஸ் நெப்டியூன், புளுட்டோ போன்ற கிரகங்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது, 4.இந்திய ஜோதிடத்தில் சந்திரன் இருக்கும் ராசியே ஜாதகரின் ஜென்ம ராசியாக எடுத்து கொள்ளப் படுகிறது. மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியன் இருக்கும் ராசியே ஜாதகரின் ஜென்ம ராசியாக எடுத்து கொள்ளப் படுகிறது. ( அதாவது சூரியன் ஒரு ராசியில் இருக்கும் 1 மாதம் பிறக்கும் அனைவரும் அந்த ராசியினர் ) 5. இந்திய ஜோதிடத்தில் கிரகங்களுக்குரிய பார்வைகள் ( கிரகங்கள் அனைத்திற்கும் 7ம் பார்வை பொதுவானதாகவும் மற்றும் செவ்வாய் 4,8, சனி 3,10, குரு 5, 9 ) சிறப்பு பார்வை எடுத்து கொள்ளப்படுகிறது, மேற்கத்திய ஜோதிடத்தில் பலன் கூறும் முறையில் முதன்மை பங்கு வகிப்பது, கிரகங்களின் பார்வை முறையே ஆகும்,பார்வைகள் இணைவுபார்வை, திரிகோணம் பார்வை,கேந்திரம் பார்வை ஆகிய மூன்று நிலைகளில் எடுத்துக்கொள்ளப்படுகிறது .இவை கிரகங்கள் இருக்கும் பாகைகளின் அடிப்படையில் எடுத்து கொள்ளப்படுகிறது. திரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கும் மற்றொருகிரகத்திற்கும் இடைப்பட்ட தூரம் 60 பாகைகள், 120 பாகைகள் அளவு. கேந்திர பார்வை என்பது ஒரு கிரகத்திற்கும் மற்றொருகிரகத்திற்கும் இடைப்பட்ட தூரம் 90 பாகைகள், 180 பாகைகள் அளவு. கேந்திர பார்வை தீயதாகவும், திரிகோண பார்வை நல்லதாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது. எதிர்கால பலன்களை காண முன்னேற்ற ஜாதகம் (புரோக்கரசிவ்) கணித்து பலன்கள் கூறப்படுகிறது.