Thursday, 13 August 2015

ஆடி அமாவாசை


ஜோதிட சாஸ்திரபடி பன்னிரண்டு ராசிகளை சூரியனும், சந்திரனும் சுற்றி வரும் போது இருவரும் ஒரே ராசியில் குறிப்பிட்ட பாகை கலை அளவில் சேர்ந்திருக்கும் பொழுது அமாவாசை ஏற்படுகின்றது, "அமவாஸ" என்ற வடமொழி சொல்லுக்கு ஒன்றாக இருத்தல் என்று பொருள், சூரியனும், சந்திரனும் ஒன்றாக இருப்பதை குறிக்கும் "அமவாஸ" என்னும் சொல் அமாவாசை என்றானது. 

ஜோதிடத்தில் சூரியன் ஆன்மா மற்றும் தந்தைக்கு காரகர் . சந்திரன் தாய் மற்றும் சரீரம், மனத்திற்கு காரகர். சூரியன் ( சிவன் ), சந்திரன் ( சக்தி ) ஐக்கியமாக இணைந்திருக்கும் இந்நாளில் மறைந்த தந்தை வழி , தாய் வழி முன்னோர்களை நினைத்து சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் ஆசி பெறலாம். குடும்பத்தில் தடைபட்ட காரியங்கள் நிறைவேறி நன்மைகள் பல பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில் தை, ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவை யாக இருக்கின்றன, அவற்றில் ஜோதிட ரீதியாக கடகத்தில் சூரியனுடன் ஆட்சி பெற்ற சந்திரன் இருக்க வரும் ஆடி அமாவாசை கடலில் நீராடி பிதுர் தர்ப்பணம், சிரார்த்தம் செய்து முன்னோர்களை வழிபாடு செய்வதற்கும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதற்கும் உகந்த நாள். 

ஆடி 29 ம் தேதி 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆடி அமாவசை 

பாவங்கள் போக்கும் பிதுர்வழிபாட்டுக்குரிய தலமாக ராமேஸ்வரத்தில் மற்றும் வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு, திருச்சி, காவேரி நதிக்கரை போன்ற சிவன்  திருக்கோவில் அருகில் இருக்கும் நீர் நிலைகளில் ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது சிறப்பு. 

No comments:

Post a Comment