Friday 28 November 2014

ஆய கலைகள் அறுபத்தி நான்கு ( 64 )


ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பது அனைவருக்கும் அறிந்தது, அவை என்ன என்ன கலைகள் என்று அறிந்தோர் வெகு சிலர் என்றே கூறலாம். இன்றைய நவீன உலகத்தில் அனுதினமும் ஆச்சரிய படும் வகையில் அறிய கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டேயிருக்கிறது, விண்ணை கடந்து செல்லும் நுட்ப வளர்ச்சியும் பெற்றுள்ளோம். 

ஆனால் இத்தகைய நவீன தொழில்நுட்பம், அறிவியல் கருவிகள் இல்லாத அக்காலத்தில் நமது முன்னோர்கள் அறிய பல விடங்களை தமது அனுபவத்தால் உணர்ந்து இவ்வுலகிற்கு அளித்துள்ளனர். 

அவற்றில் ஆய கலைகள் அறுபத்தி நான்கின் வகைகளை பார்போம். 

" ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பளிங்கு வாரா திடர். 

என கம்பர் சரசுவதி அந்தாதி என்ற நூலில் கவி இயற்றியுள்ளார். 

ஆயகலை-64 
எழுத்து இயல் கலை –[அட்சர இலக்கணம்] 
விகித கலை –[எழுத்து ஞானம்] 
கணித நூல் –[எண் கணிதம்] 
வேதம் –[முதல் நூல்] 
புராணம் –[பூர்வ கதை இதிகாசம்] 
வியாகரணம் –[இலக்கண நூல்] 
ஜோதிட சாஸ்திரம் –[வான நூல்] 
தர்ம சாஸ்திரம் –[தர்ம நூல்] 
நீதி சாஸ்திரம் –[நீதி நூல்] 
யோக சாஸ்திரம் –[யோக பயிற்சி நூல்] 
மந்திர சாஸ்திரம் –[மந்திர நூல்] 
சகுன சாஸ்திரம் –[நிமித நூல்] 
சிற்ப சாஸ்திரம் –[சிற்ப கலை] 
வைத்திய சாஸ்திரம் –[மருத்துவம்] 
உருவ சாஸ்திரம் –[உடல் கூறு இலட்சணம்] 
சப்த பிரம்மம் –[ஒலி குறி நூல்] 
காவியம் –[காபியம்-நாவல்] 
அலங்காரம் –[அணி இலக்கணம்] 
மதுர பாசனம் –[சொல் வன்மை] 
நாடகம் –[கூத்து நூல்] 
நிருத்தம் –[நடன நூல்] 
வீனை –[மதுர கான நூல்] 
வேணுகானம் –[புல்லாங்குழல் இசை] 
மிருந்தங்கம் –[மத்தள சாஸ்திரம்] 
தாளம் –[இசை நூல்] 
அஸ்திரபயிற்சி –[வில் வித்தை] 
இரச் பரிட்சை -[அதிரச சாஸ்திரம்] 
கனக பரிட்சை –[பொன் மாற்று காணும் நூல்] 
கஜ பரிட்சை –[யானை தேர்வு நூல்] 
அஸ்வ பரிட்சை –[குதிரை தேர்வு நூல்] 
இரத்தன பர்ட்சை –[நவரத்தின தேர்வு] 
பூமி பரிட்சை –[மண் அளவு தேர்வு] 
சங்கிராம இலக்கணம் –[போர் முறை] 
மல்யுத்தம் –[மற்போர் கலை] 
ஆகர் சனம் –[அழைத்தல்] 
உச்சாடனம் –[உச்சரித்தல்-அகற்றுதல்] 
வித்வேசனம் –[பகை மூட்டல்] 
மதன சாஸ்திரம் –[கொக்கோயிசம்] 
மோகனம் –[மயங்குதல்] 
வசிகீரம் –[வசிய படுத்தல்] 
ரச வாதம் –[பிற உலோகங்கலை தங்கமாக மாற்றுதல்] 
காந்தருவ வாதம் –[காந்தருவகலை பற்றிய விசயம்] 
பைபீலவாதம் –[மிருகங்கள் பாஷையில் பேசுதல்] 
கவுத்து வாதம் –[துயரத்தை இன்பமாக மாற்றும் கலை] 
தாது வாதம் –[நாடி நூல்] 
காருடம் –[மந்திரத்தால் விஷம் அகற்றுதல்] 
நஷ்ட பிரசனம் –[ஜோதிடத்தால் இழப்பை கூறுதல்] 
முட்டி சாஸ்திரம் –[ஜோதிடத்தால் மரைந்ததை கூறுதல்] 
ஆகாய பிரவேசம் –[வானில் பறத்தல்] 
ஆகாய கமனம் –[வானில் மறைந்து உலவுதல்] 
பரகாய பிரவேசம் –[கூடு விட்டு கூடு பாய்தல்] 
அதிருசியம் –[தன்னை மறைத்து கொள்ளுதல்] 
இந்திர ஜாலம் –[ஜால வித்தை] 
மகேந்திர ஜாலம் –[அதிசயம் காட்டுதல்] 
அக்னிஸ்தம்பனம் –[நெருப்பை காட்டுதல்] 
ஜல ஸ்தம்பனம் –[நீர் மேல் நடத்தல்] 
வாயு ஸ்தம்பனம் –[காற்று பிடித்தல்] 
திருஷ்டி ஸ்தம்பனம் –[கண் கட்டுதல்] 
வாக்கு ஸ்தம்பனம் –[வாயை கட்டுதல்] 
சுக்கில ஸ்தம்பனம் –[இந்திரிகத்தை கட்டுபடுத்துதல்] 
கன்ன ஸ்தம்பனம் –[மறைந்து உழவுதல்] 
கட்க ஸ்தம்பனம் –[வாள் சுழற்றுதல்] 
அவஸ்தை பிரயோகம் –[ஆன்மாவை கட்டுபடுத்துதல்] 
கீதம் –[இசை நூல்] 

மேற்கண்ட ஆயக்கலை 64-ல் ஜோதிடம் 7-வது கலை ஆகும். 

Thursday 27 November 2014

இந்திய வானசாத்திர சித்தாந்தங்கள்


இந்திய வானசாத்திரத்தில் பதினெட்டு சித்தாந்தங்களை பதினெட்டு ரிஷிகள் உருவாக்கியுள்ளனர், அவர்களின் பெயர்களை கொண்டே அந்த  சித்தாந்தங்கள் அழைக்கபடுகின்றன.

1. சூர்ய சித்தாந்தம்,
2.பிதாமக சித்தாந்தம்,
3.வியாச சித்தாந்தம்,
4.வசிஷ்ட சித்தாந்தம்,
5.அத்ரி சித்தாந்தம்,
6.பராசர சித்தாந்தம்,
7.காஷ்யப சித்தாந்தம்,
8.நாரத சித்தாந்தம்,
9.கர்க சித்தாந்தம்,
10.மரீசி சித்தாந்தம்,
11.மனு சித்தாந்தம்,
12.ஆங்கிரஸ சித்தாந்தம்,
13.லோமச சித்தாந்தம்,
14.பெளலிச சித்தாந்தம்,
15.சியாவன சித்தாந்தம்,
16.யவன சித்தாந்தம்,
17.பிருகு சித்தாந்தம்,
18.செளனக சித்தாந்தம்