உங்கள் ராசிக்கு 8,11 ஆம் அதிபதி குரு ராசிக்கு 4ல் வருவது மத்திமான பலன்களை தரும். முன்பு இருந்த 3ம் இடத்தை விட இந்த 4 சற்று சிறப்பான அமைப்பு தான்.
உடல் நலனில் அக்கறை கொள்வதும், அதிக அலைச்சல், வீண் செலவு ஏற்பட வாய்ப்புண்டு, பேச்சில் கவனம் கொள்வதும் அவசியம். உறவினர்கள் நண்பர்களுடன் பகை ஏற்பட வாய்ப்புண்டு அதே நேரம் கண்ட சனியும் 7ல் இருந்து ராசியை பார்ப்பதால், தேவையற்ற கவலைகள், குழப்பங்கள் தோன்றும், கணவன் மனைவி விவாதங்களை தவிர்ப்பது நலம். தொழில், வேலை தொடர்பான வெளிநாடு செல்லும் முயற்சியில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் சாதகமாக இருக்கும்.
குரு ராசிக்கு 8, 10, 12 இடங்களை பார்வை செய்வதால் பண வரவிற்கும் வாய்ப்பு உண்டு, தொழில், வேலையில் முன்பை விட முன்னேற்றம் ஏற்படும். போட்டி உருவாகும், உழைப்பு அதிகமாகும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். தொழில் முதலீடுகள், ஒப்பந்தங்களில் கவனமாக செயல்படுவது நன்று.
சிலருக்கு நீண்ட நாட்களாக கனவாக இருந்த வீடு , வாகனம் மற்றும் முக்கியமான வீட்டு உபயோக பொருட்கள் கடன் பெற்று வாங்கும் சூழல் உருவாகும். சிலருக்கு இடமாறுதலும் ஏற்படும். கவனத்துடன் செயல்பட்டால் கலங்க தேவையில்லை.
2016 ஜனவரி - மே வரை குரு வக்கிரம் பெறும் காலம் கவனமாக செயல்படுவது நல்லது.
வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்வதும், சிறந்த பலன்களை தரும்.
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment