Friday 13 February 2015

காதல் திருமண யோகம்



காதல் இது கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு  முன்பு தோன்றியிருக்க வேண்டும்,  என்றக்கைக்கு  இந்த பூவுலகில் முதல் உயிர்கள்  தோன்றியதோ  அன்றிலிருந்தே  ஒன்றொடு ஒன்று  கொள்ளும் அன்பு , பாசம் , காதல் என்பது  உணவுகளோடு  ஒன்றி  வந்துள்ளது.  உலகத்தின்  முதல் காதலர்கள்  ஆதம், ஏவாள்  என்பதும்,   இன்றைய காதல் என்பது எவ்வாறு உள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே,  அனைவருக்கும் காதல் தோன்றும்  என்றாலும்  அதில் வெற்றி பெறுவதும்,  திருமணத்தில்  முடிவதும்  அவரவர்  விதி  என்றே கூறலாம்.  ஜோதிட ரீதியாக  காதல்  வெற்றி  அல்லது  தோல்வி பெறும்  பொதுவான  கிரக  நிலைகள்  சிலவற்றை  காணலாம்,


ஜோதிட ரீதியாக காதல் உணர்வு,   திருமணம், பாலியல் உணர்வுகளுக்கு சுக்கிரன் காரகன்,  மேலும்   எண்ணமே  காதல்  உணர்வுகளுக்கு  பிரதானமாக இருப்பதால்  மனோகாரகன்  சந்திரன் இந்த இரண்டு  கிரகங்களும்  முக்கிய  காரணங்களாக இருப்பர்,       காதல்  உணர்வுகளுக்கு  செவ்வாயின் பங்கும் உண்டு. ஏனென்றால், செவ்வாய் பெண்களுக்கு  (கணவனை  குறிக்கும் ) களத்திரகாராகனாவார்.   ஒருவரின்  ஜென்ம லக்கினம்  அவரையும், 5ம் வீடும்  காதல், எண்ணம்  ஆகியவற்றையும்,   7ம் வீடும்  திருமணத்தையும்  ( மனைவி (அ ) கணவன்)  குறிக்கிறது,  11ம் வீடு   எண்ணம் வெற்றி பெறுவதையும்  குறிக்கும் ,  மேலும்  5க்கு  11ம்  பாவகமான 3ம் பாவகமும்  இதன் அதிபதிகளும்  வலுபெற்றாலும்,இந்த  கிரகங்களும்   வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் மலரும் .சுக்கிரனும்,  சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்!  அது வெற்றியில் முடியும்,

5,7க்கு அதிபதிகள்  சேர்க்கைப் பெற்றாலும்,  பரிவர்த்தனை பெற்றிருந்தாலும்,  இவர்கள்  ஒருவருக்கொருவர்  பார்த்துக் கொண்டாலும் காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு திருமண த்தில்  முடியும்  வாய்ப்பு உண்டாகும்.

5ல்  பாப  கிரகங்கள் இருந்தாலும்  எளிதில் காதல் வயப்படுவர், ஆனால் 5ம் அதிபதி  பாதிக்கப்பட்டால்  தோல்வியில்  முடியும்.  

சுக்கிரன்,  சந்திரன்,  5,7  அதிபதிகள்   வலு குறைந்தால்   அதாவது நீசம், அஸ்தமனம், வக்கிரம்  6,8,12  மறைவு  பெறுதல்  போன்ற நிலைகள்  காதலில்  தோல்வியையும்,  திருமணம் வரை செல்லா   நிலையும்  தரும்.


நன்றி 
அஸ்ட்ரோ  கண்ணன்


No comments:

Post a Comment