நமது இந்து சமயத்தில் பல தெய்வங்கள் இருந்தாலும் அவரவர் தங்களுக்கென ஒரு இஷ்ட தெய்வ வழிப்பாட்டினில் அதிக ஆர்வம் காட்டுவர்.
ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவகம் பல காரகங்களில் தெய்வ வழிபாடு, குல தெய்வம், இஷ்ட தெய்வம் போன்ற சிலவற்றை கொண்டுள்ளது.
5 ம் பாவகம் சூரியன் வீடானாலும் , 5 ல் சூரியன் இருந்தாலும் சிவன் வழிபாட்டில் ஆர்வம் உடையவர்,
5 ம் பாவகம் சந்திரன் வீடானாலும் , 5 ல் சந்திரன் இருந்தாலும் சக்தி, அம்மன் வழிபாட்டில் ஆர்வம் உடையவர்,
5 ம் பாவகம் செவ்வாய் வீடானாலும் , 5 ல் செவ்வாய் இருந்தாலும் முருகன் வழிபாட்டில் ஆர்வம் உடையவர்,
5 ம் பாவகம் புதன் வீடானாலும், 5 ல் புதன் இருந்தாலும் பெருமாள் வழிபாட்டில் ஆர்வம் உடையவர்,
5 ம் பாவகம் குரு பகவான் வீடானாலும் , 5 ல் குரு பகவான் இருந்தாலும் பிரம்மன், குரு , சித்தர்கள், ஞானிகள் வழிபாட்டில் ஆர்வம் உடையவர்,
5 ம் பாவகம் சுக்கிரன் வீடானாலும், 5 ல் சுக்கிரன் இருந்தாலும் லட்சுமி, அம்மன் வழிபாட்டில் ஆர்வம் உடையவர்,
5 ம் பாவகம் சனி பகவான் வீடானாலும் , 5 ல் சனி பகவான் இருந்தாலும் ஐயப்பன், கருப்பசாமி, ஆஞ்சநேயர், முனிஸ்வரன், போன்ற காவல் தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உடையவர்,
5 ல் ராகு இருந்தால் துர்க்கை பத்ரகாளி போன்ற அம்மன், நாக தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உடையவர்,
5 ல் கேது இருந்தால் கணபதி, சித்தர்கள், நாக தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உடையவர்.
No comments:
Post a Comment