சந்திரன்


சந்திரன் சூரிய குடும்பத்தின் ஒரு துணை கோளாக உள்ளது. சந்திரன் பூமியின் துணை கோளாக பூமியை சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது. 

பூமியில் இருந்து சுமார் 2,38,000 மைல்கள் தொலைவில் உள்ளது. 

ஜோதிட ரீதியாக ராசி மண்டலத்தை (12 ராசிகளை) 27 1/4 நாட்களில் சுற்றி வருவதாக கணக்கில் கொள்ளப்படுகிறது. (நட்சத்திர அடிப்படையில்) 

சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது. 

அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச் , அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இவன், உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், கண்ணவன்,தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர், மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, வெண் கதிரோன், வேந்தன் ஆகியனவாகும். 

பால் : பெண் கிரகம். 
நிறம் : வெண்மை நிறம். 
வடிவம் : குள்ள மான உயரம். 
அவயம் : முகம், வயிறு. 
உலோகம் : ஈயம். 
ரத்தினம் : முத்து. 
மலர் : வெள்ளை அலரி. 
வாகனம் : முத்து விமானம். 
சமித்து : முருக்கு. 
சுவை : உப்பு. 
பஞ்ச பூதம் : நீர் 
நாடி : சிலேத்தும நாடி. 
திக்கு : வடமேற்கு. 
அதி தேவதை : பார்வதி. 
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள். 
குணம் : வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் குரூரம் . 
ஆசன வடிவம் : சதுரம். 
நட்புகோள்கள் : சூரியன், செவ்வாய், வியாழன், 
பகை கோள்கள் : இராகு, கேது. 
சம கோள்கள் : சனி, சுக்கிரன். 
1 ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/4 (நாள் ) நட்சத்திர அளவு. 

உரிய திசா காலம் : 10 ஆண்டுகள். 
நட்பு வீடு : மிதுனம், சிம்மம், கன்னி. 
பகை வீடு : எல்லா வீடுகளும் நட்பு ( பகைவீடு கிடையாது). 
ஆட்சி பெற்ற இடம் : கடகம். 
நீசம் பெற்ற இடம் : விருச்சிகம். 
உச்சம் பெற்ற இடம் : ரிஷபம். 
மூலதிரி கோணம் : ரிஷபம். 
உரிய உப கிரகம் : பரிவேடன். 
உரிய காரகத்துவம் : மாத்ரு காரகன் (தாய் ). 

வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை, சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம், எண்ணம், சிந்தனை இவைகளுக்கு எல்லம் சந்திரன் தான் காரகன். 

No comments:

Post a Comment