Tuesday, 5 August 2014

மிஹிரர் வராஹமிஹிரர் ஆன கதை


மிஹிரர் வராஹமிஹிரர் ஆன கதை 

விக்ரமாதித்தன் அரசவையில் பல ஜோதிடர்கள் இருந்தனர் .அவர்களுள் மிஹிரர் மிகவும் புகழ் பெற்றவராக இருந்தார்.விக்கிரமாதித்தியனுடைய மகனுக்கு மிஹிரரும் பிற ஜோதிடரும் ஜாதகம் கணித்தனர் . மிஹிரரை தவிர மற்ற ஜோதிடர்கள்அனைவரும் இளவரசனுக்கு பதினெட்டு வயதில் கண்டம்இருப்பதாக உயிருக்கு ஆபத்து என்று கூறினர். .எவ்வகையான ஆபத்து என்று கூறியதில் அவர்களிடையேகருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் மிஹிரர் குறிப்பிட்டநாளில் , குறிப்பிட்டநேரத்தில் ஆண் காட்டுப் பன்றியினால்இளவரசன் கொல்லப்படுவான் என்று கூறினார்.இளவரசன் நல்ல உடல் நலத்துடன் வளர்ந்து வந்தார். அந்தகுறிப்பிட்ட ஆண்டின் சில மாதங்களுக்கு முன்பிருந்தே இளவரசனுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மிகிரர் குறிப்பிட்ட நாளன்று காலையில் அரசர் அவையைக் கூட்டினர். அப்பொழுது அரசர் மிஹிரரிடம் அவருடைய கணக்கீட்டை மீண்டும் சரிபார்த்து கூறும்படி கூறினார். அவரும் முன்னரே முன்னறிவிப்பு செய்திருந்த இன்றைய நாள் மாலை 4 மணிக்கு இளவரசனுடைய உயிர் போகும் என்று தாம் கூறிய பலனை உறுதிபடுத்தி கூறினார்.அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க பட்டிருந்ததால் இந்நிகழ்ச்சி நடைபெ வாய்ப்பில்லை
என அனைவரும் நம்பினர் . இளவரசன் தங்கிருந்த அரண்மனை வீரர்களால் சூழப்பட்டிருந்தது, இளவரசர் ஏழாவது மாடியில் அமர்த்தப்பட்டிருந்தார். அரசர் தம் மகன் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதாக நம்பினார். நேரமோ நெருங்கி கொண்டிருந்தது.மிகிரர் கூறியபடி நடந்து விட்டால் அவருக்கு வராகர் பட்டம் தருவதாக அரசர் அறிவித்திருந்தார். வீரர்கள் இளவரசனை
அடிக்கடி சென்று பார்த்து வந்தனர்.ஐந்து  மணியளவில் இளவரசனை சென்று பார்த்து வந்த வீரர்கள் இளவரசர் உயிரோடுடிருப்பதாக அரசரிடம் கூறினர். மிஹிரர், இளவரசர் அறிவிக்கப்பட்டது
போல் இறந்து கிடக்கிறார் என்று கூறுகிறார். உடனே அரசரும்,அமைச்சரும் விரைந்து சென்று   இளவரசரை பார்க்க இளவரசர் மாண்டு கிடந்தார். ஒரே இடத்தில் இருக்க பிடிக்காமல் பொறுமை
இழந்த இளவரசன் நடமாடி கொண்டிருந்த போது அக்குறிப்பிட்ட நேரத்தில் வேகமாக அடித்த காற்றினால் அவ்வறையில் இருந்த காட்டுப் பன்றியின் சிலை அவர் மேல் விழுந்ததனால் இரத்த
வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார் என்பதை அரசர் உணர்கிறார்.ஆண் காட்டுப் பன்றியால் இறப்பார் என்ற ஜோதிட செய்தி உண்மையாக்கப்பட ஒரு வகைக் காட்டுப் பன்றி என்ற பொருளுடைய வராகன் என்பது மிஹிரர் பெயருடன் சேர்க்கப்பட்டு வராகமிஹிரர் என்றழைக்கப்பட்டார்.
- ஜோதிட இயல்

No comments:

Post a Comment