Saturday 23 August 2014

கே.பி ஜோதிட சூட்சுமம்


கே.பி  ஜோதிட சூட்சுமம்

வெளிநாடு  யோகம் :
12ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற உப நட்சத்திர  அதிபதி  3, 9 , 12 ம்  பாவகங்களை  குறிகாட்டி  திசா புக்தி  நடைபெற்றால்  ஜாதகர் வெளிநாடு செல்வார்

மேலும்  பயணம்  விமானம்  அல்லது கப்பல் மூலமகவா என  வினவினால்

12ம் பாவக உப நட்சத்திர  அதிபதி விரைவா நகரும்  சந்திரன், சுக்கிரன், புதன் போன்ற  கிரகங்களாக
இருந்து  காற்று ராசிகளில் இருந்தால்  விமானம் மூலம் பயணம் செய்வார் .

12ம் பாவக உப நட்சத்திர அதிபதி மெதுவாகநகரும்   சனி, குரு போன்ற  கிரகங்களாக இருந்து நீர் ராசிகளில் இருந்தால்  விமானம் மூலம் பயணம் செய்வார் .

இது போல  கே .பி   முறையில்  இராசிகளின்  தன்மைகளை கொண்டு  பலன்களை  பிரித்து  சொல்லலாம்.


Friday 15 August 2014

ஒவ்வொரு பாவகமும் பல்வேறு காரகங்களைதன்னுள் கொண்டுள்ளது.



ஒரு ஜாதகத்தில் ஒரு பாவக (உப பாவக ) காரக முலம் கிடைக்கும்
நன்மையை ஜாதகர் முழுவதும் பெற முடியாத நிலை  எப்பொழுது ஏற்படுகிறது ?

பாவகம் + பாவகாதிபதி + காரகன் மூன்றும் பாதிப்படும் பொழுது தான் இந்த நிலை ஏற்படுகிறது.


1.பாவகம் (பாவகத்தில் இயற்கை அல்லது, இலக்கின பாவிகள் இருப்பது, பார்ப்பது, பாவகம் பாப கத்தரி பெறுவது, )


2. பாவகாதிபதி (பகை., நீசம் , அஸ்தமனம், பாப கிரக பார்வை சேர்க்கை , கிரக யுத்தத்தில் தோல்வி பெறுவது, )


3. காரகன் (பகை., நீசம் , அஸ்தமனம், பாப கிரக பார்வை சேர்க்கை , கிரக யுத்தத்தில் தோல்வி பெறுவது, )


உ.தா 7ம் பாவகமும், 7ம் பாவக அதிபதியும், 7 ம் பாவக காரகன் சுக்கிரனும் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் 7ம் பாவக காரகமான களத்திரம் (கணவன், மனனவி ) அமையா நிலையம், திருமணம்
நடந்தாலும் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலையம், பிரிவும் ஏற்படுகிறது.


உ.தா 4ம் பாவகம் தன்னுள் கொண்டுள்ள காரகங்கள்


1.தாயார், 2. நிலம், 3.வீடு , 4.வாகனம் , 5.கல்வி
இவற்றில் 4ம் பாவகம் + 4ம் பாவகாதிபதி+ காரகர் : சந்திரன் என மூன்றும் பாதிக்கப்பட்டால் மட்டுமே ஜாதகர் தாயார் மூலம்   நன்மையை அடைய முடியாத நிலை ஏற்படும்

4 ம் பாவகத்தின் மற்ற காரகங்க்களான நிலம் காரகர் : செவ்வாய் / வீடு , காரகர் : சுக்கிரன் வாகனம் காரகர் : சுக்கிரன் /  கல்வி : புதன் இந்நிலையில் பாதிக்கபடும் பொழுது நன்மையை அடைய முடியாத நிலை ஏற்படும் இவற்றில் மூன்றில் ஒன்று இரண்டு பாதிப்பட்டால் அதற்கு தகுந்தாற்போல் நன்மை அடையும் அளவீடுகள்
மாற்றம் அடையலாம்.

மற்ற பாவகங்கள்

பாவகம் - உப பாவகம் - காரகர்

1ம் பாவகம் - இலக்கினம் - சூரியன்
2ம் பாவகம் - தனம் -குரு
2ம் பாவகம் - வாக்கு - புதன்
3ம் பாவகம் - சகோதரம் -செவ்வாய்
5ம் பாவகம் - புத்திரம் - குரு
6ம் பாவகம் - கடன் - செவ்வாய்
6ம் பாவகம் - நோய் - சனி
8ம் பாவகம் -ஆயுள் - சனி
9ம் பாவகம் -தந்தை - சூரியன்
9ம் பாவகம் - தர்மம் - குரு
10 பாவகம் - தொழில் - சனி
11 பாவகம் - லாபம் - குரு
12 பாவகம் - விரையம்   - சனி
12 பாவகம் - மோக்ஷம் - குரு


கே. எஸ். கே அவர்களின் ஜோதிட விதிகள்

கே. எஸ். கே   அவர்களின்  ஜோதிட விதிகள் 

1ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
மரக ,  பாதக  ஸ்தானங்களுக்கு  குறிகாட்டினால்  ஆயுள் குறைவு.

2 ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
2,6, 10, 11ம்  பாவகங்களுக்கு  குறிகாட்டினால்  பொருளாதாரம் 
சிறப்பாக இருக்கும் .

3ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
3, 11    பாவகங்களுக்கு    குறிகாட்டினால்   கமிசன்  தொழிலில் 
லாபம் உண்டு .

4ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
4, 11    பாவகங்களுக்கு    குறிகாட்டினால்   வீடு , வாகன 
அமைப்பு  உண்டு.

5ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
5, 11    பாவகங்களுக்கு    குறிகாட்டினால்   குழந்தைகள்  உண்டு.

6ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
2, 6 , 10,   பாவகங்களுக்கு    குறிகாட்டினால்   வேலை கிடைக்கும்.

7ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
2,7 , 11   பாவகங்களுக்கு    குறிகாட்டினால்   திருமணம் உண்டு

8 ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
6, 8,11    பாவகங்களுக்கு   குறிகாட்டினால்   நன்கொடை  கிடைக்கும்.

9ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
4,9 , 11    பாவகங்களுக்கு    குறிகாட்டினால்   உயர் கல்வி யோகம் உண்டு.

10 ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
2,6 10, 11ம்  பாவகங்களுக்கு    குறிகாட்டினால்   பதவி உயர்வு  உண்டு .

11ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
2,6,11   பாவகங்களுக்கு    குறிகாட்டினால்   வெற்றிகரமான மனிதர் 

12ம் பாவக உப நட்சத்திர  அதிபதி, நின்ற நட்சத்திர  அதிபதி 
3, 9,12   பாவகங்களுக்கு    குறிகாட்டினால்  வெளிநாடு யோகம்  உண்டு .
கே. எஸ். கே அவர்களின் ஜோதிட விதிகள் 

1ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதிமரக , பாதக ஸ்தானங்களுக்கு குறிகாட்டினால் ஆயுள் குறைவு.

2 ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 2,6, 10, 11ம் பாவகங்களுக்கு குறிகாட்டினால் பொருளாதாரம்  சிறப்பாக  இருக்கும் .

3ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 3, 11 பாவகங்களுக்கு குறிகாட்டினால் கமிசன் தொழிலில் லாபம் உண்டு .

4ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 4, 11 பாவகங்களுக்கு குறிகாட்டினால் வீடு , வாகன அமைப்பு உண்டு.

5ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 5, 11 பாவகங்களுக்கு குறிகாட்டினால் குழந்தைகள் உண்டு.

6ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 2, 6 , 10, பாவகங்களுக்கு குறிகாட்டினால் வேலை கிடைக்கும்.

7ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 2, 7 , 11 பாவகங்களுக்கு குறிகாட்டினால் திருமணம் உண்டு

8 ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 6, 8,11 பாவகங்களுக்கு குறிகாட்டினால் நன்கொடை கிடைக்கும்.

9ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 4,9 , 11 பாவகங்களுக்கு குறிகாட்டினால் உயர் கல்வி யோகம் உண்டு.

10 ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 2,6 10, 11ம் பாவகங்களுக்கு குறிகாட்டினால் பதவி உயர்வு உண்டு .

11ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 2,6,11 பாவகங்களுக்கு குறிகாட்டினால் வெற்றிகரமான மனிதர்

12ம் பாவக உப நட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திர அதிபதி 3, 9,12 பாவகங்களுக்கு குறிகாட்டினால் வெளிநாடு யோகம் உண்டு .

கே.பி பிரசன்னம்

ஜாதகம் இல்லாதவர்கள்,  பிறந்த  நாள், நேரம்  சரியாக  தெரியாதவர்கள்  தனது  எதிர்கால  பலனை   அறிந்து  கொள்ள  உள்ள ஜோதிட முறை   பிரச்சனம்  ஆகும்,  பல  வகை  பிரச்சனம் உண்டு, இவை  பழங்காலம் முதல்   வழக்கத்தில்  உள்ளது,  பிரசன்னத்தில்  தான் நினைத்த ஒரு காரியம்  நிறைவேறுமா ? நிறைவேறும்  என்றால் எப்பொழுது? என்பனவற்றை தெரிந்து கொள்ளலாம்.  கேள்வியானது  ஆத்மார்த்தமாக உண்மை  நிலையோடு  இருக்கும்  பட்சத்தில்  அதற்கான  பலனை  காட்டிவிடும்,  பாரம்பரிய  ஜோதிட  முறையில்  பல  பிரச்சனன, ஆருட  வகைகள்  உண்டு,  நவீன முறையில்  கே.பி  பிரச்சனம் எவ்வாறு  என்பதனை  இங்கு  காணலாம்.

கே.பி பிரசன்னத்தில் 249 எண்களுக்குள் ஒன்றை கூற சொல்லி கேள்வி நேரத்திற்கான பாவக ஆரம்ப முனை கொண்டு பலன்களை தீர்மானித்து ஆளும் கிரகங்களை கொண்டு உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆளும் கிரகங்கள்
1. நாளின் அதிபதி
2.சந்திரன் நின்ற இராசி அதிபதி
3.சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி
4.இலக்கினம் நின்ற இராசி அதிபதி
5.இலக்கினம் நின்ற நட்சத்திர அதிபதி


ஆஸ்ட்ரோ  கண்ணன் 


9600553314

Tuesday 5 August 2014

மிஹிரர் வராஹமிஹிரர் ஆன கதை


மிஹிரர் வராஹமிஹிரர் ஆன கதை 

விக்ரமாதித்தன் அரசவையில் பல ஜோதிடர்கள் இருந்தனர் .அவர்களுள் மிஹிரர் மிகவும் புகழ் பெற்றவராக இருந்தார்.விக்கிரமாதித்தியனுடைய மகனுக்கு மிஹிரரும் பிற ஜோதிடரும் ஜாதகம் கணித்தனர் . மிஹிரரை தவிர மற்ற ஜோதிடர்கள்அனைவரும் இளவரசனுக்கு பதினெட்டு வயதில் கண்டம்இருப்பதாக உயிருக்கு ஆபத்து என்று கூறினர். .எவ்வகையான ஆபத்து என்று கூறியதில் அவர்களிடையேகருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் மிஹிரர் குறிப்பிட்டநாளில் , குறிப்பிட்டநேரத்தில் ஆண் காட்டுப் பன்றியினால்இளவரசன் கொல்லப்படுவான் என்று கூறினார்.இளவரசன் நல்ல உடல் நலத்துடன் வளர்ந்து வந்தார். அந்தகுறிப்பிட்ட ஆண்டின் சில மாதங்களுக்கு முன்பிருந்தே இளவரசனுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மிகிரர் குறிப்பிட்ட நாளன்று காலையில் அரசர் அவையைக் கூட்டினர். அப்பொழுது அரசர் மிஹிரரிடம் அவருடைய கணக்கீட்டை மீண்டும் சரிபார்த்து கூறும்படி கூறினார். அவரும் முன்னரே முன்னறிவிப்பு செய்திருந்த இன்றைய நாள் மாலை 4 மணிக்கு இளவரசனுடைய உயிர் போகும் என்று தாம் கூறிய பலனை உறுதிபடுத்தி கூறினார்.அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க பட்டிருந்ததால் இந்நிகழ்ச்சி நடைபெ வாய்ப்பில்லை
என அனைவரும் நம்பினர் . இளவரசன் தங்கிருந்த அரண்மனை வீரர்களால் சூழப்பட்டிருந்தது, இளவரசர் ஏழாவது மாடியில் அமர்த்தப்பட்டிருந்தார். அரசர் தம் மகன் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதாக நம்பினார். நேரமோ நெருங்கி கொண்டிருந்தது.மிகிரர் கூறியபடி நடந்து விட்டால் அவருக்கு வராகர் பட்டம் தருவதாக அரசர் அறிவித்திருந்தார். வீரர்கள் இளவரசனை
அடிக்கடி சென்று பார்த்து வந்தனர்.ஐந்து  மணியளவில் இளவரசனை சென்று பார்த்து வந்த வீரர்கள் இளவரசர் உயிரோடுடிருப்பதாக அரசரிடம் கூறினர். மிஹிரர், இளவரசர் அறிவிக்கப்பட்டது
போல் இறந்து கிடக்கிறார் என்று கூறுகிறார். உடனே அரசரும்,அமைச்சரும் விரைந்து சென்று   இளவரசரை பார்க்க இளவரசர் மாண்டு கிடந்தார். ஒரே இடத்தில் இருக்க பிடிக்காமல் பொறுமை
இழந்த இளவரசன் நடமாடி கொண்டிருந்த போது அக்குறிப்பிட்ட நேரத்தில் வேகமாக அடித்த காற்றினால் அவ்வறையில் இருந்த காட்டுப் பன்றியின் சிலை அவர் மேல் விழுந்ததனால் இரத்த
வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார் என்பதை அரசர் உணர்கிறார்.ஆண் காட்டுப் பன்றியால் இறப்பார் என்ற ஜோதிட செய்தி உண்மையாக்கப்பட ஒரு வகைக் காட்டுப் பன்றி என்ற பொருளுடைய வராகன் என்பது மிஹிரர் பெயருடன் சேர்க்கப்பட்டு வராகமிஹிரர் என்றழைக்கப்பட்டார்.
- ஜோதிட இயல்