Monday, 4 May 2015

இந்திய ஜோதிடம் - மேற்கத்திய ஜோதிடம் ஒப்பாய்வு ( ஒற்றுமை -வேறுபாடுகள் )

இந்திய  ஜோதிடம் -  மேற்கத்திய ஜோதிடம்

 மேற்கத்திய ஜோதிடத்தில்  ராசிகளிற்கும், கிரகங்களிற்கும்,  பாவகத்திற்கும்  இந்திய முறையில்  உள்ள  பொதுபலன்களே  பயன்படுத்தப்படுகிறது.




1. இந்திய ஜோதிடம்  நிராயன  முறையிலானது.  

மேற்கத்திய ஜோதிடம் சாயன முறையிலானது. 

2. இந்தியா ஜோதிடத்தில்  விம்சோத்தரி  திசா, பஞ்ச்சோத்தரி  திசா , அஸ்டோசோத்தரி  திசா  என  32 வகையான  திசா புக்திகளை  கொண்டது.


மேற்கத்திய ஜோதிடத்தில் திசா புக்தி   அமைப்பு  இல்லை.  அப்போதைய  கோச்சார நிலையின்  அடிப்படையில்  பலன்  காணப்படுகிறது.


3.இந்திய ஜோதிடத்தில்  சூரியன்  பாப  கிரகமாகவும்  சூரியன்  முதல் கேது வரை 9 கிரகங்கள் மட்டும்   கணக்கில்   எடுத்து  கொள்ளப் படுகிறது, 


மேற்கத்திய  ஜோதிடத்தில்  சூரியன்  ஒரு  சுப   கிரகமாக எடுத்து  கொள்ளப்படுகிறது, யுரானஸ்  நெப்டியூன், புளுட்டோ  போன்ற  கிரகங்களும்  கணக்கில்   எடுத்து  கொள்ளப்படுகிறது, 



4.இந்திய ஜோதிடத்தில் சந்திரன்  இருக்கும் ராசியே ஜாதகரின் ஜென்ம ராசியாக   எடுத்து  கொள்ளப் படுகிறது.


மேற்கத்திய  ஜோதிடத்தில்  சூரியன்  இருக்கும் ராசியே ஜாதகரின் ஜென்ம ராசியாக  எடுத்து  கொள்ளப் படுகிறது. ( அதாவது   சூரியன்   ஒரு ராசியில் இருக்கும்  1 மாதம்  பிறக்கும்  அனைவரும்  அந்த  ராசியினர் )



5.  இந்திய ஜோதிடத்தில் கிரகங்களுக்குரிய  பார்வைகள் ( கிரகங்கள் அனைத்திற்கும்  7ம்  பார்வை  பொதுவானதாகவும் மற்றும்  செவ்வாய் 4,8, சனி 3,10,  குரு 5, 9  ) சிறப்பு பார்வை  எடுத்து  கொள்ளப்படுகிறது, 


மேற்கத்திய  ஜோதிடத்தில்  பலன் கூறும்  முறையில் முதன்மை பங்கு வகிப்பது,   கிரகங்களின்  பார்வை முறையே ஆகும்,பார்வைகள் இணைவுபார்வை, திரிகோணம் பார்வை,கேந்திரம் பார்வை ஆகிய மூன்று  நிலைகளில் எடுத்துக்கொள்ளப்படுகிறது .இவை கிரகங்கள் இருக்கும்  பாகைகளின்  அடிப்படையில்  எடுத்து கொள்ளப்படுகிறது. திரிகோணம் என்பது  ஒரு கிரகத்திற்கும் மற்றொருகிரகத்திற்கும்  இடைப்பட்ட  தூரம் 60  பாகைகள், 120 பாகைகள் அளவு. 
கேந்திர  பார்வை என்பது ஒரு கிரகத்திற்கும் மற்றொருகிரகத்திற்கும்  இடைப்பட்ட  தூரம்  90  பாகைகள், 180 பாகைகள் அளவு. 
 கேந்திர  பார்வை தீயதாகவும், திரிகோண   பார்வை  நல்லதாகவும் எடுத்து  கொள்ளப்படுகிறது.

எதிர்கால பலன்களை காண முன்னேற்ற ஜாதகம் (புரோக்கரசிவ்) கணித்து பலன்கள் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment