இந்த மன்மத ஆண்டு மகாமக ஆண்டாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் 22-2-2016 திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
ஆன்மீக புராண வரலாற்றையும், ஜோதிட ரீதியான காரணங்களை, தகவல்களை பார்ப்போம்.
புராண வரலாறு
பிரளய காலத்தில் உலகம் அழியும் நேரம் வந்தபோது, பிரம்மன் தனது படைப்பு ஆற்றல் எல்லாவற்றையும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்துவிட்டார். கும்பகோணம் பிரளய காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம், நீரில் மிதந்து சென்று பின் பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமான், தரை தட்டிய கும்பத்தின் மீது அம்பைச் செலுத்த, கும்பம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார்.
நவநதிகளின் பாவம் தீர்த்த மகாமக குளம்
நவநதிகளும் கன்னிகைகள் உருவம் கொண்டு சிவபெருமானிடம் சென்று, "மக்கள் எங்கள் நீரில் மூழ்கி தங்களது பாவங்களைப் போக்கிக்கொள்கிறார்கள். அதனால் எங்களிடம் பாவங்கள் சேர்ந்து துன்புறுகிறோம்" என்று முறையிட, அதற்கு சிவபெருமான், "கும்பகோணம் மகாமகக் குளத்தில் மகாமக தினத்தன்று நீராடி உங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்." என்று கூறியதோடு இந்திராதி தேவதைகளுடன் தாமும் பார்வதியுடன் தரிசனம் தருவதாகக் கூறினார். அதன்படி நவகன்னிகைகளும் மகாமகக் குளத்தில் நீராடி தங்களது பாவங்களைப் போக்கிக்கொண்டனர்.
12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இங்குள்ள திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி உள்ளிட்ட நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது.
ஜோதிட ரீதியாக
குரு பகவான் மேஷம முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் பொழுது கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி போன்றவற்றில் ஒரு நதி புனித தன்மை அடைவதாகவும், அந்த ஆண்டில் அந்த நதியில் நீராடுவது சிறப்பு என்றும் கருதப்படுகிறது.
சிம்ம ராசியில் குரு பகவான் இருக்க, உடன் சந்திரன் மக நட்சத்திரத்தில் அங்கு இருக்க, கும்ப ராசியில் சூரியன் இருக்கும் கும்ப மாதம் எனும் மாசி மாதத்தில் வருவது மகாமகம் ஆகும்.
அதாவது சூரியன், பூமி, சந்திரன், குரு, மகம் நட்சத்திரம் ஆகிய 5ம் ஒரே நேர் கோட்டில் வரும் காலமே மகாமகம் ஆகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நிகழ்வாகும்.
மகாமகம் அன்று சூரிய உதயத்தில் நதி, குளம், ஆறு, கடல் நீராடல் மிகவும் நன்று. ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும், முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதும் மிகவும் சிறந்த பலன்களை தரும். கும்பகோணம் செல்ல இயலாதவர்கள் மாசிமாதத்தில் ஏதேனும் ஒருநாளில் மகாமகம் குளித்தில் நீராடல் நன்று
"ஜோதிட ரத்னா "
ஆஸ்ட்ரோ கண்ணன்
பரம்பரை ஜோதிடர்
9600553314
Email : astrorkannan@gmail.com
No comments:
Post a Comment