Monday 9 March 2015

ஜாதக ஆய்வு



கண்ணினால் ஐந்தின் ஏழுக்கு அதிபர்கள் 
மண்ணின் மீது அவர் அபெலம் ஆயிடில்
எண்ணு நீர்மை இலாத குடும்பவான் 
பண்ணின்நேர் மொழிப் பைந்தொடிப் பாவையே .

என்ற பாடல் கூறுவது 2,5,7ம் அதிபதிகள் பலம் இழந்திருந்தால் நற்குணம் இல்லாத குடும்பத்தை உடையவனாக இருப்பான்.

ஒருவரின் ஜாதகத்தில் 7ம் பாவகம் மனைவியையும், 5ம் பாவகம் அவரின் குழந்தைகளையும் குறிக்கும், மனைவி, குழந்தைகளை உடைய குடும்பத்தை 2ம் பாவகம் குறிக்கும், இந்த மூன்று பாவக அதிபதிகளும் ஜாதகத்தில் வலு இழந்திருந்தால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய வாய்ப்பில்லை என்பதனை விளக்குகிறது.


ஜாதக ஆய்வு 
இந்த ஜாதகம்  இலக்கின சந்தியில்  கடகமா? சிம்மமா?  என்ற குழப்பத்தில் இருந்த ஜாதகம், நேர திருத்தம்  செய்து  பலன்களோடு  ஒப்பிட்டு சரி  பார்க்கப்பட்டது .

இந்த ஜாதகத்தை  பார்த்த  உடனே  இலக்கினதிபதி  சூரியன் ஆட்சி,  5ம்  பாவக  அதிபதி  குரு உச்சம் ,   2ம் பாவக  அதிபதி புதன்  உச்சம் (ஆட்சி , மூல திரிகோணம் கூட) ,   இலக்கின யோகாதிபதியான  செவ்வாய் 4, 9ம் பாவக  அதிபதி  4ல்  ஆட்சி   ஆகியவற்றை  கொண்டு  பிரபலமான  யோக  ஜாதகம்  என்ற  எண்ணம் தோன்றும்,


ஆனால்  உண்மை  நிலை  என்னவென்றால்   இன்னல்,  துன்பங்கள்  சந்தித்த  ஜாதகம் இது,  அதன் காரணத்தை  பார்ப்போம்.

1) முதலில்  இலக்கினம் :  சிம்மம்,  வாங்கிய  சாரம் மகம்  ( கேது ) (ஆகா  இலக்கினதிபதி  ஆட்சி), ஆனால்   இலக்கின  அசுபர்  ( வக்கிர ) சுக்கிரன்  உடன் சேர்ந்து அவரின் சாரம், இது  ஒரு தீய பலன் தரும் அமைப்பு ,  ஜாதகரை  பிடிவாதம் உடையவராக,   முடிவு  எடுப்பதில்  குழப்ப  நிலையை  தரும்.

2) 2,11 ம் பாவக  அதிபதி புதன்  2ல் உச்சம் (ஆட்சி , மூல திரிகோணம் கூட) , ( அப்போ  தன,லாபம்  ஆகா,ஓகோ,  )   ஆனால்  நிலைமை  நேர் எதிர்,   காரணம் புதன்  12ம்  பாவக அதிபதி சந்தினுடன்   சேர்க்கை,  இயற்கை மற்றும்  இலக்கின  பாவி   சனியின்  பார்வை, 

2ல்  புதன்   (ஆட்சி,உச்சம் )  ஜாதகர் அடிப்படை ஜோதிடம்   அறிந்தவர்.

3) மனைவி, குழந்தை குடும்ப  பிரிவு :   காரணம்  7ம்  பாவக அதிபதி  சனி  8ல் ,  வக்கிரம்  வேறு,   களத்திர  காரகன் சுக்கிரன் அஸ்தமனம்  மற்றும்  குடும்ப   ஸ்தானாதிபதி   புதன் 12ம்  பாவக அதிபதி சந்தினுடன்   சேர்க்கை,  இயற்கை மற்றும் இலக்கின  பாவி   சனியின்  பார்வை,  அடுத்து  புத்திர ஸ்தானாதிபதி ,   புத்திர காரகன்  குரு உச்சம் ஆயிற்றே,  ஆனால்   பயன் என்ன,   தனது    பரம   உச்ச  பாகையை  கடந்து  விட்டார் ,  12ல்   மறைந்து இலக்கின பாவி  புதனின்  நட்சத்திரத்தில், மேலும்   இயற்கை மற்றும்  இலக்கின  பாவி   வக்கிர சனியின்  பார்வை  5 ம்  இடத்திற்கு,

ஆக  மனைவி, மக்கள்,குடும்பம்   என்ற  மூன்று பாவக  அதிபதிகளும் வலு குறைந்து   இவற்றில் திருப்தியற்ற,  பிரிவினை   நிலையை  ஏற்படுத்தியுள்ளது, 

இவற்றை  எல்லாம்  கடந்த ஜாதகர்  ஆயுள் மற்றும் கடன்   பற்றிய   கேள்வியை முன்  வைக்கிறார், காரணம் :   நடப்பு  12ல்   உள்ள 8க்குரிய    குரு திசை, 12க்குரிய சந்திர புக்தி 

ஆயுள்  : 8ல்  சனி  இருந்தால்  ஆயுள் தீர்க்கம் தற்பொழுது   ஆயுளை   பற்றி   கவலை   வேண்டாம், இலக்கின  அதிபதி  ஆட்சி,  8ம்  இடத்தையும், ஆயுள்  காரகன்  சனியையும்  குரு பார்க்கிறார்.

கடன்  குறையுமா?  தன  வரவு  ஓரளவேனும் இருக்குமா ?நடப்பு  குரு  திசையில்,  சந்திர புத்தி   மே -2015  வரை  அதன் பின் செவ்வாய் புத்தி 4,9க்குரிய  யோகாதிபதி  4ல்  ஆட்சி  குரு  பார்வையுடன், தற்பொழுது  இருக்கும்  கடன் நிலை  ஓரளவு  குறைந்து,   தேவையான அளவிற்கு   தன  வரவை  தரும்.

யோகம்  என்று எடுத்தால் 6க்குரிய சனி 8ல் , 8ம் அதிபதி  குரு 12ல்   விபரீத ராஜயோகம் என்னும் அமைப்பில்  சில  திடீர்  சாதகமான  பலன்களை  தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 
9600553314


No comments:

Post a Comment