Friday 30 October 2015

ஜோதிடம்


ஜ்யோதிஷம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு ஒளியைப் பற்றிய சிறப்பு என்று பொருள். மனிதனுக்கு முக்கிய உறுப்பாக கண் இருப்பது போன்று வேதத்திற்கு கண்ணாகத் திகழ்வது " ஜோதிடம் " ஆகும்.

நமது இந்து சமயத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்கள் உள்ளன. இவற்றில் ஆழமான தத்துவங்கள், மிக உயர்ந்த வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கியுள்ளன. இந்த வேதங்களுக்கு உறுப்புகளாக ஆறு பிரிவுகள் உள்ளன.


1. சிக் ஷை (மருத்துவம்)
2.வியாகரணம் (கல்வி )
3.சந்தஸ் (சங்கீதம்)
4.நிருத்தம் (நாட்டியம்)
5.ஜ்யோதிஷம் (ஜோதிடம்)
6.கல்பம் (அழியாநிலை)


இவற்றுள் ஜோதிடம் வேதத்தின் கண்களாக போற்றப்படுகிறது.
மேஷாதி பன்னிரண்டு ராசிகளின் வழியாக சூரியன் முதலான ஒன்பது கிரகங்கள் சஞ்சாரம் செய்வதனால் நிகழும் சுக துக்கங்களை அறிய உதவும் கணித சாஸ்திரம் ஜோதிட சாஸ்திரம் ஆகும்.