Sunday 22 February 2015

பரிவர்த்தனை யோகம்





இரண்டு கிரகங்கள் தங்கள்  வீடுகளில் (ராசி )  மாறி அமர்வது பரிவர்த்தனை யோகம் ஆகும்.  

பொதுவாக  பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சிக்கு இணையான பலம் பெறுகின்றன .

கிரக பரிவர்த்தனையால்  நன்மையும்  உண்டு, தீமையும் உண்டு.
அவை  பரிவர்த்தனை பெறும்  கிரகங்களின்  சுபாவ தன்மை   மற்றும் ஆதிபத்திய தன்மையை பொறுத்தது.

பரிவர்த்தனைகள்  மொத்தம் 66 வகையாகும் , இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளது. அவை 
1.மஹா  யோகம்
2.தைன்ய  யோகம்
3.கஹல  யோகம்
ஆகும்.

இவற்றுள்  மஹா யோகம்  28 பிரிவுகளாகவும்,  தைன்ய  யோகம் 30 பிரிவுகளாகவும், கஹல யோகம்  8 பிரிவுகளாகவும் உள்ளது. 

1) மஹா பரிவர்த்தனை யோகம் :- 1, 2,4, 5, 7, 9, 10, 11 ஆகிய  பாவகங்களின்  அதிபதிகள்  தங்களுக்குள்  ஒருவருக்கொருவர்  பரிவர்த்தனை அடைந்தால் அது மஹா யோகம்  ஆகும்,  இந்த  யோகத்தில் பிறந்த ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும்.

2) தைன்ய பரிவர்த்தனை :-  6,8,12ஆம்  பாவகங்களின்  அதிபதிகள்  தங்களுக்குள்  ஒருவருக்கொருவர்  பரிவர்த்தனை அடைதல்  மற்றும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11  பாவக  அதிபதிகளுடன்  பரிவர்த்தனை அடைவதாலும் ஏற்படுவது  தைன்ய யோகம்  ஆகும். இவை  தீய  பாவகங்களின் தொடர்பு  பெறுவதால்  தீமையான  பலன்கள் அதிகம் தரும்.

3) கஹல பரிவர்த்தனை:- மூன்றாம் பாவக அதிபதி 1, 2, 4, 5, 7, 9, 10, 11  பாவக  அதிபதிகளுடன்  பரிவர்த்தனை அடைவதால் ஏற்படுவது  கஹல  யோகம்  ஆகும்.  மூன்றாம்  பாவக காரகமான  துணிச்சலை தந்து தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும்  நிலையை தரும். இந்த யோகத்தில் பிறந்தவர்  சில நேரங்களில் நல் வார்த்தைகளும், சில நேரங்களில் கடுமையான வார்த்தைகளும் பேசும்  தன்மை உடையவர், (முயற்சி ஸ்தானம்) முன்னே ற்றதிற்காக அதிகம் உழைக்கும் நிலை ஏற்படும்.

தீய கிரகங்கள் ஒன்றுக்கொன்று  பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும்.

அது போல   தீய கிரகங்கள் ஒன்றுக்கொன்று   பரிவர்த்தனை அடையும் போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றுக்கொன்று   பரிவர்த்தனை அடையும் போது  நன்மைகள் அதிகமாகும்.

மேலும்  ஒன்றுக்கொன்று  நட்பான  கிரகங்கள் பரிவர்த்தனை  பெறுவது நன்மையையும், ஒன்றுக்கொன்று பகையான கிரகங்கள் பரிவர்த்தனை  பெறுவது தீய பலன்களையும் தரும்.

நன்றி  
அஸ்ட்ரோ  கண்ணன் 

Monday 16 February 2015

இஷ்ட தெய்வ வழிபாடு


நமது இந்து  சமயத்தில்  பல  தெய்வங்கள்  இருந்தாலும்  அவரவர் தங்களுக்கென  ஒரு  இஷ்ட தெய்வ  வழிப்பாட்டினில் அதிக  ஆர்வம் காட்டுவர்.

ஒருவரின்  ஜாதகத்தில்  5ம்  பாவகம்  பல  காரகங்களில்  தெய்வ வழிபாடு,  குல தெய்வம், இஷ்ட தெய்வம்   போன்ற  சிலவற்றை   கொண்டுள்ளது.

5 ம்  பாவகம்  சூரியன்  வீடானாலும் ,  5 ல்  சூரியன்  இருந்தாலும்   சிவன்  வழிபாட்டில்  ஆர்வம்  உடையவர்,

5 ம்  பாவகம்  சந்திரன்  வீடானாலும் ,  5 ல்   சந்திரன் இருந்தாலும் சக்தி, அம்மன்   வழிபாட்டில்  ஆர்வம்  உடையவர்,

5 ம்  பாவகம்  செவ்வாய்  வீடானாலும் ,  5 ல்   செவ்வாய் இருந்தாலும் முருகன்   வழிபாட்டில்  ஆர்வம்  உடையவர்,

5 ம்  பாவகம்  புதன்  வீடானாலும்,  5 ல்    புதன்  இருந்தாலும் பெருமாள்  வழிபாட்டில்  ஆர்வம்  உடையவர்,

5 ம்  பாவகம்  குரு பகவான்  வீடானாலும் ,  5 ல்    குரு பகவான்   இருந்தாலும்  பிரம்மன்,  குரு ,  சித்தர்கள்,   ஞானிகள்   வழிபாட்டில் ஆர்வம்  உடையவர்,

5 ம்  பாவகம்  சுக்கிரன்  வீடானாலும்,  5 ல்   சுக்கிரன்   இருந்தாலும் லட்சுமி, அம்மன்   வழிபாட்டில்  ஆர்வம்  உடையவர்,

5 ம்  பாவகம்  சனி பகவான்   வீடானாலும் ,  5 ல்    சனி பகவான்   இருந்தாலும்  ஐயப்பன்,  கருப்பசாமி, ஆஞ்சநேயர்,  முனிஸ்வரன்,   போன்ற  காவல் தெய்வ  வழிபாட்டில்  ஆர்வம்  உடையவர்,

5 ல்   ராகு    இருந்தால்   துர்க்கை  பத்ரகாளி  போன்ற  அம்மன்,  நாக   தெய்வ  வழிபாட்டில்  ஆர்வம்  உடையவர்,

5 ல்  கேது   இருந்தால்   கணபதி,  சித்தர்கள்,  நாக  தெய்வ  வழிபாட்டில்  ஆர்வம்  உடையவர்.

Friday 13 February 2015

கே.பி ஜோதிட முறையில் காதலில் வெற்றி, தோல்விக்கான விதிகள்


5 ம் பாவகம் காதலையும், 
7 ம் பாவகம் திருமணத்தையும், 
11ம் பாவகம் விருப்பம் நிறைவேறுதலையும் குறிக்கும்.

1. காதலில் வெற்றி
5ம் பாவக ஆரம்ப முனையின் உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 5,11 ம் பாவகங்களுக்கு குறிகாட்டினால் காதல் நிறைவேறும்.
5ம் பாவக ஆரம்ப முனையின் உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 2, 5, 7, 11 ம் பாவகங்களுக்கு குறிகாட்டினால் காதல் திருமணத்தில் முடியும்.

2. காதலில் தோல்வி
5ம் பாவக ஆரம்ப முனையின் உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 4,12 ம் பாவகங்களுக்கு குறிகாட்டினால் ஜாதகர் தனது காதலரை கைவிடும் நிலை ஏற்படும்.
5ம் பாவக ஆரம்ப முனையின் உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 4,6 ம் பாவகங்களுக்கு குறிகாட்டினால் ஜாதகரின் காதலர் ஜாதகரை கைவிடும் நிலை ஏற்படும்.

12 ராசியினரின் காதலின் தன்மை (பொதுபலன்)



மேஷ ராசிக்காரர்கள் காதலில் உண்மை யாகவும், தீவிர பற்றுடனும் இருப்பர், தனது காதலரிடம்  கண்டிப்பு, கவனத்துடன்  இருப்பர்.

ரிஷப ராசிக்காரர்கள் எளிதில் காதல் வயப்பட கூடியவர்களாகவும், விரும்பியவரை  காதல் வலையில்  விழ வைப்பதில்  சாமார்த்திய சாளிகலாகவும்  இருப்பர்,   காதலில்  கைதேர்ந்த வர்கள் இவர்கள்.

மிதுன ராசிக்காரர்கள் காதலில்  இரட்டை நிலை ப்பாட்டை  கொண்டிருப்பார்,  தீவிர யோசனை க்கு  பிறகே காதலை எற்று கொள்வர்,  காதல் ஏற்படுவது அரிதே. காதலில் ஆர்வம் குறைவாக இருக்கும். 

கடக ராசிக்காரர்களுக்கு  பெரும்பாலும்  காதல் அரிதாக இருக்கும்,   தனது  காதல்  பற்றிய  அதிக படியான கற்பனையை  தவிர்த்தால்  ஏமாற்றம் இல்லை

சிம்ம ராசிக்காரர்கள்  மற்றவரை எளிதில் கவரும் தன்மையால்   காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும்  மிகவும்  விரும்புவர். 
காதலில் கடமை உணர்வுடன்  இருப்பர். பலருக்கு விருப்பபடி  காதல் திருமணம் செய்யும் வாய்ப்பு  ஏற்படும்.

கன்னி  ராசிக்காரர்கள்  காதலில்  யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் காதலரிடம் அதிகம் எதிர்பார்ப்பர், அவர்களின் 
எண்ணத்தை  நன்கு  அறிந்திருப்பர்,

துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும்.  மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் இவர்களுக்கு  இருப்பதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. 

விருச்சிக ராசிக்காரர்கள்  தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரு ம்புவர்.  காதலரிடம்  கர்வம், கண்டிப்புடன் நடந்து கொள்வர்.   

தனுசு ராசிக்காரர்கள்  காதலில் திறமைசா லியாக இருப்பார்.  பெரும்பாலான நேரத்தை காதல் சிந்தனையிலே  செலவழிப்பார். காதலரிடம்   அதிக அன்பு கொண்டிருப்பர்.

 மகர ராசிக்காரர்களின் காதல் வலிமையான ஆத்மார்த்தமானதாக   இருக்கும். காதலை கடமை போல கருதுவர்,  காதலரிடம் விட்டு கொடுத்து  செல்பவர்.

கும்ப ராசிக்காரர்கள் காதலில் தீவிர தன்மை யுடனும், உண்மையுடனும்  இருப்பார்.  காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர், காதலரை  நன்கு புரிந்து வைத்திருப்பவர்.

மீன  ராசிக்காரர்கள்  காதலில்  நிதானமும், பொறுமையும் கடைபிடிப்பர். உண்மை   காதலுக்காக  எதையும்  தியாகம் செய்யும் மனப்பான்மை இருக்கும்.  

காதல் திருமண யோகம்



காதல் இது கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு  முன்பு தோன்றியிருக்க வேண்டும்,  என்றக்கைக்கு  இந்த பூவுலகில் முதல் உயிர்கள்  தோன்றியதோ  அன்றிலிருந்தே  ஒன்றொடு ஒன்று  கொள்ளும் அன்பு , பாசம் , காதல் என்பது  உணவுகளோடு  ஒன்றி  வந்துள்ளது.  உலகத்தின்  முதல் காதலர்கள்  ஆதம், ஏவாள்  என்பதும்,   இன்றைய காதல் என்பது எவ்வாறு உள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே,  அனைவருக்கும் காதல் தோன்றும்  என்றாலும்  அதில் வெற்றி பெறுவதும்,  திருமணத்தில்  முடிவதும்  அவரவர்  விதி  என்றே கூறலாம்.  ஜோதிட ரீதியாக  காதல்  வெற்றி  அல்லது  தோல்வி பெறும்  பொதுவான  கிரக  நிலைகள்  சிலவற்றை  காணலாம்,


ஜோதிட ரீதியாக காதல் உணர்வு,   திருமணம், பாலியல் உணர்வுகளுக்கு சுக்கிரன் காரகன்,  மேலும்   எண்ணமே  காதல்  உணர்வுகளுக்கு  பிரதானமாக இருப்பதால்  மனோகாரகன்  சந்திரன் இந்த இரண்டு  கிரகங்களும்  முக்கிய  காரணங்களாக இருப்பர்,       காதல்  உணர்வுகளுக்கு  செவ்வாயின் பங்கும் உண்டு. ஏனென்றால், செவ்வாய் பெண்களுக்கு  (கணவனை  குறிக்கும் ) களத்திரகாராகனாவார்.   ஒருவரின்  ஜென்ம லக்கினம்  அவரையும், 5ம் வீடும்  காதல், எண்ணம்  ஆகியவற்றையும்,   7ம் வீடும்  திருமணத்தையும்  ( மனைவி (அ ) கணவன்)  குறிக்கிறது,  11ம் வீடு   எண்ணம் வெற்றி பெறுவதையும்  குறிக்கும் ,  மேலும்  5க்கு  11ம்  பாவகமான 3ம் பாவகமும்  இதன் அதிபதிகளும்  வலுபெற்றாலும்,இந்த  கிரகங்களும்   வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் மலரும் .சுக்கிரனும்,  சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்!  அது வெற்றியில் முடியும்,

5,7க்கு அதிபதிகள்  சேர்க்கைப் பெற்றாலும்,  பரிவர்த்தனை பெற்றிருந்தாலும்,  இவர்கள்  ஒருவருக்கொருவர்  பார்த்துக் கொண்டாலும் காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு திருமண த்தில்  முடியும்  வாய்ப்பு உண்டாகும்.

5ல்  பாப  கிரகங்கள் இருந்தாலும்  எளிதில் காதல் வயப்படுவர், ஆனால் 5ம் அதிபதி  பாதிக்கப்பட்டால்  தோல்வியில்  முடியும்.  

சுக்கிரன்,  சந்திரன்,  5,7  அதிபதிகள்   வலு குறைந்தால்   அதாவது நீசம், அஸ்தமனம், வக்கிரம்  6,8,12  மறைவு  பெறுதல்  போன்ற நிலைகள்  காதலில்  தோல்வியையும்,  திருமணம் வரை செல்லா   நிலையும்  தரும்.


நன்றி 
அஸ்ட்ரோ  கண்ணன்