Thursday 16 July 2015

ஆடி மாதத்தின் சிறப்பு - திருவிழாக்கள்



பொதுவாக  ஆடி மாதம்  சுப நிகழ்ச்சிகளுக்கு விலக்கப்பட்டாலும்,   தெய்வ வழிபாட்டுக்குரிய  மாதமாகும்.  

ஆடி  மாதம்   ஆடிவெள்ளி, செவ்வாய், ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு,  ஆடிப்பூரம்  ஆகிய விழாக்கள் வருகின்றன.  

ஜோதிட ரீதியாக  சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும்  தட்சிணாயண புண்ணிய காலமாகும் ,  ஆடி 1 முதல் தொடங்கும் ஆடி, ஆவணி , புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். இது தேவர்களுக்கு இரவு பொழுதாகும் (உறக்கம் ),

மார்கழி மாதம் தேவர்கள் விழித்தெழும் காலம், அந்த மாதம் முழுவதும் மக்கள் திருக்கோவில்களில் பஜனை பாடி இறைவழிபாடு செய்வர். தை 1 உத்திராயனத்தின் தொடக்கமாகும்.

ஆடியில் சூரியன்   சஞ்சரிக்கும் ராசி கடகம்,  ஒரு பெண் ராசி,  அதன் அதிபதி  சந்திரன்  பெண் கிரகம்  மேலும்  தாய்  காரகன்   எனவே இது அன்னை, அம்பாள், தாயார்  என  பல  பெயர்களில் அழைப்படும் பெண் தெய்வங்களை   வழிபடுவதற்கு  உகந்தாக இருக்கிறது.


திருவிழாக்கள்

ஆடிப்பெளர்ணமி :  ஆடி  14ம்  தேதி   30.07.2015  வியாழக்கிழமை.

திருவண்ணாமலை போன்ற  மலை கோவில்களில்  கிரிவலம் வருதல் சிறப்பு 
................................................................................................................................................
ஆடிப்பெருக்கு    :  ஆடி  18ம்  தேதி   3.08.2015  திங்கட்க்கிழமை.  

ஆடிப்பெருக்கு (18ஆம் பெருக்கு ) என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். 

ஆடிப்பெருக்கு அன்று  காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக குடும்பத்துடன் விழாவாக  காவிரிக் கரையில் கொண்டாடுவது வழக்கம்.

இந்நாளில் குடும்பத்துடன்  காவிரியில்  நீராடி  
இறைவழிபாடு   செய்வது  சிறப்பு.
................................................................................................................................................
ஆடி கார்த்திகை  :  ஆடி 23ம்  தேதி   8.08.2015  சனிக்கிழமை,  

முருக பெருமான் வழிபாடு சிறப்பு 
................................................................................................................................................
ஆடி  அமாவசை   :  ஆடி 29 ம்  தேதி  14.08.2015  வெள்ளிக்கிழமை,
கடலில்   நீராடி  முன்னோர்களை  வழிபாடு செய்வதற்கும்  உகந்த நாள். அன்னதானம் செய்வது  சிறப்பு.

பாவங்கள் போக்கும் பிதுர்வழிபாட்டுக்குரிய தலமாக ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையன்று  தர்ப்பணம் செய்வது சிறப்பு.

................................................................................................................................................
ஆடிப்பூரம்   :  ஆடி  31 ம்  தேதி   16.08.2015  ஞாயிற்றுக்கிழமை, 

அம்பிகையை, ஆண்டாள்  அன்னையை   வழிபாட உகந்த நாள்

ஸ்ரீ  ஆண்டாள்  தாயார்   பிறந்த தினமான  இன்நாளில், திருமணம் ஆகாத பெண்கள் ,  நல்ல  வரன்  அமைவதற்கு  வழிபாடு  செய்வது சிறப்பு,  பூரம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களும்  வழிபாடு செய்ய நன்மைகள் பல பெறுவர்.
 

ஆஸ்ட்ரோ  கண்ணன் 

Tuesday 14 July 2015

கிரகங்கள், நட்சத்திரங்களின் அதி தேவதைகள்



நமது  இந்திய ஜோதிட  சாஸ்திரத்தில்  கிரகங்கள், நட்சத்திரங்களுக்கு என பிரத்யேகமாக  அதி தேவதைகள் உண்டு.

ஒருவரின்  ஜென்ம  நட்சத்திரத்திற்குரிய தெய்வத்தை வணங்குவதால்   மனோ பலம் அதிகரிக்கும்,  நன்மைகள் பல  பெறலாம்.

நட்சத்திரங்கள் - அதிபதி கிரகம் - அதிதேவதை 
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் - சூரியன் - சிவன்

ரோஹிணி,அஸ்தம்,திருவோணம் - சந்திரன் - பார்வதி

மிருகசிரீஷம்,சித்திரை ,அவிட்டம் - செவ்வாய் - முருகன்

திருவாதிரை,சுவாதி,சதயம் - ராகு - காளி, துர்க்கை

புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி - குரு - பிரம்மா 

பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி - சனி - யமன் ,சாஸ்தா

ஆயில்யம்,கேட்டை,ரேவதி - புதன் - விஷ்ணு

மகம்,மூலம்,அஸ்வினி - கேது - விநாயகர்,

பரணி,பூரம், பூராடம் - சுக்ரன் - லக்ஷ்மி,   இந்திரன் 

27 நட்சத்திரங்களையும் அதி  தேவதைகளையும் காண்போம்.

1.அஸ்வினி -   சரஸ்வதி
2.பரணி -  துர்க்கை 
3.கிருத்திகை -  அக்னிபகவான் 
4.ரோகிணி- பிரம்ம தேவர் 
5.மிருகசீரிஷம்-  சந்திரபகவான்  
6.திருவாதிரை -  சிவபெருமான் 
7.புனர்பூசம் -  அதிதி 
8.பூசம்-  பிரஹஸ்பதி  (குருபகவான்) 
9.ஆயில்யம்-  ஆதிசேஷன் 
10.மகம்-   பித்ரு,  சுக்கிர பகவான்  
11.பூரம் -   பார்வதி 
12.உத்திரம் -  சூரிய பகவான் 
13.ஹஸ்தம் - சாஸ்தா
14.சித்திரை-   விஷ்வகர்மா
15.சுவாதி-  வாயு பகவான் 
16.விசாகம் - முருகன் 
17.அனுஷம்- லட்சுமி 
18.கேட்டை-  இந்திரன்
19.மூலம்-  நிருருதி 
20.பூராடம் -  வருணன் 
21.உத்திராடம் -  கணபதி
22.திருவோணம்-  விஷ்ணு 
23.அவிட்டம் -  வசுக்கள் 
24.சதயம்-  இயமன் 
25.பூரட்டாதி -  குபேரன் 
26.உத்திரட்டாதி - காமதேனு
27.ரேவதி -  சனி பகவான்

உதா :
ஒருவர்  லக்கினம்   (அ)  ராசி  மேஷம்  என்றால் முருக  பெருமானையும்.,
நட்சத்திரம் அஸ்வினி என்றால் - சரஸ்வதியையும்  வணங்குதல் சிறப்பு 

இலக்கினம், ராசி,  கிரகங்கள்,  நட்சத்திரத்திற்குரிய   தெய்வங்களை வணங்கி நன்மைகள் பெறுவோம்.


ஆஸ்ட்ரோ  கண்ணன் 

Attachments 

Wednesday 8 July 2015

சிம்ம குரு


இது வரை கடகத்தில்  உச்சம் பெற்றிருந்த குரு, இப்பொழுது தனது நண்பரான சூரியனின்  ராசி   சிம்மத்தில்  பிரவேசிப்பதால் உலகில், நாட்டில்   ஏற்படும் பொருளாதாரம்,  உற்பத்தி,  பொருட்களின் விலை  ஏற்ற, இறக்கங்கள் போன்ற  பொது   பலன்களை பார்ப்போம்.

தங்கம்,வெள்ளி,  பித்தளை   போன்ற  உலோகங்கள்,  அரிசி, கோதுமை, பயிறு  போன்ற தன்ய  வகைகள் விலை உயரும். அரசியல்,  சமூக  சேவை  போன்ற  பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு  நற்பெயர், பாராட்டு  கிடைக்கும்.

மக்கள்  நலம்  சார்ந்த புதிய திட்டங்கள்,   சட்டங்கள், நெறிமுறைகள் உருவாகும்.  மக்களுக்கு மனித நேயம்,  பொது சேவை, ஆன்மிகம் போன்றவற்றில்  ஆர்வம்  அதிகரிக்கும். நெருப்பினால் சேதம், விமான போக்குவரத்தில்  சில சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பு  உண்டு .

நேர்மை, ஒழுங்கு  போன்றவற்றின்  கை ஓங்கியிருக்கும், உணவு  உட்பட முக்கிய பொருட்களை  பதுக்கி  வைத்திருப்போர் சட்டத்தின் பிடியில்  சிக்குவர். 

நல்ல  மழை  பொழிவு  இருக்கும், நீர் ஆதாரம் பெருகும்,  விவசாயம் செழிக்கும், பொருளாதார மேன்மை ஏற்படும், அத்தியாவசிய  பொருட்க ளின் விலை  மிதமாக  (கட்டுக்குள்)  இருக்கும்,   பொது  சேதாரம்,  வீன்  செலவுகள் குறையும்,  பழமையான திருக்கோவில்கள்  புனரமைப்பு  செய்யப்பட்டு கும்பாபிஷேகம்  நடைபெறும். 

12 வருடங்களுக்கு ஒருமுறை  குரு  சிம்ம ராசியில் இருக்கும்  பொழுது நடைபெறும்  மகாமகம்  இந்த  ஆண்டு நடைபெறும்.  

Saturday 4 July 2015

தட்சிணா மூர்த்தியும், குருபகவானும்


தட்சிணா மூர்த்தியும், குருபகவானும்  ஒருவரா? 
இருவருக்கும்  வேறுபாடுகள்  பல உண்டு.  

சிவனின்  64 சிவ வடிவங்களில் ஒருவர்  தட்சிணா மூர்த்தி  ஆவார்.

நவகிரகங்களில் ஒருவர் பிரகஸ்பதி  எனும் குரு பகவான்  ஆவார்.


தட்சிணா மூர்த்திக்குரிய திசை  தெற்கு ,   சிவாலயங்களில் கோஷ்டத்தில்  தெற்கு   நோக்கி  அமர்ந்திருப்பார்,  

குரு பகவானுக்குரிய திசை  வடக்கு,   நவகிரகங்களில்  அவர் வடக்கு நோக்கி  அமர்ந்திருப்பார்,  


தட்சிணா மூர்த்தி ஆறு அங்கங்களோடு கூடிய நான் மறைகளை, சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனப்படும் நான்கு பிரம்ம ரிஷிகளுக்குப் போதிப்பவர்.
 
தேவ குரு  என்று  அழைக்கப்படும்   குரு பகவான்,  முழு முதல் இயற்கை சுபராவார், ஒருவர் ஜாதகத்தில்  இருக்கும்  நிலையை பொருத்து  பூர்வ ஜென்ம வினைகளுக்கான பலாபலன்களை அளிப்பவர். 
 
நவகிரகங்களுக்கு ( தெய்வம் ) தேவதைகள்,  அதிதேவதைகள்   என்று   சிறப்பு  வழிப்பாடிற்குரிய  தெய்வங்கள்  உண்டு.

அதன்படி  குருவுக்கு அதிதேவதை இந்திரன்,  பிரத்யதி தேவதை பிரம்மதேவன் ஆவார்.

கிரகங்களின்  தோஷங்களால்  ஏற்படும்  தீய பலன்களை  குறைக்கவும், நன்மையான  பலன்களை  பெறவும்  அந்தந்த கிரகங்களுக்கும் ,  அதன் அதி தேவதைகளுக்கும்  சிறப்பு  வழிப்பாடு  செய்வதும்   நடைமுறையில்  உள்ள  ஒரு விடயம். 

கிரகங்களை  அவற்றிற்குரிய  நாளில் (கிழமையில் ),  அவற்றிற்குரிய வஸ்திரம்,  தானியம், மலர்களை  கொண்டு   வணங்குதல் சிறப்பு. 

நவக்கிரக குருபகவானை  அவருக்குரிய  வியாழக்கிழமையில் மஞ்சள் நிற வஸ்திரம் ,  (பொன்னிறம்) முல்லை மலர் ,  கொத்துக் கடலை  தான்யம்  போன்றவற்றை  சமர்பித்து வணங்குதல்  சிறப்பு.

தட்சிணா மூர்த்தி  குருவிற்கெல்லாம்  குரு என்ற நிலையில் இருப்பவர்,  அவர் தியான நிலையில்  ஞான  குருவாய்  இருப்பவர்,

அவரை  (வியாழக்கிழமை என்றில்லாமல் ) அனைத்து  நாட்களிலும் சிவாலயங்களில் வணங்கி வரலாம். 

ஞான குருவையும் ,  நவகிரக குருவையும் வணங்கி  நன்மைகள் பெறுவோம்.

Wednesday 1 July 2015

ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் , தவிர்க்க வேண்டியவையும்



ஒருவர் பிறக்கும்  பொழுது  உடல், மனோ  காரகன் சந்திரன்   இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம  நட்சத்திரம், அந்த நட்சத்திரம்  எந்த ராசியில்  உள்ளதோ   அதுவே  ஜென்ம  ராசி  ஆகும்.

ராசி  மண்டலத்தில்  12 ராசிகளில்    மொத்தம்  27 நட்சத்திரங்கள் ,  இவற்றில்   3 நட்சத்திர ங்களுக்கு  ஒரு  கிரகம்    என்ற  கணக்கில்  9 கிரகங்கள்  அதிபதியாக  உள்ளன.

நட்சத்திரங்கள்                                                            -  அதிபதி    
அஸ்வினி             மகம்                மூலம்                -  கேது    
பரணி                     பூரம்                  பூராடம்             -   சுக்கிரன் 
கார்த்திகை          உத்திரம்          உத்திராடம்        -    சூரியன் 
ரோகினி               ஹஸ்தம்       திருவோணம்     -   சந்திரன் 
மிருகசீரிஷம்     சித்திரை          அவிட்டம்            -   செவ்வாய் 
திருவாதிரை      சுவாதி              சதயம்                  -    ராகு 
புனர்பூசம்           விசாகம்           பூரட்டாதி             -   குரு
பூசம்                     அனுஷம்       உத்திரட்டாதி       -    சனி  
ஆயில்யம்          கேட்டை        ரேவதி                    -   புதன் 

உதா 
ஒருவர்  பூர  நட்சத்திரத்தில்  பிறந்திருந்தால்  அது  ஜென்ம   நட்சத்திரமாகும் .  பூராடம்,  பரணி   அவரின்  அனுஜென்ம, திரி ஜென்ம  நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த மூன்று  நட்சத்திரங்கள்   வரும்  நாட்களிலும்  கூடாதவைகள் என்பவைகளை தவிர்த்தல்  வேண்டும்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம்  வரும்  நாளில்  செய்ய தக்கவை  என்றும்,  கூடாதவை, ஆகாதவை  என  செயல்களில்  சிலவற்றை  நமது முன்னோர்கள்   குறிப்பிட்டுள்ளனர்,  இங்கு கூடாதவை, ஆகாதவை என்று  கூறுவது  அவர்களின்  அனுபவத்தை   கொண்டு தான், அவற்றை  தவிர்க்கலாம்,   அவற்றை  செய்வதால்  எதிர்மறையான  அல்லது  திருப்தியற்ற  பலன்களே  ஏற்படலாம்.

ஜென்ம  நட்சத்திரத்தில்  செய்ய வேண்டியவை
குலதெய்வ,  இஸ்ட  தெய்வ வழிபாடு , புத்தாடை அணிதல், அன்னதானம்,  தான தர்மங்கள் செய்தல்,  நிலம், சொத்துகள் வாங்குதல்,
பதவியேற்பது  போன்றவற்றை  செய்யலாம்.


ஜென்ம  நட்சத்திரத்தில்   தவிர்க்க வேண்டியவை 
திருமணம்,  சீமந்தம்,  முடி இறக்குதல், காது  குத்து,   எண்ணெய்  ஸ்நானம்  ( எண்ணெய்   குளியல்), தாம்பத்தியம், மருந்து உண்ணுதல்,  அறுவை சிகிச்சை போன்ற உடல் தொடர்பான  விசயங்களை  தவிர்த்தல்  நலம்.