Friday, 15 August 2014

ஒவ்வொரு பாவகமும் பல்வேறு காரகங்களைதன்னுள் கொண்டுள்ளது.



ஒரு ஜாதகத்தில் ஒரு பாவக (உப பாவக ) காரக முலம் கிடைக்கும்
நன்மையை ஜாதகர் முழுவதும் பெற முடியாத நிலை  எப்பொழுது ஏற்படுகிறது ?

பாவகம் + பாவகாதிபதி + காரகன் மூன்றும் பாதிப்படும் பொழுது தான் இந்த நிலை ஏற்படுகிறது.


1.பாவகம் (பாவகத்தில் இயற்கை அல்லது, இலக்கின பாவிகள் இருப்பது, பார்ப்பது, பாவகம் பாப கத்தரி பெறுவது, )


2. பாவகாதிபதி (பகை., நீசம் , அஸ்தமனம், பாப கிரக பார்வை சேர்க்கை , கிரக யுத்தத்தில் தோல்வி பெறுவது, )


3. காரகன் (பகை., நீசம் , அஸ்தமனம், பாப கிரக பார்வை சேர்க்கை , கிரக யுத்தத்தில் தோல்வி பெறுவது, )


உ.தா 7ம் பாவகமும், 7ம் பாவக அதிபதியும், 7 ம் பாவக காரகன் சுக்கிரனும் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் 7ம் பாவக காரகமான களத்திரம் (கணவன், மனனவி ) அமையா நிலையம், திருமணம்
நடந்தாலும் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலையம், பிரிவும் ஏற்படுகிறது.


உ.தா 4ம் பாவகம் தன்னுள் கொண்டுள்ள காரகங்கள்


1.தாயார், 2. நிலம், 3.வீடு , 4.வாகனம் , 5.கல்வி
இவற்றில் 4ம் பாவகம் + 4ம் பாவகாதிபதி+ காரகர் : சந்திரன் என மூன்றும் பாதிக்கப்பட்டால் மட்டுமே ஜாதகர் தாயார் மூலம்   நன்மையை அடைய முடியாத நிலை ஏற்படும்

4 ம் பாவகத்தின் மற்ற காரகங்க்களான நிலம் காரகர் : செவ்வாய் / வீடு , காரகர் : சுக்கிரன் வாகனம் காரகர் : சுக்கிரன் /  கல்வி : புதன் இந்நிலையில் பாதிக்கபடும் பொழுது நன்மையை அடைய முடியாத நிலை ஏற்படும் இவற்றில் மூன்றில் ஒன்று இரண்டு பாதிப்பட்டால் அதற்கு தகுந்தாற்போல் நன்மை அடையும் அளவீடுகள்
மாற்றம் அடையலாம்.

மற்ற பாவகங்கள்

பாவகம் - உப பாவகம் - காரகர்

1ம் பாவகம் - இலக்கினம் - சூரியன்
2ம் பாவகம் - தனம் -குரு
2ம் பாவகம் - வாக்கு - புதன்
3ம் பாவகம் - சகோதரம் -செவ்வாய்
5ம் பாவகம் - புத்திரம் - குரு
6ம் பாவகம் - கடன் - செவ்வாய்
6ம் பாவகம் - நோய் - சனி
8ம் பாவகம் -ஆயுள் - சனி
9ம் பாவகம் -தந்தை - சூரியன்
9ம் பாவகம் - தர்மம் - குரு
10 பாவகம் - தொழில் - சனி
11 பாவகம் - லாபம் - குரு
12 பாவகம் - விரையம்   - சனி
12 பாவகம் - மோக்ஷம் - குரு


No comments:

Post a Comment