Monday 13 April 2015

12 ராசிகளின் மன்மத வருட ஆதாய விரயம்



அனைவருக்கும் வணக்கம் 
ஒவ்வொரு  தமிழ் வருடத்திலும்  12  ராசிகளின் ஆதாய  விரய கணிதம் எவ்வாறு  கணக்கிட ப்படுகின்றது  என் பதனை  பார்ப்போம்.


நமது முன்னோர்கள்  கிரகங்களுக்கும், ராசிகளுக்கும் என  சில எண்களை கணக்கில் கொண்டுள்ளனர்.




ராசிகளின் கதிர்கள் 

மேஷம்   - 8,  ரிசபம்  - 21,   மிதுனம்   -17,    கடகம்   - 2,  
சிம்மம் -  6,  கன்னி   - 17,  துலாம் - 21,  விருச்சிகம்   - 8,  தனுசு    - 19,   மகரம்  - 10,   கும்பம்  - 10,    மீனம்   - 19,


கிரகங்களின் கதிர்கள் 

சூரியன் -  6,   சந்திரன் -2,   செவ்வாய் - 8,   புதன் -17,   குரு- 19, சுக்கிரன் - 21,   சனி -10   


ஒரு தமிழ் வருடத்தின் ராஜாவாக வரும் கிரகத்தின் கதிரையும்,அந்தந்த ராசிகளின்  கதிர்களையும் கூட்டி வரும் தொகையை   3ல் பெருக்கி 5 ஐ க்  கூட்டி  15 ஆல்  வகுக்க வரும்  மீதம் ஆதமாகும்,   மீதம்  இல்லாவிட்டால் 15  என  வைத்துக் கொள்ள வேண்டும்.



1.ஆதாயம் 

மன்மத வருடத்தில்  சிம்ம ராசிக்கு ஆதாயம்  கண்டறிய  சிம்ம ராசியின் கதிராகிய  6 உடன்   மன்மத வருட  ராஜாவாகிய சனியின் கதிராகிய  10ஐ க்  கூட்டி  (6+10 : 16 )  3ல் பெருக்கி   (16 x 3 = 48)  வரும்  விடையுடன்  5 ஐ க்  கூட்டி (48+5= 53) 15 ஆல்  வகுக்க  (53 /15 = ஈவு  3  மீதம் 8)  வருதால்  சிம்மராசியின்  ஆதாயம்  8 ஆகும்.


2.விரையம் 

ஆதயத்தில்  வருகின்ற  ஈவை 3 ஆல்  பெருக்கி 5 ஐ க்  கூட்டி 15 ஆல்  வகுக்க  வரும்  மீதம் விரையம் ஆகும். மீதம்  இல்லாவிட்டால் 15  என  வைத்துக் கொள்ள வேண்டும்.


சிம்ம ராசியின்  விரையம்  =   ஆதயத்தில்  வரும் ஈவு  3 x 3 = 9+5= 14  

14 -15  ஆல்  வகுபடாது  எனவே 
சிம்மராசியின்  விரையம்  14 ஆகும் .

மன்மத வருட   ஆதாய  விரயம்

ராசி                                    ஆதாயம்    விரயம்    

மேஷம்,  விருச்சிகம்       14              14    

ரிசபம்,  துலாம்                   08               08       

மிதுனம் , கன்னி                 11                 05      

கடகம்                                    11                 11

சிம்மம்                                   08                 14    

தனுசு, மீனம்                       02                 08 

மகரம்,   கும்பம்                  05                 02        

………………………………………………………….     

மொத்தம்                             59                62                                    ………………………………………………………….    



நன்றி 

அஸ்ட்ரோ கண்ணன்
9600553314                                                                               









Sunday 12 April 2015

மன்மத வருட- நவ நாயகர்கள்

அனைவருக்கும்  மன்மத வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நமது  தமிழ் வருட பஞ்சாங்கங்களில் முதல் பக்கத்தில் அந்த வருடத்தின்  நவ நாயகர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும், இதனை  எவ்வாறு கணிதம் செய்கின்றனர் என்பது  பெரும்பாலும்  பஞ்சாங்க கணிதர்களுக்கும், பரம்பரை ஜோதிடர்களுக்கும் மட்டும் தெரிந்திருக்கும்  விடயம் 

மன்மத வருட- நவ நாயகர்கள் 

இராஜா          -  சனி
மந்திரி           -  செவ்வாய் 
சேனாதிபதி    - சந்திரன் 
அர்க்காதிபதி -  சந்திரன் 
ஸஸ்யாதிபதி -  குரு 
இரஸாதிபதி  -  சனி
தான்யாதிபதி - புதன் 
மேகாதிபதி   - சந்திரன் 
நீரஸாதிபதி  -  குரு 

இது  போல  ஒவ்வொரு  தமிழ் வருடத்திலும்   இராஜா,மந்திரி,சேனாதிபதி, அர்க்காதிபதி, ஸஸ்யாதிபதி, இரஸாதிபதி, தான்யாதிபதி, மேகாதிபதி, நீரஸாதிபதி   ஆக சில கிரகங்கள் வருவார்கள்  இவைகளை  எவ்வாறு  கணிதம் செய்கின்றனர் என்பதனை  பார்ப்போம்.

1.ராஜா 
ஒருவருடத்தின்  கடைசி  மாதமான  பங்குனி மாதம் வளர்பிறை  பிரதமை   திதி  வரும்  கிழமையின் அதிபதி ,  அடுத்த  தமிழ் வருடத்தின்  இராஜா ஆவார். 

ஜய  வருஷம் பங்குனி மாதம் வளர்பிறை பிரதமை சனிக்கிழமை வருவதால் சனி பகவான் அடுத்து வரும்  மன்மத வருஷத்தின்  ராஜா ஆவார்.


2.மந்திரி
தமிழ்  வருடத்தின்  முதல்  நாள்  ( சித்திரை  -1 )   என்ன கிழமையில் வருகிறது   அதன்  அதிபதி அந்த வருடத்தின்  மந்திரி   ஆவார்.

மன்மத வருஷம்  சித்திரை  1ம்  நாள் செவ்வாய்க்கிழமை  வருவதால் செவ்வாய்  இந்த வருஷ மந்திரி  ஆவார். 

3.சேனாதிபதி 
சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி சேனாதிபதி அந்த வருடத்தின் ஆவார்.

மன்மத வருஷம்  ஆடி மாதம் 32ம் நாள் 16 நாழிகை, 02 வினாடிக்கு சூரியன் மகம் 1ம் பாதத்தில் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று திங்கள் கிழமை ஆதலால்  மன்மத வருஷ சேனாதிபதி சந்திரன் ஆவார்.

4.அர்க்காதிபதி
மிதுன ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி   அந்த வருடத்தின் அர்க்காதிபதி ஆவார்.

மன்மத வருஷம்  வைகாசி  மாதம் 32ம் நாள் 28 நாழிகை, 23 வினாடிக்கு சூரியன் மிருகசீரிசம்   3ம் பாதத்தில்  மிதுன  ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று திங்கள் கிழமை  ஆதலால்  மன்மத வருஷ அர்க்காதிபதி சந்திரன் ஆவார்.
   

5.ஸஸ்யாதிபதி
கடக  ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி   அந்த வருடத்தின் ஸஸ்யாதிபதி ஆவார்.

மன்மத வருஷம்  ஆனி மாதம் 31ம் நாள் 15 நாழிகை, 10 வினாடிக்கு சூரியன் புனர்பூசம்   4ம் பாதத்தில் கடக  ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று வியாழக்கிழமை  ஆதலால்  மன்மத வருஷ ஸஸ்யாதிபதி குரு ஆவார்.
   

6.இரஸாதிபதி
துலாம்  ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி   அந்த வருடத்தின் இரஸாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் புரட்டாசி  மாதம் 30ம் நாள் 45 நாழிகை, 29 வினாடிக்கு சூரியன் சித்திரை  3ம் பாதத்தில்  துலாம்  ராசியில் பிரவேசிக்கிறார் .
அன்று சனிக்கிழமை  ஆதலால்  மன்மத வருஷ இரஸாதிபதி சனி பகவான் ஆவார்.

7.தான்யாதிபதி
தனுசு  ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி   அந்த வருடத்தின்  தான்யாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் கார்த்திகை  மாதம் 30ம் நாள் 20 நாழிகை, 29 வினாடிக்கு சூரியன் மூலம் 1ம் பாதத்தில் தனுசு  ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று புதன்கிழமை  ஆதலால்  மன்மத வருஷ தான்யாதிபதி புதன் ஆவார்.


8. மேகாதிபதி
திருவாதிரை  முதல் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி   அந்த வருடத்தின்  மேகாதிபதி  ஆவார்.

மன்மத வருஷம் ஆனி மாதம் 7ம் நாள்  திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில்  சூரியன் பிரவேசிப்பதால் ,  மன்மத வருஷ மேகாதிபதி சந்திரன் ஆவார்.


9.  நீரஸாதிபதி
மகர  ராசியில்  சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி   அந்த வருடத்தின்  நீரஸாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் மார்கழி  மாதம் 29ம் நாள் 45 நாழிகை, 41 வினாடிக்கு சூரியன்  மகர  ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று  வியாழக்கிழமை ஆதலால் மன்மத வருஷ நீரஸாதிபதி  குரு ஆவார்.

12  ராசிகளின் ஆதாய  விரய கணிதம்  எவ்வாறு கணக்கிடப்படுகின்றது  என்பது இனி வரும் பதிவுகளில்


நன்றி 
அஸ்ட்ரோ கண்ணன்
9600553314