Wednesday 25 March 2015

கிரக சமயம்



ஒரு ஜாதகத்தில்  கிரகங்கள்  பெரும்  வலுவை  பொருத்து  அவை  தனது  திசா, புத்திகளில்  பலன் தரும்,   இவற்றை  ஆட்சி,உச்சம், நட்பு, ஸட்  பலத்தில் பெறும்  வலிமை    போன்றவற்றை  கொண்டு  தீர்மானிக்கிறோம்.  இவை போக சில  முறைகளையும்  ஜோதிட ரிஷிகள் நமக்கு வழங்கியுள்ளனர்.  அவற்றில் ஒன்று கிரக சமயம் . 

இதனை  எவ்வாறு  கணக்கிடுவது என்பதனை ஜோதிட கிரக சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூல் கூறுகிறது.


மேச முதல்  ஜாதகனுடைய ஜன்ம லக்கினம் வரை  எண்ண   வரும்  எண்ணையும்,  இலக்கின முதல் அந்தந்த கிரகமிருக்கிற  ஸ்தானம் வரை  வரும்  எண்ணையும்  பெருக்கி  27ல்  கழித்து  வரும் மிச்சத்தை  எடுத்து கொள்ள வேண்டும் .

 அந்த கிரகத்திற்குரிய  திசா  வருடங்களால்  இந்த மிச்சத்தை  பெருக்கி 27ல்  வகுத்து   வரும்  மிச்சம்  சமயம்  ஆகும் 

 எண்  - சமயம்   -  பலன்  
1-  ஸ்நானம் - மத்திமம்   
2-  அலங்காரம்  - உத்தமம் 
3-  விபூதி சந்தானம் இடல்  - உத்தமம்
4-  செபம்   - உத்தமம்  
5-  சிவ பூஜை  - மத்திமம்   
6-  ஒள பாசனம்  - சமம்
7-  விஷ்ணு பூஜை -சமம்
8- பிராமண பூஜை - மத்திமம் 
9- நமஸ்காரம் - சமம் 
10- பிரதட்சணம் -உத்தமம்
11-வைசுவதேயம் -உத்தமம்
12- அதிதி பூஜை - சமம் 
13-போஜனம்-  உத்தமம்
14-புராணப்பிரசங்கம் -உத்தமம்
15- கோபம்- சமம்
16-தாம்பூலம் - உத்தமம்
17- இராசாங்கம் -உத்தமம்
18-கிரீடம் பூனல் - உத்தமம்
19-சலபானம் -சமம்
20-ஆலிங்கனம் - உத்தமம்
21.- சயனம் - மத்திமம்
22-அமுதபானம்-உத்தமம்
23-மதனலங்காரம் -உத்தமம்
24- லீலை -உத்தமம்
25-போகம்- சமம் 
26-நித்திரை -மத்திமம் 
27-இரத்தின பரீட்சை -உத்தமம்

நன்றி
ஆஸ்ட்ரோ  கண்ணன்

Tuesday 17 March 2015

கிரகணம் குறித்த விளக்க பதிவு


 




ஒவ்வொரு ஆண்டும்  இப்பூவுலகில்  நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும்  ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர  கிரகணம் கூட சம்பவிக்கும்.

ராகு, கேது  என்ற இரு கிரகமும்  சூரிய கிரகணம்,  சந்திர கிரகணம்  ஏற்பட  காரணமான கிரகங்களாகும், ஒன்பது கிரகங்களில்  இந்த இரு கிரகங்களும்  சாய  கிரகங்கள்  என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும்,  விண்வெளியில்  சூரியனது வட்டப்  பாதையும்  சந்திரனது  வட்டப்பாதையும்  வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என  அழைக்கப்படுகிறது.


சூரிய கிரகணம்  அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி  அன்றும்  சம்பவிக்கும்,

சூரிய கிரகணம் 

ஜோதிட  சாஸ்திரபடி  பன்னிரண்டு ராசிகளை  சூரியனும், சந்திரனும் சுற்றி வரும் போது  இருவரும் ஒரே  ராசியில் குறிப்பிட்ட   பாகை  கலை  அளவில் சேர்ந்திருக்கும்  பொழுது  அமாவாசை ஏற்படுகின்றது,  "அமவாஸ" என்ற வடமொழி  சொல்லுக்கு  ஒன்றாக இருத்தல்  என்று  பொருள், சூரியனும், சந்திரனும்  ஒன்றாக  குறிக்கும் "அமவாஸ"  என்னும் சொல்  அமாவாசை என்றானது.

அமாவாசை அன்று  சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்க  இவர்கள் இருவரும் ராகுவின் பிடியிலோ  அல்லது  கேதுவின் பிடியிலோ இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------
 
சந்திர கிரகணம்

பெளர்ணமி  அன்று  சூரியனும் சந்திரனும் சற்றேறக் குறைய 180 பாகை  வித்தியாசத்தில்  இருப்பார்கள், அதாவது  சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருக்கும்.

பெளர்ணமி  அன்று  இவ்விருவரும்  ராகு அல்லது கேதுவின் பிடியிலே இருக்கும் போது  சந்திர கிரகணம் ஏற்படுகிறது.




அறிவியல்ரீதியாக  சூரியன், பூமி, சந்திரன்  ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது  சந்திரனை  பூமியின்  நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே  சந்திர கிரகணம் ஆகும்.     

சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக  ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும்  அழைக்கப்படுகிறது.

சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.


பஞ்சாங்களில்  கிரகணத்தை  பற்றி குறிப்பிடும் போது ஸ்பரிச காலம்,  நிமீலன காலம், மத்யகாலம்,  உ ன்மீலன காலம்,   மோக்ஷ  காலம்  என ஐந்துவித கால முறைகளால் குறிக்கபட்டிருக்கு
ம். 

 ஸ்பர்ச காலம்  என்றால் கிரகணம் ஆரம்பமாகும் நேரமாகும் , நிமீலன காலம் என்றால்  சந்திரன் முழுவதும்  மறைந்து  கண்ணுக்கு தெரியாமல் போகும்  நேரமாகும்,  மத்யகாலம் என்றால்  சந்திரன் முழுவதும்  மறைய  ஆரம்பித்த  நேரத்திற்கும்  மீண்டும் தெரிய ஆரம்பித்த நேரத்திற்கும்  மத்தியில் உள்ள  நேரமாகும், உன்மீலன காலம் என்றால்  ராகு அல்லது கேதுவின்  பிடியிலிருந்து  சந்திரன் வெளிபட்டு  கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்  நேரமாகும். மோக்ஷ  காலம் என்றால்  ராகு அல்லது கேதுவின்  பிடி யிலிருந்து  சந்திரன்  முழுவதும் விடுபட்டு  கண்களுக்கு தெரிய  ஆரம்பிக்கும்  நேரமாகும்.

கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் உணவு உண்பது கூடாது, கிரகணம் ஏற்படும் நாளில்  தாய், தந்தை  மற்றும் மூதாதையருக்கு திதி கொடுக்க கூடாது,  மறுநாளே  இதை செய்ய வேண்டும்.

கிரகணம் பிடித்திருக்கும்  காலத்தில் திருக்கோவில்கள் நடை அடைக்கப்படிருக்கும். கர்ப்பிணி பெண்கள்  வீட்டை விட்டு  வெளியே வரக்கூடாது  என்றும்  சாஸ்திரம் கூறுகிறது.

எந்த நட்சத்திரத்தில்  கிரகணம்  சம்பவிக்கின்றதோ அந்த  நட்சத்திரம் அதற்கு முன், பின்  உள்ள நட்சத்திரங்க்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது அவசியம்.

வரும் 04-04-2015  பங்குனி  மாதம் 21  சனி
க்கிழமை  அன்று மதியம் அஸ்த நட்சத்திரத்தில் ராகு  கிரகஸ்த  சந்திர கிரகணம்  ஏற்படும், இது  இந்தியாவில் தோன்றும்.

ஸ்பரிசம்  : 3.45 P.M,   மத்யம் : 5.30 P.M,   மோக்ஷம்  :7.15 P.M, 
 
ரோகிணி, அஸ்தம்,  திருவோணம், உத்திரம் ,சித்திரை  நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் (திருக்கோவில்களில் அர்சக்கரிடம்  கூறி ) சாந்தி செய்து கொள்வது அவசியம்.

நன்றி
ஆஸ்ட்ரோ  கண்ணன்

Thursday 12 March 2015

கிரக மாலிகா யோகம்


எண்ணிய இலகினங்கண் முதலேழு  வீட்டில் 
இடைவிடா மற்கிரக மாலையென்ன 
நண்ணிடில்  வல்லமியோகம் 

கிரகங்கள் ராசியில்  தொடர்ச்சியாக மாலை போல்  1 முதல் 7ம்  ராசி வரை  இருந்தால்  அது கிரக மாலிகா யோகமாகும்.   ராகு,கேது  தவிர்த்து உண்மை கிரகங்கள்  7ம்  இவ்வாறு இலக்கினம் முதல் ஒவ்வொரு பாவகத்திலும் தொடங்கி அதிலிருந்து   7  ராசிகளில் தொடர்ந்து இருப்பதை  கொண்டு 12 வகையான  கிரக மாலிகா யோகம் ஏற்படும்.

இது  அபூர்வமாக   ஏற்படும்  யோக அமைப்பாகும். ஜாதகத்தில் எந்த பாவகங்களில் இருந்து   இந்த யோகம் தொடங்கிறதோ, அந்த பாவகத்தின் தன்மையை   கொண்டு  சுப,  அசுப  பலன்கள் ஏற்படும்.

1) இலக்கினம் முதல் 7 மிடம் வரை  ​-  கீர்த்தி மாலிகா யோகம். 
2) 2மிடம் முதல் 8 மிடம் வரை  ​-  தன மாலிகா யோகம். 
3)  3 மிடம் 9 மிடம் வரை  ​- ரத்னாவளி மாலிகா யோகம். 
4) 4மிடம் முதல் 10 மிடம் வரை  ​-  வேந்து மாலிகா யோகம். 
3)  5 மிடம் 11மிடம் வரை  ​- பின் மாலிகா யோகம். 
4) 6மிடம் முதல் 12 மிடம் வரை  ​-  தரித்திர மாலிகா யோகம்.
3)  7 மிடம் இலக்கினம்  வரை  ​- காம  மாலிகா யோகம். 
4) 8மிடம் முதல் 2 மிடம் வரை - துர்ப்பாக்கிய  மாலிகா யோகம்.   
5)  9 மிடம் 3 மிடம் வரை ​- சுப  மாலிகா யோகம். 
6) 10 மிடம் முதல் 4 மிடம் வரை  ​-  கீர்த்தி மாலிகா யோகம்.
7)  11 மிடம் 5 மிடம் வரை  ​-  விஜய  மாலிகா யோகம். 
8) 12 மிடம் முதல் 6 மிடம் வரை  ​-  அபதன  மாலிகா யோகம்.


நன்றி 

அஸ்ட்ரோ கண்ணன்

Monday 9 March 2015

ஜாதக ஆய்வு



கண்ணினால் ஐந்தின் ஏழுக்கு அதிபர்கள் 
மண்ணின் மீது அவர் அபெலம் ஆயிடில்
எண்ணு நீர்மை இலாத குடும்பவான் 
பண்ணின்நேர் மொழிப் பைந்தொடிப் பாவையே .

என்ற பாடல் கூறுவது 2,5,7ம் அதிபதிகள் பலம் இழந்திருந்தால் நற்குணம் இல்லாத குடும்பத்தை உடையவனாக இருப்பான்.

ஒருவரின் ஜாதகத்தில் 7ம் பாவகம் மனைவியையும், 5ம் பாவகம் அவரின் குழந்தைகளையும் குறிக்கும், மனைவி, குழந்தைகளை உடைய குடும்பத்தை 2ம் பாவகம் குறிக்கும், இந்த மூன்று பாவக அதிபதிகளும் ஜாதகத்தில் வலு இழந்திருந்தால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய வாய்ப்பில்லை என்பதனை விளக்குகிறது.


ஜாதக ஆய்வு 
இந்த ஜாதகம்  இலக்கின சந்தியில்  கடகமா? சிம்மமா?  என்ற குழப்பத்தில் இருந்த ஜாதகம், நேர திருத்தம்  செய்து  பலன்களோடு  ஒப்பிட்டு சரி  பார்க்கப்பட்டது .

இந்த ஜாதகத்தை  பார்த்த  உடனே  இலக்கினதிபதி  சூரியன் ஆட்சி,  5ம்  பாவக  அதிபதி  குரு உச்சம் ,   2ம் பாவக  அதிபதி புதன்  உச்சம் (ஆட்சி , மூல திரிகோணம் கூட) ,   இலக்கின யோகாதிபதியான  செவ்வாய் 4, 9ம் பாவக  அதிபதி  4ல்  ஆட்சி   ஆகியவற்றை  கொண்டு  பிரபலமான  யோக  ஜாதகம்  என்ற  எண்ணம் தோன்றும்,


ஆனால்  உண்மை  நிலை  என்னவென்றால்   இன்னல்,  துன்பங்கள்  சந்தித்த  ஜாதகம் இது,  அதன் காரணத்தை  பார்ப்போம்.

1) முதலில்  இலக்கினம் :  சிம்மம்,  வாங்கிய  சாரம் மகம்  ( கேது ) (ஆகா  இலக்கினதிபதி  ஆட்சி), ஆனால்   இலக்கின  அசுபர்  ( வக்கிர ) சுக்கிரன்  உடன் சேர்ந்து அவரின் சாரம், இது  ஒரு தீய பலன் தரும் அமைப்பு ,  ஜாதகரை  பிடிவாதம் உடையவராக,   முடிவு  எடுப்பதில்  குழப்ப  நிலையை  தரும்.

2) 2,11 ம் பாவக  அதிபதி புதன்  2ல் உச்சம் (ஆட்சி , மூல திரிகோணம் கூட) , ( அப்போ  தன,லாபம்  ஆகா,ஓகோ,  )   ஆனால்  நிலைமை  நேர் எதிர்,   காரணம் புதன்  12ம்  பாவக அதிபதி சந்தினுடன்   சேர்க்கை,  இயற்கை மற்றும்  இலக்கின  பாவி   சனியின்  பார்வை, 

2ல்  புதன்   (ஆட்சி,உச்சம் )  ஜாதகர் அடிப்படை ஜோதிடம்   அறிந்தவர்.

3) மனைவி, குழந்தை குடும்ப  பிரிவு :   காரணம்  7ம்  பாவக அதிபதி  சனி  8ல் ,  வக்கிரம்  வேறு,   களத்திர  காரகன் சுக்கிரன் அஸ்தமனம்  மற்றும்  குடும்ப   ஸ்தானாதிபதி   புதன் 12ம்  பாவக அதிபதி சந்தினுடன்   சேர்க்கை,  இயற்கை மற்றும் இலக்கின  பாவி   சனியின்  பார்வை,  அடுத்து  புத்திர ஸ்தானாதிபதி ,   புத்திர காரகன்  குரு உச்சம் ஆயிற்றே,  ஆனால்   பயன் என்ன,   தனது    பரம   உச்ச  பாகையை  கடந்து  விட்டார் ,  12ல்   மறைந்து இலக்கின பாவி  புதனின்  நட்சத்திரத்தில், மேலும்   இயற்கை மற்றும்  இலக்கின  பாவி   வக்கிர சனியின்  பார்வை  5 ம்  இடத்திற்கு,

ஆக  மனைவி, மக்கள்,குடும்பம்   என்ற  மூன்று பாவக  அதிபதிகளும் வலு குறைந்து   இவற்றில் திருப்தியற்ற,  பிரிவினை   நிலையை  ஏற்படுத்தியுள்ளது, 

இவற்றை  எல்லாம்  கடந்த ஜாதகர்  ஆயுள் மற்றும் கடன்   பற்றிய   கேள்வியை முன்  வைக்கிறார், காரணம் :   நடப்பு  12ல்   உள்ள 8க்குரிய    குரு திசை, 12க்குரிய சந்திர புக்தி 

ஆயுள்  : 8ல்  சனி  இருந்தால்  ஆயுள் தீர்க்கம் தற்பொழுது   ஆயுளை   பற்றி   கவலை   வேண்டாம், இலக்கின  அதிபதி  ஆட்சி,  8ம்  இடத்தையும், ஆயுள்  காரகன்  சனியையும்  குரு பார்க்கிறார்.

கடன்  குறையுமா?  தன  வரவு  ஓரளவேனும் இருக்குமா ?நடப்பு  குரு  திசையில்,  சந்திர புத்தி   மே -2015  வரை  அதன் பின் செவ்வாய் புத்தி 4,9க்குரிய  யோகாதிபதி  4ல்  ஆட்சி  குரு  பார்வையுடன், தற்பொழுது  இருக்கும்  கடன் நிலை  ஓரளவு  குறைந்து,   தேவையான அளவிற்கு   தன  வரவை  தரும்.

யோகம்  என்று எடுத்தால் 6க்குரிய சனி 8ல் , 8ம் அதிபதி  குரு 12ல்   விபரீத ராஜயோகம் என்னும் அமைப்பில்  சில  திடீர்  சாதகமான  பலன்களை  தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 
9600553314