Friday, 12 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015-2016 -சிம்மம்


சிம்மம்
உங்கள் ராசிக்கு 5, 8 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 12 ல்   இருந்து ஜென்ம ராசியில் பெயர்ச்சியாகிறார்.

இது  அவ்வளவு  உகந்த நிலை இல்லை என்றாலும்,  எற்கெனவே இருந்த  இடத்திற்கு  இது  பரவாயில்லை எனும் படி மத்திம   பலன்களை  தரும்.  

காரிய தாமதம், அலைச்சல்,  குடும்பத்தில்  குழந்தைகளுக்கு மருத்துவ செலவு  ஏற்படும்.  வீண்  கவலை, முடிவெடுப்பதில்  குழப்பம், உடல், மன சோர்வை  தரும். குடும்பத்தில் வீன் விவாதங்களை  தவிர்த்தல் வேண்டும்.

தொழில், வேலை  தொடர்பான  அதிக  பயணங்கள்   செல்லும்  நிலை உருவாகும்.   வேலை பளு அதிகரிக்கும்,  சிறிய விசயங்கள்  கூட  சில முயற்சிகளுக்கு  பிறகே கைகூடும்.  புதிய  திட்டங்களை தொடங்குவ தில்   தாமதம் ஏற்படும்.  

கவலைகளை குறைத்து  உழைப்பில்  ஆர்வம் செலுத்தினால் வெற்றி பெறலாம்.  வேலையில் இருப்பர்வகளுக்கு  உயர்  நிர்வாகிகள், அதிகாரிகளுடன்  பகை  ஏற்பட வாய்ப்புண்டு,   சுய தொழில் செய்பவர்களும் கவனத்துடன்  செயல்படுவதும்,   புதிய பங்கு தாரர்களை   நன்கு   ஆலோசித்து  சேர்ப்பதும்  நன்று.

பிறருக்கு ஜாமீன்,  வாக்குறுதி  கொடுப்பதால்  பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுசேவை, அரசியலில்  போட்டிகள்  வலுத்தாலும் இறுதி வெற்றி உங்களுக்கே. 

குரு   ராசிக்கு  5, 7, 9  இடங்களை  பார்வை  செய்கிறார், கலை, இலக்கியம்  போன்றவற்றில் ஆர்வம் உடையவருக்கு அவற்றால் பெயர், புகழ் கிடைக்கும், கணவன்,  மனைவி வழி  உறவினர்களால் உதவிகள்  கிடைக்கும், உப தொழில்,  வியாபரத்தின் மூலம்  ஓரளவு வருமானம்  உண்டு.   குல தெய்வம், இஸ்ட  தெய்வ வழிபாடுகளில் ஆர்வம்  ஏற்படும்.   தீர்த்த  யாத்திரை  என்னும் புண்ணிய ஸ்தலங்களுக்கு  செல்லும்  வாய்ப்பு  கிடைக்கும்.

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும்  உடல் நலனில் அக்கறை கொள்வது  அவசியம்.  விரையங்கள் அதிகரிக்கும்.

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். பிரதோஷ  நாளன்று சிவன் வழிபாடு செய்வதும்,  ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்  வழங்குவதும்  சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 

No comments:

Post a Comment