Saturday 5 March 2016

சூரிய கிரகணம் ( 9.3.2016 புதன் )


 




ஒவ்வொரு ஆண்டும்  இப்பூவுலகில்  நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும்  ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர  கிரகணம் கூட சம்பவிக்கும்.

ராகு, கேது  என்ற இரு கிரகமும்  சூரிய கிரகணம்,  சந்திர கிரகணம்  ஏற்பட  காரணமான கிரகங்களாகும், ஒன்பது கிரகங்களில்  இந்த இரு கிரகங்களும்  சாய  கிரகங்கள்  என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும்,  விண்வெளியில்  சூரியனது வட்டப்  பாதையும்  சந்திரனது  வட்டப்பாதையும்  வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என  அழைக்கப்படுகிறது.


சூரிய கிரகணம்  அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி  அன்றும்  சம்பவிக்கும்,

சூரிய கிரகணம் 

ஜோதிட  சாஸ்திரபடி  பன்னிரண்டு ராசிகளை  சூரியனும், சந்திரனும் சுற்றி வரும் போது  இருவரும் ஒரே  ராசியில் குறிப்பிட்ட   பாகை  கலை  அளவில் சேர்ந்திருக்கும்  பொழுது  அமாவாசை ஏற்படுகின்றது,  "அமவாஸ" என்ற வடமொழி  சொல்லுக்கு  ஒன்றாக இருத்தல்  என்று  பொருள், சூரியனும், சந்திரனும்  ஒன்றாக  குறிக்கும் "அமவாஸ"  என்னும் சொல்  அமாவாசை என்றானது.

அமாவாசை அன்று  சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்க  இவர்கள் இருவரும் ராகுவின் பிடியிலோ  அல்லது  கேதுவின் பிடியிலோ இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------
 
சந்திர கிரகணம்

பெளர்ணமி  அன்று  சூரியனும் சந்திரனும் சற்றேறக் குறைய 180 பாகை  வித்தியாசத்தில்  இருப்பார்கள், அதாவது  சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருக்கும்.

பெளர்ணமி  அன்று  இவ்விருவரும்  ராகு அல்லது கேதுவின் பிடியிலே இருக்கும் போது  சந்திர கிரகணம் ஏற்படுகிறது.




அறிவியல்ரீதியாக  சூரியன், பூமி, சந்திரன்  ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது  சந்திரனை  பூமியின்  நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே  சந்திர கிரகணம் ஆகும்.     

சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக  ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும்  அழைக்கப்படுகிறது.

சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.


பஞ்சாங்களில்  கிரகணத்தை  பற்றி குறிப்பிடும் போது ஸ்பரிச காலம்,  நிமீலன காலம், மத்யகாலம்,  உ ன்மீலன காலம்,   மோக்ஷ  காலம்  என ஐந்துவித கால முறைகளால் குறிக்கபட்டிருக்கு
ம். 

 ஸ்பர்ச காலம்  என்றால் கிரகணம் ஆரம்பமாகும் நேரமாகும் , நிமீலன காலம் என்றால்  சந்திரன் முழுவதும்  மறைந்து  கண்ணுக்கு தெரியாமல் போகும்  நேரமாகும்,  மத்யகாலம் என்றால்  சந்திரன் முழுவதும்  மறைய  ஆரம்பித்த  நேரத்திற்கும்  மீண்டும் தெரிய ஆரம்பித்த நேரத்திற்கும்  மத்தியில் உள்ள  நேரமாகும், உன்மீலன காலம் என்றால்  ராகு அல்லது கேதுவின்  பிடியிலிருந்து  சந்திரன் வெளிபட்டு  கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்  நேரமாகும். மோக்ஷ  காலம் என்றால்  ராகு அல்லது கேதுவின்  பிடி யிலிருந்து  சந்திரன்  முழுவதும் விடுபட்டு  கண்களுக்கு தெரிய  ஆரம்பிக்கும்  நேரமாகும்.

கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் உணவு உண்பது கூடாது, கிரகணம் ஏற்படும் நாளில்  தாய், தந்தை  மற்றும் மூதாதையருக்கு திதி கொடுக்க கூடாது,  மறுநாளே  இதை செய்ய வேண்டும்.

கிரகணம் பிடித்திருக்கும்  காலத்தில் திருக்கோவில்கள் நடை அடைக்கப்படிருக்கும். கர்ப்பிணி பெண்கள்  வீட்டை விட்டு  வெளியே வரக்கூடாது  என்றும்  சாஸ்திரம் கூறுகிறது.

எந்த நட்சத்திரத்தில்  கிரகணம்  சம்பவிக்கின்றதோ அந்த  நட்சத்திரம் அதற்கு முன், பின்  உள்ள நட்சத்திரங்க்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது அவசியம்.

வரும்  9.3.2016 புதன் அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில்  கேது  கிரகஸ்த  சூரிய கிரகணம் ஏற்படும்,  இது இந்தியாவில் தோன்றும்.

ஸ்பரிசம்  : 5.9 A.M,   மத்யம் : 5.56 A.M,   மோக்ஷம்  : 6.47 A.M, 


புனர்பூசம், விசாகம்,  புரட்டாதி, சதயம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் (திருக்கோவில்களில் அர்சக்கரிடம்  கூறி ) சாந்தி செய்து கொள்வது அவசியம்.

நன்றி
ஆஸ்ட்ரோ  கண்ணன்

Sunday 14 February 2016

மாசி மகாமகம் - 2016

மாசி மகாமகம் - 2016

இந்த  மன்மத ஆண்டு மகாமக ஆண்டாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் 22-2-2016 திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

ஆன்மீக  புராண  வரலாற்றையும், ஜோதிட  ரீதியான  காரணங்களை,  தகவல்களை   பார்ப்போம்.


புராண   வரலாறு
பிரளய  காலத்தில்  உலகம் அழியும் நேரம் வந்தபோது, பிரம்மன் தனது படைப்பு ஆற்றல் எல்லாவற்றையும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்துவிட்டார். கும்பகோணம் பிரளய காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம், நீரில் மிதந்து சென்று பின் பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமான், தரை தட்டிய கும்பத்தின் மீது அம்பைச் செலுத்த, கும்பம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார்.


நவநதிகளின் பாவம் தீர்த்த மகாமக குளம்

நவநதிகளும் கன்னிகைகள் உருவம் கொண்டு சிவபெருமானிடம் சென்று, "மக்கள் எங்கள் நீரில் மூழ்கி தங்களது பாவங்களைப் போக்கிக்கொள்கிறார்கள். அதனால் எங்களிடம் பாவங்கள் சேர்ந்து துன்புறுகிறோம்" என்று முறையிட, அதற்கு சிவபெருமான், "கும்பகோணம் மகாமகக் குளத்தில் மகாமக தினத்தன்று நீராடி உங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்." என்று கூறியதோடு இந்திராதி தேவதைகளுடன் தாமும் பார்வதியுடன் தரிசனம் தருவதாகக் கூறினார். அதன்படி நவகன்னிகைகளும் மகாமகக் குளத்தில் நீராடி தங்களது பாவங்களைப் போக்கிக்கொண்டனர்.

12   ஆண்டுக்கு   ஒருமுறை  வரும்   மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இங்குள்ள திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி உள்ளிட்ட நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது.

ஜோதிட   ரீதியாக 
குரு   பகவான்   மேஷம   முதல்   மீனம் வரை    ஒவ்வொரு   ராசியில்  சஞ்சரிக்கும்  பொழுது    கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி  போன்றவற்றில்  ஒரு  நதி  புனித   தன்மை  அடைவதாகவும்,   அந்த  ஆண்டில்  அந்த  நதியில்   நீராடுவது   சிறப்பு    என்றும்  கருதப்படுகிறது.


சிம்ம ராசியில் குரு பகவான்  இருக்க,  உடன்  சந்திரன்  மக  நட்சத்திரத்தில்  அங்கு  இருக்க,   கும்ப  ராசியில்    சூரியன்    இருக்கும்  கும்ப  மாதம் எனும்  மாசி  மாதத்தில்  வருவது   மகாமகம்  ஆகும்.

அதாவது   சூரியன், பூமி, சந்திரன்,  குரு,  மகம்    நட்சத்திரம்   ஆகிய 5ம்   ஒரே   நேர் கோட்டில்   வரும்   காலமே  மகாமகம்  ஆகும்.    இது 12 ஆண்டுகளுக்கு  ஒருமுறை   வரும்  நிகழ்வாகும்.


மகாமகம்  அன்று  சூரிய உதயத்தில் நதி, குளம், ஆறு, கடல் நீராடல் மிகவும் நன்று.   ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும், முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதும் மிகவும்    சிறந்த   பலன்களை தரும்.  கும்பகோணம் செல்ல இயலாதவர்கள் மாசிமாதத்தில் ஏதேனும் ஒருநாளில் மகாமகம் குளித்தில் நீராடல் நன்று

"ஜோதிட ரத்னா " 
ஆஸ்ட்ரோ கண்ணன் 
பரம்பரை ஜோதிடர் 
9600553314 
Email : astrorkannan@gmail.com 

Wednesday 6 January 2016

ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017




வாக்கிய  பஞ்சாங்க கணிதப்படி வருகிற ஜனவரி 8ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது.  ராகு கன்னி ராசியில்  இருந்து சிம்மம் ராசிக்கும்,   கேது மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர்.

இந்த ஜனவரி முதல் அடுத்த  1 1/2 வருடங்கள்  இவர்கள்  தரும் பலன்களை  காண்போம்.  

அதற்கு முன்  நிழல்  கிரகங்களான  ராகு, கேதுவை  பற்றிய  ஜோதிட   விபரங்களை  பார்ப்போம்.
வான சாத்திர அடிப்படையில் ராகு, கேது கிரகங்கள் அல்ல, கிரகணத்தை ஏற்படுத்தும் புள்ளிகள், நிழல் கிரகங்கள்.

இவற்றிக்கென ஆட்சி, உச்ச, நீச வீடுகள் இல்லை.சில கிரகங்களின் வீடுகளில் இவர்கள் ஆட்சி பெறுவதாக ஜோதிட மூல நூல்கள் பலவற்றில் கூறப்படுள்ளது.



சோதிடவியலில் எட்டாவது கோளான இராகுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.

கரும்பாம்பு , தமம், மதாப்பகை, மதாயுணி ஆகியனவாகும்.


பால் : பெண் கிரகம்.

நிறம் : கருமை.

வடிவம் : உயரம்.

அவயம் : தொடை,பாதம், கணுக்கால்.

உலோகம் : கருங்கல்.
ரத்தினம் : கோமேதகம்.
ஆடை : கறுப்புடன் சித்திரங்கள் சேர்ந்தது.
மலர் : மந்தாரை.
வாகனம் : ஆடு.
சமித்து : அறுகு.
சுவை : கைப்பு.
தான்யம் : உளுந்து.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : பித்த நாடி.
திக்கு : தென் மேற்கு.
அதி தேவதை : காளி,துர்க்கை,
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : கொடி.
நட்பு கோள்கள் : சனி, சுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 18 ஆண்டுகள்.

நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : கன்னி.
நீசம் பெற்ற இடம் : ரிசபம்.
உச்சம் பெற்ற இடம் : விருச்சிகம்.
மூலதிரிகோணம் : கும்பம்.
உப கிரகம் : வியதீபாதன்.
காரகத்துவம் : பிதாமஹன். (பிதுர் பாட்டன் )

சேவகத்தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமான தொழில், விகட வினோத வித்தைகள், குஷ்டம், நாள்பட்ட ரோகம், களவு, விஷ்பயம், அங்கவீனம், வெகு பேச்சு, ஜல கண்டம், வெட்டுக்காயம், சிரைப்படல் இவைகளுக்கு எல்லாம் இராகு தான் காரகன்.


..................................................................................................................................................................

சோதிடவியலில் ஒன்பதாவது கோளான கேதுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.  கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை ஆகியனவாகும்.


பால் : அலிக் கிரகம்.

நிறம் : சிவப்பு.

வடிவம் : உயரம்.

அவயம் : கை, தோள்.

உலோகம் : துருக்கல்.

ரத்தினம் : வைடூரியம்.

மலர் : செவ்வல்லி.

வாகனம் : சிம்மம்.

சமித்து : தர்ப்பை.

சுவை : உறைப்பு.

தான்யம் : கோதுமை.

பஞ்ச பூதம் : ஆகாயம்.

நாடி : பித்த நாடி.

திக்கு : வட மேற்கு.

அதி தேவதை : விநாயகர், சண்டிகேச்வரர்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.

ஆசன வடிவம் : மூச்சில்.
நட்பு கோள்கள் : சனி, சசுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 7 ஆண்டுகள்.
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : மீனம்.
நீசம் பெற்ற இடம் : சிம்மம்.
உச்சம் பெற்ற இடம் : கும்பம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உப கிரகம் : தூமகேது.
காரகத்துவம் : மதாமஹன்.

மாதுர் பாட்டன் வம்சம், கபடத்தொழில், கீழ்குலத்தொழில், பாபத்தொழில், பரதேச ஜீவனம், அக்னிகண்டம் இவைகளுக்கு எல்லாம் கேது தான் காரகன்.
...................................................................................................................................................................
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்  மேஷம்  முதல் மீனம்  வரை


மேசம்
மேசம்  ராசிக்கு 11 ல் லாபஸ்தானத்தில் கேதுவும் . 5ல்  ராகுவும்  பெயர்ச்சி அடைக்கின்றனர்,  பாவகிரகங்கள்   லாபஸ்தானத்துக்கு வருவது நல்லது. லாபம் பெருகும்.சேமிப்பு உயரும்,  முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


5 ஆம்  வீடான  சிம்மத்தில்  ராகு பூர்வீகத்தில்  பிரச்சினைகள்  தரும், குழந்தைகள்   உடல்   நலனில் கவனம்  தேவை,   மருத்துவ செலவுகள்  ஏற்படும்,   தொழில், வேலையில் முன்னேற்றம்  ஏற்படும்.  எனினும் உடன்  குரு  இருப்பதால் தீய  பலன்கள் குறையும்,    அஷ்டம சனி காலம் நடைபெற்றாலும்,  குருவின்  பார்வை  ராசிக்கு  இருப்பதால்  கவலை பட  தேவையில்லை,   குல தெய்வ வழிபாடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு  உதவுவது  சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................

ரிசபம்
ரிசப  ராசிக்கு  4ல் ராகுவும்,  10 கேதுவும்  பெயர்ச்சிடைகின்றனர்,  சுக ஸ்தானத்தில்  ராகு  உடல் நலனை பாதிக்கும்,  மருத்துவ பரிசோதனை செய்து  கொள்வது  நலம்,  வீடு, இருப்பிட மாற்றம் ஏற்படும்,  வாகன போக்குவரத்தில்  கவனம் தேவை, 10ல் கேது தொழில், வேலையில்  மந்த நிலை ஏற்பட வாய்ப்புண்டு,  புதிய முதலீடுகள், வியாபாரம் போன்றவற்றை நன்கு ஆலோசித்து  செய்தல் வேண்டும்.  7ல்  சனி இருந்து ராசியை பார்ப்பதால்  ஜூன் வரை சாதகமான நிலை இல்லை. குல தேய்வ வழிபாடு,  உடல் ஊனமுற்றோருக்கு உதவுவது சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................

மிதுனம்
மிதுன ராசிக்கு 3ல் ராகுவும், 9ல் கேதுவும் பெயர்ச்சியடை கின்றனர், 3 ராகுவிற்கு உகந்த இடம், புதிய முயற்சிகள், காரியங்களில்  வெற்றி, லாபம் கிடைக்கும்.   9 ல்   கேது  ஆன்மீக பயணங்கள்  சென்று வருவீர்கள்,  தந்தைக்கு  உடல் நலனில்  பாதிப்பு ஏற்படலாம்,   தந்தை வழி உறவுகளால் சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு,  வேலை, தொழில்  தொடபான வெளிநாடு முயற்சி உடையவர்களுக்கு வெற்றி கிட்டும். 

ஸ்ரீ ரங்கநாதரை  தரிச்சித்தல்,   புனித நதிகளில் நீராடுதல்,  சாது, சந்நியாசிகளுக்கு  அன்னதானம்  செய்தல்  சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................

கடகம்
கடக ராசிக்கு  2ல்  ராகு மற்றும் 8 ல்  கேது  பெயர்ச்சியாகின்றனர்.  2 மிட ராகு பேச்சில் கவனம் தேவை, உடல் குரு இருப்பதால்  சிறந்த  தன லாபத்தை தரும்,  பொருளாதார மேன்மை ஏற்படும்,   உணவில் கவனம் தேவை.


8ல் கேது  உடல் நலக்குறைவு , சோர்வு, தடுமாற்றம் ஏற்படும், போக்குவரத்து வாகனங்களில்  கவனம் தேவை,  குரு பார்வை இருப்பதால் தீமைகள் குறையும்,  தீடீர்  அதிர்ஷ்டம்  மூலம் தன  வரவு உண்டு. 

அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு,  அன்னதானம் செய்வது       சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................

சிம்மம்
சிம்மம் ராசியில்  ராகு  7ல் கேது 
பெயர்ச்சியடைக்கின்றனர்,
இது வரை ராகு, கேது  இருந்த இடம் சிறப்பல்ல மேலும் தற்போது இவர்கள் வரும் இடமும் அவ்வளவு சிறப்பில்லை,  மன குழப்பம், சஞ்சலம்,  ஏற்படும்,  புதிய முடிவுகளில்  கவனம் தேவை, கணவன், மனைவி  உறவில்  சிறு சிறு பிரச்சனைகள்  உருவாகும், புதிய நண்பர்களால் சில ஏமாற்றங்கள், இழப்புகள் ஏற்படலாம்.  

ராசியில்  இருந்து குரு பார்க்கும் இடங்களால் நன்மைகள் அதிகம் ஏற்படும்,  இறைவழிப்பாட்டில்  ஈடுபாடு அதிகரிக்கும்,  

சிவ பெருமான் வழிபாடு,  காளகஸ்தி, திரு நாகேஸ்வரம்,  போன்ற   ராகு, கேது  ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது  சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................

கன்னி
கன்னி  ராசிக்கு   ஜென்மத்தில் இருந்து  ராகு   12ம் இடத்திற்கும்,  7ல் இருந்த கேது  6ம் இடத்திற்கும்  பெயர்ச்சியடைக்கின்றனர்.

இது ஒரு பொற்காலமாகும், காரியங்களில் இருந்த தடை, தாமதம் விலகி  வெற்றி  கிட்டும், மன குழப்பம்  நீங்கி மகிழ்ச்சி பெருகும்.  எதிரிகள், தொழில்  போட்டியாளர்கள்  பின் வாங்குவர்,  கடன்,  நோய்  தீரும், சேமிப்பு உயரும்,  பிரிந்தவர்கள்  ஒன்று சேர்வர். 

குலதெய்வ  வழிபாடு,  ஸ்ரீ ரங்கம், திருவனந்தபுரம்  பெருமாள் வழிபாடு திருக்கோவில்  நல பணிகளுக்கு  நன்கொடை  அளிப்பது  சிறந்த பலன்களை தரும்.
...................................................................................................................................................................

துலாம்
துலாம் ராசிக்கு 11ல் ராகுவும், 5ல்
கேதுவும் பெயர்ச்சியடைகின்றனர்,

லாப  ஸ்தானமான  11ல்   ராகு வருவது   நன்மையே,  லாபம் பெருகும், உடன்  குரு இருப்பது சிறப்பு, பொருளாதார நிலை உயரும்,  ஏற்கெனவே  தொடங்கிய காரியங்களிலும் வெற்றி  கிடைக்கும்.  வெளிநாடு  தொடர்பு    வியாபாரங்களில் மேன்மை உண்டு,  வெளிநாடு முயற்சி  வெற்றி தரும்,  5ல் கேது  குழந்தைகள்  வகையில்  மருத்துவ செலவு,  பூர்வீக  தொடர்பு பிரச்சனைகள்  ஏற்படலாம்,  முக்கிய முடிவுகளில் கவனம் தேவை,

குல தெய்வ வழிபாடு, சித்தர்கள் வழிபாடு,  விநாயகர் வழிபாடு, அன்னதானம் செய்வது  சிறந்த பலன்களை தரும். 
...................................................................................................................................................................

விருச்சிகம்
ராசிக்கு 10ல் ராகுவும், 4 ல் கேதுவும் பெயர்ச்சிடைகின்றனர். பொதுவாக 10ல் பாப கிரகங்களாவது இருக்க வேண்டும் என்பர்,  10ம் இட ராகு தொழில் போட்டியை ஏற்படுத்தி உங்கள் திறமையை வெளி கொணரும்,கடின உழைப்பால் முன்னேறுவீர்கள்,  தொழில் பன்மடங்கு  பெருகும்,  லபாம் கிட்டும்,  சுக ஸ்தானமான 4ல்  கேது உடல்நலன் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவு அதிகரிக்கும், ஜென்ம சனியும் நடைபெறுவதால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நலம். 

விநாயகர்  வழிபாடு, சனி பகவான் வழிபாடு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலன்களை தரும். 
...................................................................................................................................................................

தனுசு
ராசிக்கு 9 ல் ராகுவும்  3ல் கேது பெயர்ச்சிடைகின்றனர். தொழில், வேலை  சம்பந்தமான வெளிநாடு, வெளி மாநில  தொடர்பு நீண்ட   தூர பயணங்கள் ஏற்படும், வெளிநாடு முயற்சி வெற்றி  தரும்,  தந்தைக்கு உடல் நல  குறைவு  ஏற்படலாம். சகோதரர்களுடன் சிறு பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு,  பண பரிவர்த்தனை, போக்குவரத்தில்  கவனம் தேவை,  ஏழரை சனி காலம் நடைபெற்றாலும், ராசிக்கு குரு பார்வை இருப்பதால் தீமைகள் குறையும்,  இஷ்ட தெய்வ வழிபாடு,  குரு பகவான் வழிபாடு  செய்வது,  திருக்கோவில் பணிகளில் ஈடுபடுதல்  போன்றவை சிறந்த பலன்களை தரும். 

...................................................................................................................................................................

மகரம்
ராசிக்கு  8ல்  ராகு   2 ல் கேது பெயர்ச்சிடைகின்றனர். 

உடல் நல குறைவு  ஏற்படலாம், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்,
குடும்பத்தில் பேச்சினில் கவனம் தேவை,   திடீர் பண வரவும் உண்டு, புதிய திட்டம், முயற்சிகளில்  சிறு தாமதம் ஏற்படும். மன குழப்பம் தரும்,  எதிரிகள்  தொல்லை நீங்கும், கடன்கள் குறையும்.  ஜூன் வரை கவனம் தேவை,  துர்க்கை வழிபாடு,  காளகஸ்தி  சென்று வாழிபாடு செய்தல், உடல் ஊனமுற்றோர்,  வயதானவர்களுக்கு  அன்னதானம் செய்தல்  சிறந்த பலன்களை தரும். 
...................................................................................................................................................................

கும்பம்
ராசிக்கு  7ல்  ராகு,   ராசியில்  கேது பெயர்ச்சிடைகின்றனர். 

கணவன் மனைவி  இடையே சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும், 
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண  காலம்,  வீண்  கவலை, குழப்பம் ஏற்படலாம்,  புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை,   உடன் குரு இருப்பதால் கவலை கொள்ள தேவை இல்லை, தீய பலன்கள் குறையும்,  வருமானம் அதிகரிக்கும்,  கடன்கள் குறையும், 
உற்சாகமாக  இருத்தல்,  விநாயகர் வழிபாடு,  செவ்வாய்கிழமை   ராகுகால  வழிபாடு,  குல தெய்வ வழிபாடு செய்தல்  சிறந்த பலன்களை தரும். 
...................................................................................................................................................................

மீனம்
ராசிக்கு  6ல்  ராகு,    12ல்  கேது பெயர்ச்சிடைகின்றனர். 

மீன ராசிக்கு சிறந்த காலம், எதிரிகள் தொல்லை நீங்கும், வழக்குகளில்  சாதகமான  தீர்ப்பு கிடைக்கும்,  புதிய முதலீடுகள் அதிகரிக்கும், கடன்கள் கிடைக்கும், தன வரவு நன்றாக இருக்கும், தொழில், வேலையில் இருந்த மந்த போக்கு  நீங்கி  சுறுசுறுப்பு  அடையும், அந்நிய  நபர்களால் ஆதாயம் உண்டு,  பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர், ஜூன் வரை குரு 6ல் இருப்பதால்  சற்று கவனமாக  செயல்படுதல் நன்று,  குரு பகவான் வழிபாடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு  உணவளித்தல்   சிறந்த பலன்களை தரும்.


Call or whatsapp  : +91 9600 55 3314

email :  astrorkannan@gmail.com