Saturday 4 July 2015

தட்சிணா மூர்த்தியும், குருபகவானும்


தட்சிணா மூர்த்தியும், குருபகவானும்  ஒருவரா? 
இருவருக்கும்  வேறுபாடுகள்  பல உண்டு.  

சிவனின்  64 சிவ வடிவங்களில் ஒருவர்  தட்சிணா மூர்த்தி  ஆவார்.

நவகிரகங்களில் ஒருவர் பிரகஸ்பதி  எனும் குரு பகவான்  ஆவார்.


தட்சிணா மூர்த்திக்குரிய திசை  தெற்கு ,   சிவாலயங்களில் கோஷ்டத்தில்  தெற்கு   நோக்கி  அமர்ந்திருப்பார்,  

குரு பகவானுக்குரிய திசை  வடக்கு,   நவகிரகங்களில்  அவர் வடக்கு நோக்கி  அமர்ந்திருப்பார்,  


தட்சிணா மூர்த்தி ஆறு அங்கங்களோடு கூடிய நான் மறைகளை, சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனப்படும் நான்கு பிரம்ம ரிஷிகளுக்குப் போதிப்பவர்.
 
தேவ குரு  என்று  அழைக்கப்படும்   குரு பகவான்,  முழு முதல் இயற்கை சுபராவார், ஒருவர் ஜாதகத்தில்  இருக்கும்  நிலையை பொருத்து  பூர்வ ஜென்ம வினைகளுக்கான பலாபலன்களை அளிப்பவர். 
 
நவகிரகங்களுக்கு ( தெய்வம் ) தேவதைகள்,  அதிதேவதைகள்   என்று   சிறப்பு  வழிப்பாடிற்குரிய  தெய்வங்கள்  உண்டு.

அதன்படி  குருவுக்கு அதிதேவதை இந்திரன்,  பிரத்யதி தேவதை பிரம்மதேவன் ஆவார்.

கிரகங்களின்  தோஷங்களால்  ஏற்படும்  தீய பலன்களை  குறைக்கவும், நன்மையான  பலன்களை  பெறவும்  அந்தந்த கிரகங்களுக்கும் ,  அதன் அதி தேவதைகளுக்கும்  சிறப்பு  வழிப்பாடு  செய்வதும்   நடைமுறையில்  உள்ள  ஒரு விடயம். 

கிரகங்களை  அவற்றிற்குரிய  நாளில் (கிழமையில் ),  அவற்றிற்குரிய வஸ்திரம்,  தானியம், மலர்களை  கொண்டு   வணங்குதல் சிறப்பு. 

நவக்கிரக குருபகவானை  அவருக்குரிய  வியாழக்கிழமையில் மஞ்சள் நிற வஸ்திரம் ,  (பொன்னிறம்) முல்லை மலர் ,  கொத்துக் கடலை  தான்யம்  போன்றவற்றை  சமர்பித்து வணங்குதல்  சிறப்பு.

தட்சிணா மூர்த்தி  குருவிற்கெல்லாம்  குரு என்ற நிலையில் இருப்பவர்,  அவர் தியான நிலையில்  ஞான  குருவாய்  இருப்பவர்,

அவரை  (வியாழக்கிழமை என்றில்லாமல் ) அனைத்து  நாட்களிலும் சிவாலயங்களில் வணங்கி வரலாம். 

ஞான குருவையும் ,  நவகிரக குருவையும் வணங்கி  நன்மைகள் பெறுவோம்.

No comments:

Post a Comment