ஒருவரின் ஜாதகத்தில் அரசியலில் ஈடுபடும் அமைப்பு உள்ளதா ? மக்கள் செல்வாக்கு பெற்று தேர்தலில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளதா ? என்பதற்கான கிரக கிரக நிலைகளை காண்போம்,
பொதுவாக கால புருஷ தத்துவத்தில் கேந்திரங்கள் எனப்படும் 1,4,7,10 ம் பாவகங்கள் சர இலக்கினங்க ளில் வருவதாலும் , ராஜ கிரகங்கள் எனும் சூரியன், குரு, செவ்வாய் சர இலக்கினங்களில் உச்சம் பெறுவதும், இந்த இலக்கினதாருக்கு அரசியலில், அரசாங்கதில் செல்வாக்கு பெறும் அமைப்பு நன்றாக இருக்கும்.
கல்யாண வர்மர் சாரவளி நூலில் மேஷம், கடகம், துலாம், மகரம் இவற்றில் ஒன்று இலக்கினமாக அமைந்து சூரியன், குரு, செவ்வாய், சனி ஆகிய வற்றில் மூன்று கிரகங்கள் உச்சம், அல்லது ஆட்சி என்ற நிலை அரச யோகங்கள் ஏற்படும் என கூறியுள்ளார்.
அரச யோங்கள் என்பது மன்னராட்சி இருந்த காலத்திற்கும், இப்பொழுது உள்ள மக்களாட்சி காலத்திற்கும் மாறுபடும். அன்று நாடுகள் சிறு குறு நில பகுதிகளாக பலபல இருந்தன.அன்றைய நிலையில் மன்னர், அமைச்சர், தளபதி என்ற நிலை என்றால், இன்றைக்கு ஒரு நாட்டின் பிரதமர், முதல்வர், அமைச்சர், பிரதிநிதி, மக்களவை, மாநில உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர், மாநகர, நகர, சிறு நகர , கிராம, பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர் என்ற நிலையில் உள்ளது, கிரகங்கள் பெறும் வலு மற்றும் நடப்பு திசையை பொருத்து ஜாதகர் அடையும் பதிவிகள் அமையும்.
சூரியன் : அரசாங்கத்தை நிர்வகிக்கும் கிரகம்,அரசியலுக்கு மிக முக்கியமான கிரகம்.
சனி : மக்கள் சக்தியின் ஆதரவு.
செவ்வாய் : செயலாற்றும் திறமை.
புதன் : அறிவாற்றல் , திறமை தகுதி
6ம் பாவகம் : தேர்தல், போட்டிகளில் ஈடுபடும் வாய்ப்பு
9ம் பாவகம் : வாய்ப்பு அதிர்ஸ்டம் தரும் பாவகம்
10 ம் பாவகம் : தலைமை தங்கும் திறமை, தகுதி
11ம் பாவகம் : தேர்தல், போட்டிகளில் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கும்.
1,6,9,10,11 ம் பாவகங்களுக்கு சூரியன்,குரு,சனி, செவ்வாய், புதன் கிரகங்கள் பெறும் சம்பந்தம், பெறும் வலிமையை பொருத்தும் அரசியலில் வாய்ப்பும், வெற்றியும் அமையும்.
இலக்கின அதிபதி சந்திரன் 11ல் உச்சம், சந்திர கேந்திரத்தில் குரு கஜகேசரி யோகம், 5, 10 அதிபதி செவ்வாய் 7ல் உச்சம் ருசக யோகம் , 7,8 அதிபதி 4ல் உச்சம் சச மஹா யோகம் என ராஜ கிரகங்கள் வலிமையான அமைப்பு, 5 முறை முதல்வர் ஆனவர்.
No comments:
Post a Comment