Sunday, 21 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 மீனம்


மீனம் 
உங்கள்  ராசிஅதிபதி  மற்றும்  10 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 6 ல் பெயர்ச்சியாகிறார். 

இதுவரை   5ல் இருந்த குரு பொருளாதார மேன்மை,  குடும்பத்தில் சுப  நிகழ்ச்சி  போன்ற  நன்மையான  பலன்களை  அதிகம் வழங்கியிருப்பார்.

இனி   6 ல்  உடல்,  மன ரீதியான சோர்வு,புதிய முயற்சிகளில் தடை, தாமதம்  ஏற்படும்.  உடல் நலன்,  போக்குவரத்தில் கவனம் தேவை,

கடன்களும்,  மருத்துவ செலவும் அதிகரிக்க வாய்ப்புண்டு,வேலையில் சிறு சிறு  பிரச்சனைகள் ஏற்பட்டு  மறையும்.

பிறருக்காக   ஜாமீன்,  வாக்குறுதி  கொடுப்பது, வழக்கு போன்ற வற்றால்  பிரச்சனைகள்  ஏற்படலாம்,  கவனம் தேவை.  

தொழில், வேலை தொடர்பான பயனங்கள்  அதிகம் ஏற்படும். தொழில் போட்டியாளர்கள்,  மறைமுக  எதிரிகளால்  சில பிரச்சனைகளை சந்திக்க நேரும். 

குடும்ப ஒற்றுமையில் பாதிப்பில்லை, குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே  விவாதங்களை தவிர்ப்பது  நலம்.  

குரு  6ல்  மறைந்தாலும்  அவரின் பார்வை  10ல்  தொழில்,வேலையை பொருந்தவரை  உழைப்பு அதிகரிக்கும், முன்னேற்றமான காலமே,   தொழில், வியாபாரம்   தொடர்பான  கடன்கள்  எளிதில் கிடைக்கும். 
குரு  ராசிக்கு  2, 10, 12  ஆம்  இடங்களை  பார்க்கிறார் 
தேவைக்கேற்ற  பண வரவும் ,தொழில்  மேன்மை   உண்டு,  சுப செலவுகள்  அதிகரிக்கும், வெளிநாடு  தொடர்பு  வியாபாரம், வர்த்தகங்களில்  லாபம்.

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து   நன்மையான  பலன்கள்  அதிகம்  நடைபெறும்.

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும் சில  சாதகமான பலன்கள்  நடைபெறும்.

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும்.  சிவன்  வழிபாடு   செய்வதும் சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 
பரம்பரை ஜோதிடர் 
9600553314 
Email : astrorkannan@gmail.com

Saturday, 20 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 கும்பம்


கும்பம் 
உங்கள்  ராசிக்கு  2  மற்றும்  11 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 7 ல் பெயர்ச்சியாகிறார். 

இதுவரை  தொழில்,வியாபாரத்தில்  கடன், வீன்  விரையம், பிரச்சனைகள்,  காரிய தாமதம் போன்ற  பலன்களே  அதிகம் ஏற்படிருக்கும்.

இனி   7ல்  வரும்  குருவின் பார்வை  உங்கள் ராசிக்கு  கிடைப்பதால்,  உங்கள்  முயற்சிகள், செயல்களில்  வெற்றி கிடைக்கும். உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு, சொல்வாக்கு  கூடும்

குறிப்பாக  பொருளாதார  நிலை நன்றாக இருக்கும்,  வர  வேண்டிய பாக்கி  தொகைகள்  கைவந்து  சேரும், தொழில்,வியாபரத்தில் மேன்மை  அடைவீர்கள்,   மன மகிழ்ச்சி, உற்சாகம்  பெறுவீர்கள், சிலருக்கு  வேலையில்   ஊதிய  உயர்வும்,விரும்பிய  இடமாற்றமும் கிடைக்கும். 

தொழில்,வியாபாரம், விரிவாக்கம்,  புது கிளை ,உப தொழில்  முயற்சி  கைக்கூடும். நீண்ட  நாள், திட்டங்கள், எண்ணங்கள்  செயலாகும்  நேரமிது. 

கடந்த காலத்தில் ஏற்பட்ட அவப்பெயர்  நீங்கும், மறைமுக எதிரிகள், போட்டியாளர்கள்  ஒதுங்குவார்கள்,  

கணவன் - மனைவி  உறவு  நன்றாக  இருக்கும், குடும்பத்தில் திருமணம்  போன்ற  சுப காரியங்கள்   நடைபெறும்,  ஆடை,  ஆபரண ங்கள் முக்கிய பொருட்கள்  வாங்குதல்,  திருமணம்  ஆகாதவர்களுக்கு திருமணம் நடை பெறுவதற்கும், குழந்தை தாமதம் ஆனவர்களுக்கு  குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் சாதகமான காலம். 

அரசியல்,  பொதுசேவையில்  உள்ளவர்களுக்கு   மக்களிடம் செல்வாக்கு  அதிகரிக்கும்,  

குரு  ராசி  3, 11  இடங்களை  பார்வை செய்கிறார்,  மன சோர்வு  நீங்கி, உற்சாகமும்,  மகிழ்ச்சியும்  உருவாகும்,  சகோதர்களால் நன்மையை யும்,  முயற்சிகளில்  வெற்றியும்,  அதிர்ஸடமும் உண்டு. 

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால்   நன்மையான பலன்கள்  அதிகம்  நடைபெறும்.

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும் காலம்  கடன்,  பணி சுமை, வழக்கு  பிரச்சனைகள் ஏற்பட  வாய்ப்புண்டு  கவனம் தேவை 

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். சனிக்கிழமை  பெருமாள், காவல் தெய்வங்கள்  வழிபாடும்,  வயதானோர்,  மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு  இயன்ற உதவிகள்  செய்வதும் சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 
பரம்பரை ஜோதிடர் 
9600553314 
Email : astrorkannan@gmail.com

Thursday, 18 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015- 2016-மகரம்




மகரம் 
உங்கள்  ராசிக்கு  3  மற்றும்  12 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 8 ல் பெயர்ச்சியாகிறார். 

இதுவரை  7ல் உச்சம்  பெற்ற குரு  தொழில், வியாபாரம்,  வீ டு, நிலம் போன்றவற்றின்  மூலம் நன்மையான   பலன்களையும், சுப செலவுகளையும்  தந்திருப்பார். 

இனி   அஷ்டம குரு காலம்  சில சாதகமற்ற  பலன்கள்  நடைபெறும், குடும்பத்தில் மருத்துவ செலவுகள்   அதிகரிக்கும்,  நண்பர்கள், உறவி னர்களால்  சில  பிரச்சனைகள்  ஏற்படலாம், வீண் விவாதங்களை  தவிர்ப்பது  நலம்.

வாகன போக்குவரத்து,   உடல்  நலனில் அக்கறை கொள்வது அவசியம், சிலருக்கு  தொழில், வியாபாரம், வேலையில்  இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு, போட்டியாளர்களும் உருவவார்கள்,  

கோர்ட், வழக்கு விவகாரங்களில் சாதகமற்ற நிலை  இருக்கும்,  மற்றவர்களுக்காக   ஜாமீன் கொடுப்பதும்,  வாக்குறுதிகளை   கொடுப்பதும்  அவபெயரை  உருவாக்கும்.

தொழில்  ரீதியாக  கூட்டு  சேர்தல்,   பண பரிவர்த்தனை,  பங்கு பிரித்தல்  போன்றவற்றில் ஏமாற்றம்  வரலாம்,   கவனம்  தேவை. நீண்ட நாட்கள்  விற்காமல் இருந்த நிலம் , வீடு   போன்ற  சொத்துகள் விற்பனையாகும். 

உங்கள்  ராசிக்கு  11ல்  சனி பகவான் இருப்பதால்  சில தடை, தாமதங்களுக்கு  பிறகு  முயற்சிகளில்    வெற்றி கிடைக்கும்.  திடீர்  பண வரவிற்கும்  வாய்ப்பு  உண்டு.

குரு  ராசிக்கு  2, 4, 12  இடங்களை  பார்வை செய்கிறார், தேவைகேற்ற பணவரவு  உண்டு, வீடு, நிலம், வாகனம்  போன்றவற்றின் மூலம் கடன் கிடைக்கும்.  வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். 

கவனமுடன்  செயல்பட்டால் கலங்க தேவையில்லை 

உங்கள் பிறந்த ஜாதகத்தில்  குரு   நல்ல  நிலையில் இருந்தாலும், நல்ல திசா, புத்தி  நடைபெற்றாலும்,  தீமைகள்  குறைந்து  நன்மையான பலன்கள்  அதிகம்  நடைபெறும்.

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும் காலம் சில சாதகமான பலன்கள்  நடைபெறும்

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். சனிக்கிழமை  பெருமாள், காவல் தெய்வங்கள் வழிபாடும்,  வயதானோர்,  மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு  இயன்ற உதவிகள் செய்வதும் சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 
பரம்பரை ஜோதிடர் 
9600553314 
Email : astrorkannan@gmail.com
 திருப்பூர்.

Tuesday, 16 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 தனுசு




தனுசு   
உங்கள் ராசி  மற்றும்  4 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 9  ல்   பெயர்ச்சியாகிறார். 

அவருக்கென்ன   " 9ல்   குரு "  என்ற வார்த்தை   பெரும்பாலோருக்கு தெரிந்த  வெகு  பிரபலமாக  வார்த்தையாக   உள்ளது.  

ஒருவர்  ஜாதகத்தில்  தெய்வ   பலம்  பொருந்திய   9ல்  குரு  இருப்பது சிறப்பு,  மேலும்    அவரின்  பார்வைகள்   சுப  ஸ்தனங்களான 1, 5 திரிகோனங்களில் படும்,  ( குரு இயற்கை சுப கிரகம் தான்  எனினும்   எல்லா  இலக்கினங்களுக்கும்  சுபரல்ல,  ஆதிபத்திய ரீதியாக  சில லக்கினங்களுக்கு  அசுபராகவும்  உள்ளார். ) ஒருவர்  ஜாதகத்தில்  1,5,9  பாவங்கள் பெறும் வலுவே  அவர்  இப்பிறவியில்  எத்ததைய  பலன்களை பெறுவார் என்பதனை  அறியாலம், இந்த  வீடுகளும், அதிபதிகளும்  வலிமை பெற  ஜாதகர்  எத்தகைய   பிரச்சனைகளையும்  தெய்வ  அருளால் சமாளித்து   வெற்றி காண்பார்.

கோச்சரத்தில்  குரு  9ல்  வந்தாலும் அந்த ஓராண்டு இத்தகைய  நற்பலன்கள்  நடைபெறும்,

கடந்த  ஓராண்டு   ராசி அதிபதியாக   உச்சம் பெற்றாலும்  அஷ்டம குரு என்பதால்  அவதிகளும்,  சிரமங்களும்  ஏற்பட்டது.

இனி   ஏழரை  சனி  காலத்தில்  விரைய சனி காலம்  நடந்து கொண்டிருந்தாலும்   பாக்கிய ஸ்தானம்  எனும் 9ம்  இடத்திற்கு  வரும் குரு  பல  சாதகமான  பலன்களை  வழங்குவார்.

நீண்ட நாள் பிரச்சனைகள்  சுமூகமான  முடிவிற்கு வரும், வீன்  செலவுகள்  குறைந்து  சுப  செலவுகள்  அதிகம்  ஏற்படும்,திருமணம்  ஆகாதவர்களுக்கு   திருமணம்  நடைபெறுவதற்கும்,
குழந்தை  தாமதம்  ஆனவர்களுக்கு   குழந்தை பாக்கியம்  கிடைப்பதற்கும்  சாதகமான   காலம்.  

உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு, சொல்வாக்கு உயரும்,  அதிஷ்டமான சில  நிகழ்ச்சிகள் நடைபெறும்.  கணவன் - மனைவி , குடும்ப ஒற்றுமை  நன்றாக இருக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு  வேலை கிடைக்கும்,  சிலருக்கு வேலையில்  ஊதிய  உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். 

தொழில்,வியாபாரம் , கூட்டு தொழில்  நன்றாக  இருக்கும்.
 தொழில், வேலை  தொடர்பாக   வெளிநாடு  செல்லும்  முயற்சியில்  உள்ளோருக்கு வெற்றி  கிடைக்கும்.  

அரசியல்,சமூக  பணிகளில்  இருப்போருக்கு  மக்களிடம்  செல்வாக்கு அதிகரிக்கும், பதவி,  பட்டங்கள்  பெறுவார்கள்.   

குரு,  மஹான்கள், ஞானிகள்   சந்திப்பும்,  ஆசியும்  கிடைக்கும்.

குரு  ஜென்ம ராசி, 3, 5  இடங்களை  பார்வை செய்கிறார், மனமகிழ்ச்சியும்,  உற்சாகமும் இருக்கும்,  சகோதர்களுடன்    , ஒற்றுமை ஏற்படும், முயற்சிகளில்  வேகம்  கூடும், வெற்றி கிட்டும்.குடும்பத்துடன்   குல தெய்வ  கோவில்  சென்று  வழிபடுவீர்கள்.  


2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும் காலம்  காரியங்களில் தாமதம்,  தொழிலில்   மந்த நிலை,  வீன் செலவுகள்  ஏற்படலாம், கவனம் தேவை.

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். செவ்வாய்க்கிழமை திருசெந்தூர்   சென்று  முருகன்  வழிபாடு செய்வதும் சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 
பரம்பரை ஜோதிடர் 
9600553314 
நெ.10. முத்து நகர்  2வது  வீதி,
கொங்கு மெயின்  ரோடு , திருப்பூர்- 641607.

Sunday, 14 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 - விருச்சிகம்


 விருச்சிகம் 
உங்கள் ராசிக்கு 2 , 5 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 10 ல்   பெயர்ச்சியாகிறார். 

இது வரை இருந்தது மிக சிறந்த இடம், ஆனால்   வரவிருக்கும்  10 இடம் குருவிற்கு உகந்த இடம் அல்ல.

தொழில்,வேலையில்  மந்த நிலை,  இழப்பு,   இடமாற்றம்,  உழைப்பு அதிகம் - ஊதியம் குறைவு,  மறைமுக  எதிர்ப்பு   சாதகமற்ற பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

வேலையில் இருப்பவர்கள்   உடன் பணி  புரிவோர்,  நிர்வாகம், அதிகாரிகளால்  பிரச்சனைகளை  சந்திக்க  கூடும்,   இடமாறுதல் குறித்த  யோசனையை  மற்றி  கொள்வதும் , இருக்கும் வேலையை   விடாமல்  இருப்பதும் நல்லது.

சிலருக்கு குடும்பத்தினை பிரிந்திருக்கும்  நிலை ஏற்படும்,  வெளிநாடு, வெளியூர்  வேலை இதற்கு காரணமாக அமையும்.  

பொருளாதார  பின்னடைவு,  பண தட்டுப்பாடு  உடல், மன ரீதியான சோர்வும்,  மருத்துவ செலவும் அதிகரிக்கும்.  

வீண் பழி, அவமானம்   போன்றவைகளால்  பொதுசேவை, அரசியலில் இருப்போருக்கு  சில பின்னடைவுகள்  ஏற்படும்.  

புதிய திட்டங்கள்,முயற்சிகளை  நன்கு ஆலோசித்து  செய்ய வேண்டும்.  வழக்கு, போட்டிகளில்  எதிரிகளின் கை ஓங்கியிருக்கும். நண்பர்கள், உறவினர்கள், சகோதர்களிடம்  விவாதங்களை  தவிர்ப்பது நலம்.

குரு   ராசிக்கு  2, 4, 6  இடங்களை  பார்வை  செய்கிறார், அடிப்படை தேவைக்கான  பண   வரவு உண்டு, வாக்கு வன்மை கூடும். வீடு,நிலம்,வாகனம்  போன்றவற்றின்  பெயரில்  கடன்  கிடைக்கும்.

ஜனவரி  2016  வரை  பொறுமையும், நிதானமும் கொண்டு  கடந்திட பின் கலங்க  வேண்டியதில்லை.  உங்கள்  பிறந்த ஜாதகத்தில்  நல்ல திசா புக்தி  நடைபெற்றால்   தீமைகள்  குறைந்து  நன்மையான  பலன்கள்  நடைபெறும்.

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும் காலம்  தன  வரவு,   தொழில், வியாபரத்தில்  மேன்மை  போன்ற  சாதகமான  பலன்கள் நடைபெறும்.

ஏழரை  சனி  காலத்தின்  பாத, ஜென்ம சனி  காலம்   நடந்து கொண்டிருக்க ,  குருவும்  சாதகமற்ற  நிலையில் இருப்பதால் குலதெய்வ  வழிபாடு,  வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். செவ்வாய்க்கிழமை திருசெந்தூர்   சென்று  முருகன்  வழிபாடு செய்வதும் சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 
பரம்பரை ஜோதிடர் 
9600553314 
நெ.10. முத்து நகர்  2வது  வீதி,
கொங்கு மெயின்  ரோடு , திருப்பூர்- 641607.

Saturday, 13 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 - கன்னி

கன்னி 
உங்கள் ராசிக்கு 4 , 7 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 12 ல்   பெயர்ச்சியாகிறார். (விரைய குரு )

இது வரை 11ல்  உச்சம் பெற்ற குருவால் நல்ல தனவரவு,  லாபம், காரிய வெற்றி,  மனைவி வழி உறவினர்களால்  ஆதாயம்  என   பல நன்மைகளை   அடைந்திருப்பீர்கள்.   ஆனால்  இனி வரும் ஓராண்டு சற்று சாதகமற்ற பலன்களே 

அசதியும், சோம்பலும், மருத்துவ  செலவுகளும்   அதிகமாகும், பிறருக்கு  வாக்குறுதிகள்  கொடுப்பதில்  கவனம்  தேவை , வெளிநாடு செல்லும்  முயற்சி  உடையோர்களுக்கு   வாய்ப்பு  கிடைக்கும், அந்நிய  மொழி ,  சமயத்தினரால்  சில  உதவிகளும், நன்மையையும் நடைபெறும்.   நண்பர்கள், உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க  நேரும்.   தற்பொழுது வேலையில் இடமாற்றத்தை  விரும்பினாலும்,  புதிய  இடம்  திருப்திகரமாக இருக்காது 

தொழிலில்   மந்த நிலையும் , மனக்குழப்பம், கவன குறைவு வேலையில்   பளு அதிகரிக்கும்,    புதிய திட்டங்களை தொடங்குவதில் தாமதம் ஏற்படும். புதிய நண்பர்கள், தொழில் பங்குதாரர்களிடம் கவனமாக  இருப்பது  நலம்.   வீண் விவாதங்களையும்  தவிர்க்கலாம்.

குரு   ராசிக்கு  4, 6, 8  இடங்களை  பார்வை  செய்கிறார், வீடு, நிலம், வாகனம் போன்றவற்றிற்கான  வாங்கி கடன்கள்   கிடைக்கும். சிலருக்கு அசையா சொத்துகள்  எனும்  நிலம், வீடு, தோட்டம் போன்றவற்றை  அடமானம்  வைக்கும்  நிலையும், விற்கும் நிலையும், ஏற்படும்.

வரவை  விட  செலவு அதிகரிக்கும். செலவுகளை   சுப  செலவுகளாக மாற்ற முயற்சிக்கலாம்.  எனினும் சனி  பகவான் உங்கள் ராசிக்கு சாதகமான இடத்தில் இருப்பதால்  தேவைக்கேற்ற்  பண வரவும், முயற்சிகள் சிறிய தாமதத்திற்கு பிறகு  செயலாகும்.  இன்சுரன்ஸ் பாலிசி, மெடிக்கல் பாலிசி,    போன்றவற்றின்   மூலம்  பண வரவு உண்டு. 

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும் காலம்  தன வரவு, முன்னேற்றமான பலன்கள் நடைபெறும் 

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். புதன்கிமை பெருமாள் வழிபாடு செய்வதும்,  உடல் உனமுற்றோர்களுக்கு  இயன்ற உதவிகளை செய்வதும்   சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 - துலாம்


துலாம் 
உங்கள் ராசிக்கு 3 , 6 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 11 ல்   பெயர்ச்சியாகிறார். 

இது மிகவும் சிறந்த இடம் ஆகும்,  இது வரை இருந்த தொழில் போட்டி, மந்த நிலை,  வேலையில்  இடையூறு,  பண தட்டுப்பாடு, காரிய தாமதம் போன்றவை  நீங்கும்.

ஏழரை  சனி  காலத்தின்  பாத, குடும்ப சனி  எனும்  நிலையில் இருந்தாலும்  கூட  குருவின்  சாதகமான  பலன்களால்  நன்மைகள் அதிகம்  நடைபெறும்.

தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெரும்,  பண புழக்கம் நன்றாக இருக்கும்,  வர வேண்டிய பாக்கி தொகைகள் வந்து சேரும், உத்தி  யோகத்தில்  பதவி உயர்வு, சம்பள  உயர்வு   கிடைக்கும்.

புதிய முயற்சிகளால்  தொழில்  தொடர்பான ஒப்பந்தம், விரிவு செய்தல்,  உப தொழில் போன்றவை  அமையும்.   வெளிநாடு தொடர்பு வகை தொழில், வியாபாரம்,வர்த்தகம்  போன்றவற்றின் மூலம் லாபம் கிடைக்கும்,  

திருமண   முயற்சியில்  இருப்போருக்கு திருமணம்  ஆகும்,  குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை  பாக்கியம் கிட்டும்.  புதியதாக  வேலை தேடுவோருக்கும், வேலையில்  இடமாற்றம் எதிர்பர்போருக்கும்
சாதகமான பலன்கள் கிடைக்கும்.  நீண்ட நாள்  ஆசைகள், எண்ணங்கள்  நிறைவேறும்.

சிலருக்கு  நீண்ட  நாள்   நடைபெறும் வழக்கு,  வியாஜ்யங்களில்  வெற்றி கிடைக்கும். பொதுசேவை ,அரசியலில் இருப்பவர்களுக்கு  மக்களிடம்  செல்வாக்கு  அதிகரிக்கும்.  

குரு   ராசிக்கு  3, 5, 7  இடங்களை  பார்வை  செய்கிறார்,  சகோதரர்களால்   நன்மைகள்  கிடைக்கும்,  பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவர்,  குல தெய்வ வழிபாடு  சென்று வரவும்,   சிலருக்கு பூர்வீக  நிலம், வீடு  தொடர்பான  பிரச்சனைகள்   நல்ல முடிவிற்க்கு  வரும், கணவன், மனைவி வழி உறவினர்களின்  அதரவு  கிடைக்கும்,  கூட்டு தொழில் லாபம் தரும்.  

இதனுடன் தற்பொழுது  உங்கள் பிறந்த ஜாதகத்திலும்   நல்ல திசா, புக்தி   நடைபெற்றால்  வெற்றி மீது வெற்றி   உங்களை வந்து சேரும்.

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும் காலம்  வீண், பண பற்றாக்குறை,  காரிய தாமதம்  ஆகிய  பலன்கள் நடைபெறும். கவனம் தேவை.

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். வெள்ளிகிழமை அம்மன்  வழிபாடு செய்வதும்,    செய்வதும்   சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 
பரம்பரை ஜோதிடர் 
9600553314 
Email : astrorkannan@gmail.com
நெ.10. முத்து நகர்  2வது  வீதி,
கொங்கு மெயின்  ரோடு , திருப்பூர்- 641607.

Friday, 12 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015-2016 -சிம்மம்


சிம்மம்
உங்கள் ராசிக்கு 5, 8 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 12 ல்   இருந்து ஜென்ம ராசியில் பெயர்ச்சியாகிறார்.

இது  அவ்வளவு  உகந்த நிலை இல்லை என்றாலும்,  எற்கெனவே இருந்த  இடத்திற்கு  இது  பரவாயில்லை எனும் படி மத்திம   பலன்களை  தரும்.  

காரிய தாமதம், அலைச்சல்,  குடும்பத்தில்  குழந்தைகளுக்கு மருத்துவ செலவு  ஏற்படும்.  வீண்  கவலை, முடிவெடுப்பதில்  குழப்பம், உடல், மன சோர்வை  தரும். குடும்பத்தில் வீன் விவாதங்களை  தவிர்த்தல் வேண்டும்.

தொழில், வேலை  தொடர்பான  அதிக  பயணங்கள்   செல்லும்  நிலை உருவாகும்.   வேலை பளு அதிகரிக்கும்,  சிறிய விசயங்கள்  கூட  சில முயற்சிகளுக்கு  பிறகே கைகூடும்.  புதிய  திட்டங்களை தொடங்குவ தில்   தாமதம் ஏற்படும்.  

கவலைகளை குறைத்து  உழைப்பில்  ஆர்வம் செலுத்தினால் வெற்றி பெறலாம்.  வேலையில் இருப்பர்வகளுக்கு  உயர்  நிர்வாகிகள், அதிகாரிகளுடன்  பகை  ஏற்பட வாய்ப்புண்டு,   சுய தொழில் செய்பவர்களும் கவனத்துடன்  செயல்படுவதும்,   புதிய பங்கு தாரர்களை   நன்கு   ஆலோசித்து  சேர்ப்பதும்  நன்று.

பிறருக்கு ஜாமீன்,  வாக்குறுதி  கொடுப்பதால்  பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுசேவை, அரசியலில்  போட்டிகள்  வலுத்தாலும் இறுதி வெற்றி உங்களுக்கே. 

குரு   ராசிக்கு  5, 7, 9  இடங்களை  பார்வை  செய்கிறார், கலை, இலக்கியம்  போன்றவற்றில் ஆர்வம் உடையவருக்கு அவற்றால் பெயர், புகழ் கிடைக்கும், கணவன்,  மனைவி வழி  உறவினர்களால் உதவிகள்  கிடைக்கும், உப தொழில்,  வியாபரத்தின் மூலம்  ஓரளவு வருமானம்  உண்டு.   குல தெய்வம், இஸ்ட  தெய்வ வழிபாடுகளில் ஆர்வம்  ஏற்படும்.   தீர்த்த  யாத்திரை  என்னும் புண்ணிய ஸ்தலங்களுக்கு  செல்லும்  வாய்ப்பு  கிடைக்கும்.

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும்  உடல் நலனில் அக்கறை கொள்வது  அவசியம்.  விரையங்கள் அதிகரிக்கும்.

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். பிரதோஷ  நாளன்று சிவன் வழிபாடு செய்வதும்,  ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்  வழங்குவதும்  சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 

Wednesday, 10 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015-2016 -கடகம்


கடகம் 
உங்கள் ராசிக்கு 6 , 9 ஆம் அதிபதி  குரு  ஜென்ம  ராசியில்  இருந்து   ராசிக்கு       2 ல் பெயர்ச்சியாகிறார்.

இதுவரை   காரிய தாமதம், தடை, வீண்  அலைச்சல்,  தொழில் , வேலையில் மந்த நிலை, நன்பர்கள்  உறவினர்களுடன்  சில பிரச்சனைகள்  போன்றவை ஏற்பட்டிருக்கும்.

இனி வரும் ஓராண்டு  காலம்  உங்களுக்கு மிக சிறந்த  காலம்  என்றே கூற வேண்டும். மன கவலையும், குழப்பங்களும் அகன்று  புத்துணர்வும், மன மகிழ்ச்சியும் அடைவீர்கள்,

குடும்பத்தில்   சுப காரியங்கள் நடக்கும்,  மகிழ்ச்சியான  மன  நிலை  இருக்கும் .  புதிய  வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு  உருவாகும். பொருளாதாரம்  மேன்மை அடையும்.

வேலை  தேடுவோருக்கு  வேலை  வாய்ப்பு  கிடைக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம்   நடைபெறுவதற்கு  உகந்த காலமாகும்.

குழந்தை   தாமதமானவர்களுக்கு குழந்தை   பாக்கியம் கிடைக்கும். 

வேலை, தொழிலில்  நல்ல முன்னேற்றம் ஏற்படும்,  சிலருக்கு தொழில், வேலையில்  ஊதிய உயர்வும்,  பதவி உயர்வும்  கிடைக்கும்.

தன  நிலை  சிறப்பாக  இருக்கும், வரவேண்டிய  பாக்கி  தொகைகள் வந்து சேரும்,  குடும்பத்தில்   பிரிந்தவர்கள், நண்பர்கள்  ஒன்று சேர்வார்கள்.

நீண்ட நாள் ஆசைகள், கனவுகள்,முயற்சிகளால்  வெற்றி  அடையும்.

குரு   ராசிக்கு  6, 8, 10  இடங்களை  பார்வை  செய்கிறார்,  கடன்கள் பெரிதும்  குறையும்,  மருத்துவ  செலவுகள்  குறையும், போட்டியாளர்களும்  உங்களுடன் இணங்கி  செல்வார்கள்,  திடீர் பணவரவிற்கும்,  அடமானத்தில்  இருக்கும் பொருள்கள் மீட்கவும் சாதகமாக  இருக்கும். தொழிலில்  விரிவாக்கம்  செய்யவும், வேலைக்கு  புதிய ஆட்களை சேர்க்கும்  நிலையும்  உருவாகும்.

சிலருக்கு  சங்கம், கூட்டமைப்பு  போன்றவற்றில்  கெளரவ  பதவிகளும் கிடைக்க வாய்ப்புண்டு,  பொதுசேவை அரசியலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான  காலம் 

உங்கள்  பிறந்த ஜாதகத்திலும்   தற்பொழுது  நல்ல திசா, புக்திகள் நடைபெறுமானால்  இது ஒரு பொற்காலம் எனலாம்.

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும்  பண பரிவர்த்தனை, செயலில் கவனம் தேவை 

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்வதும், இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 

Tuesday, 9 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015-2016 - மிதுனம்


மிதுனம் 
உங்கள் ராசிக்கு 7,10 ஆம் அதிபதி   குரு  ராசிக்கு  3 ல் பெயர்ச்சியாகிறார், இதுவரை  இருந்த 2ம் இடம்  சிறந்த பலன்களை முக்கியமாக பெரும்பாலோருக்கு  பொருளாதார  ரீதியாக  சில முன்னேற்றங்களை தந்திருக்கும்.

உங்கள்  ராசிக்கு  சனி பகவான் சாதகமான நிலையில் இருக்கிறார்,
குரு  சற்று  சாதகமற்ற  நிலையில் இருப்பதால்   செயல்,  புதிய முயற்சிகளில்  தடை, தாமதம்  இருக்கும்.

சகோதரர்கள்,  நன்பர்கள், அண்டை  வீட்டாரிடம் சில கருத்து வேறுபாடுகள்  ஏற்படலாம்,  கவனம் தேவை. 

சிலருக்கு  தொழில், வேலையில்  திடீர்  இடமாற்றமும்,  சிலருக்கு பதவி உயர்வோடு  இடமாற்றம்  கிடைக்கும்.

குடும்பத்தில்  முக்கிய முடிவுகளில் நன்கு யோசித்து செயல்படுவது நன்று ,  தாய்,  தந்தை  வழியில்  மருத்துவ  செலவுகள் ஏற்படலாம்.
கெளரவத்திற்கு  பங்கம்  ஏற்படும்  வகையில்  சில  நிகழ்ச்சிகள்  நடக்க  வாய்ப்புண்டு.

 
குரு   ராசிக்கு  7, 9, 11 இடங்களை  பார்வை  செய்கிறார், 
கணவன்  அல்லது மனைவி  வழி உறவினர்களின்  ஆதரவு, ஆதாயம் உண்டு ,  கூட்டு  தொழிலில்  மேன்மை  ஏற்படும், புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை  தேவை,  நீண்ட  தூர  ஆன்மிக  பயணங்களும்,  சிலருக்கு வெளிநாடு  செல்லும்   வாய்ப்பும்  கிடைக்கும்.  ஆன்மிக  மற்றும் சமுதாய பணிகளில்  ஆர்வம்  உருவாகும்.   தேவைக்கேற்ற  பண வரவு  இருக்கும். 


எதிலும் இரண்டு  யோசனையுடைய  உங்களுக்கு  முடிவு  எடுப்பதில் குழப்ப நிலை  உருவாகும். வேகத்தை  விட  விவேகமே  சிறந்தது   என்பது  போல  நன்கு  ஆலோசித்து   புதிய முயற்சிகளில்   இறங்குவது  நலம். 

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும்  காலம் தன வரவு,  முயற்சிகளில் வெற்றி  போன்ற சாதகமான பலன்கள் நடைபெறும்.

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். புதன்கிழமை பெருமாள் வழிபாடும் செய்வதும் சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 

Monday, 8 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 -2016 - ரிசபம்



உங்கள் ராசிக்கு 8,11 ஆம் அதிபதி   குரு  ராசிக்கு  4ல்  வருவது மத்திமான பலன்களை தரும். முன்பு  இருந்த  3ம்  இடத்தை விட இந்த 4  சற்று  சிறப்பான  அமைப்பு  தான்.

உடல் நலனில்  அக்கறை   கொள்வதும், அதிக  அலைச்சல், வீண் செலவு ஏற்பட வாய்ப்புண்டு,   பேச்சில் கவனம் கொள்வதும் அவசியம். உறவினர்கள் நண்பர்களுடன்   பகை ஏற்பட வாய்ப்புண்டு   அதே நேரம் கண்ட சனியும்  7ல் இருந்து ராசியை பார்ப்பதால், தேவையற்ற கவலைகள், குழப்பங்கள் தோன்றும், கணவன் மனைவி விவாதங்களை தவிர்ப்பது நலம். தொழில், வேலை தொடர்பான  வெளிநாடு  செல்லும் முயற்சியில் உள்ளவர்களுக்கு  வாய்ப்புகள் சாதகமாக  இருக்கும்.

குரு    ராசிக்கு  8, 10, 12 இடங்களை  பார்வை  செய்வதால் பண வரவிற்கும் வாய்ப்பு உண்டு, தொழில், வேலையில் முன்பை விட முன்னேற்றம் ஏற்படும்.  போட்டி உருவாகும், உழைப்பு அதிகமாகும். வரவுக்கேற்ற  செலவு இருக்கும். தொழில் முதலீடுகள், ஒப்பந்தங்களில் கவனமாக  செயல்படுவது நன்று. 

சிலருக்கு நீண்ட நாட்களாக  கனவாக  இருந்த  வீடு , வாகனம் மற்றும் முக்கியமான வீட்டு  உபயோக  பொருட்கள் கடன் பெற்று வாங்கும் சூழல் உருவாகும். சிலருக்கு இடமாறுதலும் ஏற்படும். கவனத்துடன் செயல்பட்டால்  கலங்க  தேவையில்லை. 


2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும்  காலம் கவனமாக செயல்படுவது நல்லது.

வியாழக்கிமை குருபகவான்  வழிபாடும்.  வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்வதும்,  சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 

Sunday, 7 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 -2016 - மேஷம்

மேஷ ராசி


உங்கள் ராசிக்கு 9,12 ஆம் அதிபதி  இயற்க்கை  மற்றும் ராசி  சுபரான குரு  சுப  திரிகோண ஸ்தானமான 5க்கு  வருவது மிக நன்மையான பலன்களை தரும்  அமைப்பாகும்,   இனி  வரும்    ஓராண்டு  காலம் உங்களுக்கு   சாதகமான  காலமாகும்,  அஷ்டமத்து சனியால்  ஏற்படும் பதிப்புகள்  குருவின்  பலன்களால்  வெகுவாக  குறையும்  உடல், மன ரீதியாக   புத்துணர்வு  பெறுவீர்கள், செயல்களில்  வேகம் கூடும், தாமதம்,   தடைபட்ட   காரியங்கள்   விரைவில்  நடைபெறும். திருமண முயற்சிகளில்  வெற்றியும் கிட்டும்.  புதிய தொழில்,  வேலைக்கான முயற்சியில்  இருப்போருக்கு   சாதகமான பலன்கள் கிடைக்கும்,

குரு   ஜென்ம ராசி, 9 , 11  இடங்களை  பார்வை செய்வதால்  மன குழப்பங்கள், சங்கடங்கள்   நீங்கும்,  மன மகிழ்ச்சியும்,புத்துணர்வும் ஏற்படும்.வெளிநாடு செல்லும்  முயற்சியில்இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும்,  புண்ணிய  ஸ்தலங்களுக்கு   யாத்திரை செய்யும்   வாய்ப்பும், குல தெய்வ ,  இஸ்ட தெய்வ வழிபாடுகளில்  ஆர்வம்  ஏற்படும். தெய்வ பலம்  கூடும். வருமானம் அதிகரிக்கும், தன  நிலை  நன்றாக இருக்கும். திடீர் பண வரவிற்கும்  வாய்ப்புண்டு, வீண் செலவுகள்குறைந்து  வீடு, குடும்பம்,  குழந்தைகள்,  ஆன்மிகம் போன்றவற்றிக்கான  சுப செலவுகளாக இருக்கும்,கணவன் மனைவி உறவுநிலை நன்றாக இருக்கும் கடன்கள் குறையும்,  உங்களின் அந்தஸ்து, மரியாதை, செல்வாக்கு, சொல்வாக்கு கூடும். 

2016  ஜனவரி-   மே வரை  குரு  வக்கிரம் பெறும்  காலம்  கவனமாக செயல்படுவது  நல்லது.

குல தெய்வ வழிபாடு,  செவ்வாய்க்கிழமைகளில்  முருகன்  வழிபாடு செய்வதும்,  இயன்றவர்கள்  திருச்செந்தூர்   சென்று  முருகனை வழிபடுவதும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு  உணவளிப்பதும்  சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 

Friday, 5 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 -2016


திருக்கணித  பஞ்சாங்க  கணக்கின் படி  இந்த  மன்மத வருடம்  ஆனி மாதம் 29ம் தேதி   (14-7-2015)  செவ்வாய்க்கிழமை   காலை 6.23 - க்கு   மகம் நட்சத்திர முதல் பாதத்தில் குரு பகவான்   சிம்ம ராசியில்  பிரவேசிக்கிறார்.

கோச்சர  ரீதியாக  குரு  ஒருவரின்  ஜென்ம ராசிக்கு  2,5,7,9,11 இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது  நன்மையான பலன்களை  அதிகம் பெறுவார்,    

இந்த குரு  பெயர்ச்சியால்  மேஷம்,கடகம்,துலாம், தனுசு,கும்பம்   ஆகிய  5  ராசியினர்  அதிக   நன்மையான  பலன்களை அடைவர்.

ரிசபம், சிம்மம்,விருச்சிகம்  ஆகிய  3 ராசியினர்  மத்திமமான பலன்களை அடைவர்.

மிதுனம், கன்னி, மகரம்,மீனம்  ஆகிய  4  ராசியினருக்கு  அனுகூலம் இல்லை. 

இவை பொதுவான  குரு பெயர்ச்சியால்  ஏற்படும் பலன்கள் 
உங்கள் பிறந்த ஜாதகத்தில் நடைபெறும்  திசா புக்திகள் அடிப்படையில்  நல்ல ,தீய  பலன்கள்  மாறுபடும்.


12 ராசிகளுக்கான  குரு  பெயர்ச்சி  பலன்கள்   மேஷம் முதல் ஒவ்வொன்றாக  தொடர் பதிவுகளில்  வெளிவரும்.

வியாழன். ( குரு )  பற்றிய  சில தகவல்கள் 

சூரிய  குடும்பத்தில்  சூரியனுக்கு  அடுத்த படியாக   உருவத்தில்  பெரிய கோள் குரு   எனும்   வியாழ கோளாகும் .  வாயு  நிறைந்த கோளாகும், வானவியல் ரீதியாக  சூரியனிலிருந்து  777  மில்லியன் கிலோ  மீட்டர்   தொலைவில் உள்ளது.  சூரியனை  11 வருடம் 86 நாட்களில் சுற்றி வருகிறது.

சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்ள் வழங்கப்படுகிறது.
அந்தணன்,அமைச்சன்,அரசன்,ஆசான்,ண்டனப்பான் ,குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா, தாரபதி,தெய்வமந்திரி,நற்கோள் , பிரகற்பதி, வீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.

நவக்கிரகங்களில்   முழு முதல் இயற்கை சுபர் குரு  பகவான், இவர்  பார்வை பட்ட   இடங்கள்  தோஷங்கள்  குறைத்து   நன்மை தரும்.

எனிலும் ஆதிபத்திய  ரீதியாக  உபய  மிதுனம், கன்னி   இலக்கினங்களுக்கு பாதகாதிபதி குரு வலு  பெறுவது   நன்மை அல்ல. அசுர  குரு  சுக்கிரனின் ரிசப, துலாம்  இலக்கின, ராசியினருக்கு   இவரின்  திசா, புக்தி   அனுகூலம்  இல்லை. 

மேசம், கடகம், சிம்மம், தனுசு இலக்கினங்களுக்கு திரிகோனதிபதி மற்றும் தனுசு, மீன  இலக்கின  ராசிக்கு  அதிபதி    நற்பலன்களை  அதிகம்  தருபவர்,  


பால் : ஆண் கிரகம்.
நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).
வடிவம் : உயரம்.
அவயம் : இருதயம்.
உலோகம் : பொன்.
ரத்தினம் : புஷ்பராகம்.
மலர் : முல்லை.
வாகனம் : யானை.
சமித்து : அரசு.
சுவை : தித்திப்பு.
தான்யம் : கொத்துக்கடலை.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : வாத நாடி.
திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ). 
அதிதேவதை : பிரம்மா, .
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக்கோள்.
குணம் : சாந்தம்.
ஆசன வடிவம் : செவ்வகம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
பகை கோள்கள் : புதன், சுக்கிரன்.
சம கோள்கள் : சனி, ராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 வருடம்.
திசா புத்திக் காலம் : 16 ஆண்டுகள்.

நட்பு வீடு : மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
பகை வீடு : ரிஷபம்,மிதுனம், துலாம்.
ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.
நீசம் பெற்ற இடம் : மகரம்.
உச்சம் பெற்ற இடம் : கடகம்.
மூலதிரிகோணம் : தனுசு.
உப கிரகம் : எமகண்டன்.
காரகத்துவம் : புத்திர காரகன்.

புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி, இவைகளுக்கு வியாழன் காரகன். சுப கோளான குரு ஒருவரின் ஜாதகத்தில் வலுவாக இருப்பது சுப பலனை தரும்.  


ஆஸ்ட்ரோ  கண்ணன்