Saturday, 30 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 மீனம்



மீன ராசி

உங்கள் ராசிக்கு சனிபகவான் 9 ம் இடத்திலிருந்து 10ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் உங்கள்  ராசிக்கு   11, 12ம்  இடத்திற்கு அதிபதி. 


இதுவரை  9 ம் இடத்தால் நீண்ட தூர  பயணம், நல்ல பண புழக்கம் போன்ற சாதகமான பலன்களும்  மற்றும்   தொழிலில் அதிக ஈடுபாடு இன்மை,   தந்தை வழியில் சில பிரச்சனைகள் தந்திருக்கும். 



தொழில், வேலையில் போட்டிகள் ஏற்படும், வேலைபளு  அதிகரிக்கும்,  உங்கள் திறமைகள்  வெளிபடும்,  சிறிது அலைச்சல், சோர்வு  தரும். 


பொது  சேவை, சமூக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சிலருக்கு தொழில், வேலை  இடமாற்றம் ஏற்படும், தொழில் கடன்கள் கிடைக்கும்.தொழில் மூதலிடுகளில், வேலையாட்களிடம்  கவனம் கொள்வது நல்லது.

அதே நேரத்தில் புதிய நண்பர்கள், தொழில் பங்குதாரர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள்  ஏற்பட்டு விலகும், வீடு, நிலம்,  தொழில்  தொடர்பான   பத்திரங்களில் கையெழுத்திடும்  முன் சரிபார்ப்பது  நலம்.


தொழில் ரீதியான வெளிநாடு முயற்சி வெற்றி பெறும். புதிய வேலைக்காக முயற்சிபவர்களுக்கு வேலை கிடைக்கும்


சனிபகவான்   ராசிக்கு 12, 4, 7ம்  இடங்களை பார்வை செய்கிறார்.


சிலருக்கு  வீடு,  வாகனங்கள் விற்கும் அல்லது மாற்றும் நிலையும், உடல் நலனில் சிறிது பிரச்சனைகளும் உருவாகலாம். கணவன், மனைவிடையே  சிறிய பிரச்சனைகள் தரலாம். குடும்பத்தில்  வீண் விவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து செல்வது  நலம்.


திட்டமிட்டு  செயல்பட்டால்  உங்கள் நீண்ட  நாள் கனவுகள், எண்ணங்கள்  செயலாகும்  நேரமிது. 


வியாழக்கிழமைகளில் குரு பகவான்  வழிபாடு,   வெள்ளிக்கிழமைகளில்  அம்மன்  வழிபாடு செய்வதும்,  ஆதரவற்ற  குழந்தைகளுக்கு  உணவு, உடை போன்ற  இயன்ற உதவிகளை செய்வது    சிறந்த பலன்களை தரும்.


நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Friday, 29 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 கும்பம்



கும்ப ராசி

உங்கள் ராசிக்கு சனிபகவான் 10ம் இடத்திலிருந்து 11 ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் உங்கள் ராசி  மற்றும் 12ம் இடத்திற்கு அதிபதி. 


இதுவரை  10ம்  இட சனி   தீமைகள்  அதிகம் இல்லை என்றாலும், தொழில், வேலையில் போட்டி,  இடமாற்றம்,  தொய்வு  நிலை போன்றவை  நடைபெற்றிருக்கும்.


11 இடம்  சனி  பகவானுக்கு உகந்த இடமாகும், நன்மைகள்  அதிகம்  நடைபெறும், தொழிலில் நல்ல லாபம்,   பணியில்  பதவி  உயர்வு,  உங்கள் எண்ணங்கள் வெற்றி பெறுதல் போன்றவை நடைபெறும். கவலைகள்  குறையும்,  மன மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். 


மூத்த சகோதர்களால் நன்மை, வரவேண்டிய பணம்  கை வந்து சேரும், தொழில் கடன்கள் அடைபடும்,  தாரளமான  பண புழக்கம் ஏற்படும்,

தேவை கேற்ற  பணவரவு  உண்டு,    சில தடை, தாமதங்களுக்கு  பிறகு முயற்சிகளில்   வெற்றி கிடைக்கும்.  திடீர்  பண வரவிற்கும்  வாய்ப்பு உண்டு.  வீடு, நிலம், வாகனம்  போன்றவற்றின் மூலம் கடன் கிடைக்கும்.  சிலருக்கு வீடு, மனை போன்ற பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு.

நீண்ட நாட்கள்  விற்காமல் இருந்த நிலம் , வீடு   போன்ற  சொத்துகள் விற்பனையாகும். 

சனிபகவான்  ஜென்ம ராசி, 5, 8 ம்  இடங்களை பார்வை செய்கிறார்,  சிலருக்கு பூர்வீக சம்பந்தமான  பிரச்சனைகளில்  முடிவு ஏற்படும், நீண்ட நாள் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய  கூடும். நிலம், சொத்துகளின் பேரில்  கடன் வாங்க  நேரிடலாம். 


தீமைகள் குறைந்து நன்மைகள்  அதிகம் நடைபெறும் காலம்.


இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.


குலதெய்வ வழிபாடு, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றிற்கு உதவுவதால் நன்மைகள் அதிகம் அடையாளம்.



நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Thursday, 28 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 மகரம்



மகர ராசி

உங்கள் ராசிக்கு  சனி பகவான் 11ம் இடத்திலிருந்து 12 ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்,  உங்கள் ராசி  மற்றும்   2ம் இடத்திற்கு அதிபதி. 


ஏழரைசனி காலத்தில் விரைய சனிகாலம் ஆரம்பிக்கிறது. 



இதுவரை  11ம்  இட சனி   லாபம், மேன்மை,  தொழில் வெற்றி போன்ற நற்பலன்கள் அதிகம் நடைபெற்றிருக்கும்.

இனி விரையசனி காலத்தில்  தொழில், வேலையில்  சிலருக்கு எதிர்பார்த்த  லாபம்  இன்மை, மந்தநிலை, ஊர், வீடு  இடமாற்றம் போன்றவை நடக்கும்.


நம்பிக்கைக்குரியவர்  என்றாலும்  பிறருக்காக  ஜாமீன்  போடுவது, பணம்  கொடுக்கல், வாங்கல்  போன்றவற்றை  ஆலோசித்து செய்தல் நலம்.


தொழில், வேலையில்   தொழில்  போட்டியாளர்கள்  உருவாக  வாய்ப்புண்டு.    இடமாற்றம்  விரும்புபவர்கள்   புதிய வேலை வாய்ப்பு  உறுதியான  பின்பே  இருக்கும்  வேலையை  விடுதல் நலம்.  புதிதாக  வேலை தேடுவோருக்கு  வெளிநாடு, வெளியூர்  வேலைவாய்ப்புகளே  அதிகம்  வரும்.



சிலருக்கு குடும்பத்தை  விட்டு பிரிந்து இருக்கும் நிலையும்,  தன் சொந்த வீட்டை  வாடகைக்கு  விட்டு,  தான்  வாடகை வீட்டு  செல்லும் நிலையும் உருவாகும், இதற்கு  தொழில், வேலை காரணமாக  அமையும்.



புதிய  சொத்துக்கள், இடம், நிலம் போன்றவை  வாங்கும் போது  கவனம் தேவை, நிதி பற்றாக்குறை  ஏற்படும், உணவு முறைகளால் உடல் நல  பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு   மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.



பயணங்களில் கவனமாக செல்வது நல்லது, பொருளிழப்பு  ஏற்படலாம். வெளிநாடு முயற்சி உடையவர்களுக்கு  வெற்றி  தரும்.

குடும்பத்தினர், உறவினர்களிடம், தொழில், வேலையில் பகை ஏற்படலாம், வீண் விவாதங்களை  தவிர்ப்பது  நல்லது.  



சனிபகவான்  ராசிக்கு 2, 6, 9 ம்  இடங்களை பார்வை செய்கிறார். குடும்ப  மற்றும் சகோதரர்கள் வழியில் செலவுகள் அதிகரிக்கும், கடன்கள் எளிதில் கிடைக்கும்,  பூர்வீகம்,  தந்தை வழி  உறவுகளால் பிரச்சனை  ஏற்படலாம் .



முதல் சுற்று  நடப்பவர்களுக்கு (மங்கு சனி)  கலக்கம்  தந்து  தெளிவாக்கும். இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு ( பொங்கு சனி )   மாற்றம்  தந்து  ஏற்றம்  தரும். மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு சிறிய பிரிவினை, இடமாற்றம் ஏற்பட்டு சரியாகும்.


இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.


சிவன்  வழிபாடு, பைரவர் வழிபாடு,  பொதுநல  சேவைகளுக் நன்கொடை அளித்தால், அன்னதானம் செய்தல் மன உறுதி  தரும்.



நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Wednesday, 27 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 தனுசு





தனுசு ராசி

உங்கள் ராசிக்கு  சனி பகவான் 12ம் இடத்திலிருந்து உங்கள் ஜென்மராசிக்கு பெயர்ச்சியாகிறார், ராசிக்கு 2,3 ம் இடத்திற்கு அதிபதி. 



ஏழரை சனி காலத்தில்  விரைய சனி  முடிந்து ஜென்ம சனி காலம் ஆரம்பிக்கிறது. இதுவரை  எதிர்பாராத வைகையில்  பல இழப்புக ளையும், நஷ்டத்தையும் அதிகம் சந்தித்திருப்பீர்கள், சிலருக்கு  புதிய  தொழிலுக்காக  சொத்துக்களை வங்கியில்  அடமானம் வைக்கும் நிலை  ஏற்பட்டி ருக்கும்.



பொதுவாக ஜென்ம சனி காலத்தில்  சுறுசுறுப்பாக செயல்பட வைத்து உங்கள்  திறமையை வெளிப்படுத்தும்,  குடும்பத்தினர், உறவினர்களிடம் விரோதம்  ஏற்படலாம்,  முன்பு  இருந்த சிறிய பிரச்சனைகள் கூட இப்பொழுது  பெரியதாக தெரியும், சிலருக்கு  குடும்பத்தை  விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்க நேரலாம், இதற்கு வேலையில் இடமாற்றம் காரணமாக இருக்கும். பலருக்கு வீடு, பணியிட  மாற்றம் ஏற்படும், பணியில் வேலை பளு  அதிகரிக்கும்.

 புதிய  முயற்சிகள்,  செயலிகளில்  சற்று கவனம் தேவை, குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும் நண்பர்கள், உறவினர்களுடன்  கருத்து வேறுபாடுகள் உருவாக  வாய்ப்புண்டு என்பதால் வீண் வாக்குவாதம், மற்றவர்களின்  பிரசனைகளில்  தலையீடு  போன்றவற்றில்  கவனம் தேவை. 

நம்பிக்கைக்குரியவர்  என்றாலும்  பிறருக்காக  ஜாமீன்  போடுவது,  பணம்  கொடுக்கல், வாங்கல்  போன்றவற்றை  ஆலோசித்து செய்தல் நலம்.

பலருக்கு  தொழில், வேலையில்  இடமாற்றம்  மற்றும்  தொழில்  போட்டியாளர்கள்  உருவாக  வாய்ப்புண்டு.    இடமாற்றம்  விரும்புபவர்கள்   புதிய வேலை வாய்ப்பு  உறுதியான  பின்பே  இருக்கும்  வேலையை  விடுதல் நலம்.  புதிதாக  வேலை தேடுவோருக்கு  வெளிநாடு, வெளியூர்  வேலைவாய்ப்புகளே  அதிகம்  வரும்.


வீடு, நிலம், நகை  மூலம்  கடன்கள் எளிதாக கிடைக்கும்.

 தொழில்,  வியாபாரம்  தொடர்பான  பயணங்கள் அதிகரிக்கும், பலருக்கு  வெளிநாடு  சென்று வரும் வாய்ப்பு  கிடைக்கும். வீண் அலைச்சல்,  உடல், மன சோர்வு அடிக்கடி  ஏற்ப்பட்டு விலகும். தியானம், யோக போன்றவற்றை கடைபிடித்து  வருவது நலம்.   

புதிய நண்பர்கள், தொழில்  பங்குதாரர்கள்  உடன் கருத்து வேறுபாடுகள்  ஏற்பட வாய்ப்பு உண்டு, கூட்டு தொழில், முதலீடுகளில்  கவனம் தேவை.




மாணவர்களுக்கு  படிப்பில் சற்று கவனம்  தேவை,  மறதியும், சோம்பலும்  அடிக்கடி  ஏற்படும், முக்கிய பாடங்களில் கவனமாக  படித்து  வர  கவலை இல்லை  




சனிபகவான்  ராசிக்கு 3, 7, 10 ம்  இடங்களை பார்வை செய்கிறார்.  பணம் கொடுக்கல், வாங்கல், பிறருக்கான ஜாமீன் கையெழுத்து ஈடுதல் போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வேலையில்  போட்டி உருவாகும் உங்களின் உண்மையான நண்பர்கள் யார்? என்பதை  அறிந்து கொள்ள உதவும் நேரமிது.



முதல் சுற்று  நடப்பவர்களுக்கு ( மாங்கு சனி ) போராடி வெல்லும் நிலையும்.  இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு ( பொங்கு சனி )   அதிரடியான முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் தரும். மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு இட மாற்றங்களையும், உடல்ரீதியான  உபாதைகளை தரும். 


கவலையை  விடுங்கள், வளமான  எதிர்காலத்திற்காக  உழைக்கும் நேரமிது. இறையருளை  துணை கொண்டு  உங்கள்  முயற்சியை முன்னெடுத்து  செல்லுங்கள். 



உங்கள் பிறந்த ஜாதக அமைப்பின்படி  நல்ல திசா புக்திகள் நடைபெற்றால்  தீமைகள் குறைந்து வளர்ச்சி, முன்னேற்றம் தரும்.

ஆஞ்சநேயர் வழிபாடு,  நரசிம்மர் வழிபாடு, திருக்கோவில் மற்றும் பொது பணிகளை   செய் வதால் மன சாந்தி பெறலாம்.



நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Tuesday, 26 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 விருச்சிகம்



விருச்சி ராசி

உங்கள் ராசியில் இருந்த சனி பகவான் (ஜென்ம சனி ),   ராசிக்கு 2ம்  இடத்திற்கு பெயர்ச்சி யாகிறார், ராசிக்கு 3,4 ம்  பாவக  அதிபதி,


இந்த ஏழரை  சனி  காலத்தில்  ஜென்ம சனி காலம் முடிந்து  2ம் இட பாத, வாக்கு சனி காலம் தொடர்கிறது,


இது வரை மன குழப்பம், தடுமாற்றம்,  காரிய தாமதம், உடல் நலக்கோளாறுகள் போன்ற வைகளை அனுபவித்தீர்கள், இனி வரும் காலம் இவற்றில் இருந்து மெதுவாக வெளிவ ருவீர்கள்,


பிரச்சனைகளும், சங்கடமும் குறையும், எனினும் இன்னும் 2  1/2 வருடம் ஏழரை சனி காலம். 


குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம், விட்டு கொடுத்து செல்வது நலம், பொது இடங்கள், வேலையில் வீண் விவாதங்களை தவிருங்கள்.

முக்கிய  சுப காரியங்களில், முயற்சிகளில்   இருந்த  தடை ,  தாமதம்  விலகும்.  தொழில்,  வியாபாரத்தில்  இருந்த மந்த போக்கு  நீங்கும்.   பலருக்கு தொழில், வியாபாரம்,  வேலையில் இடமாற்றத்திற்கு  பிறகு  முன்னேற்றம்  ஏற்படும்.   


பூர்விக  சொத்துக்களில் பிரசனைகள்  இருப்பவர்களுக்கு  சாதகமான முடிவு கிடைக்கும்.   குலதெய்வ   வழிபாட்டில்  ஆர்வம்  கொள்வீர்கள். குழந்தை  செல்வம் தாமதித்தவர்களுக்கு குழந்தை  பாக்கியம்  கிட்டும்.


பலருக்கு  கட்டிய வீடு  வாங்கும் யோகமும்,  பல  காரணங்களுக்கா  சொந்த வீடு  கட்டியும்  அங்கு  குடியிருக்க முடியாமல்  இருப்பவர்களுக்கு சொந்த  வீட்டிற்கு  மாறும்  காலமாகும்.  


கடந்த காலங்களில் பிறருக்காக உதவ  ஜாமீன்  போட்டு, பணம்,  வேலை   வாய்ப்பு  போன்ற   உதவிகளை   செய்து  அவர்களால்   ஏமாற்றத்தை   சந்தித்திருப்பீர்கள்,       இது  போன்ற  விஷயங்களில்   கவனமாக  இருங்கள்.  தொழில், வேலை  காரணங்களுக்காக  குடும்பத்தினரை  விட்டு  வெளியூர், வெளிநாட்டில்  இருப்பவர்கள் சிலருக்கு  குடும்பத்தினோடு  சேர்ந்திருக்கும்  காலமாகும்.


சிலருக்கு வீடு,  தொழில்,   பணியில்  இடமாற்றம் ஏற்படும்.    நீண்ட  நாட்களாக   வரவேண்டிய பணம் இப்பொழுது கிடைக்கும்.


சனிபகவான்  ராசிக்கு  4, 8, 11 ம்  இடங்களை பார் வை செய்கிறார். வீடு  கட்டுவதற்கும், வாகனம் வாங்குவதற்கும், கல்விக்கும்  வங்கியில் கடன் கிடைக்கும், சிலருக்கு நீண்ட நாள் நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். உங்கள் முயற்சி சிறிது தாமதத்திற்கு பிறகு  வெற்றியாகும்.


இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.


சிவன் வழிபாடு,  குல தெய்வ வழிபாடு,  ஏழை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் செய்வது  மன சாந்தி தரும்.



நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Monday, 25 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 துலாம்



துலாம் ராசி

உங்கள் ராசிக்கு  சனி பகவான் 2ம்  இடத்திலிருந்து 3ம்  இடத்திற்கு பெயர்ச்சியாகிறார், ராசிக்கு  4,5  ம் இடத்திற்கு அதிபதி.



ஏழரைசனி காலம் முடிகிறது, இது வரை தொழிலில் தேக்கம்,  பணியிடங்களில் பிரச்சனை, பொருளாதாரத்தில்  பின்னடைவு போன்றவற்றால் மனகவலை அடைதிருப்பீர்கள்,



இனி வரும் 2 1/5  ஆண்டுகள்  மிக சிறந்த பலன்கள் கிடைக்கும்.   தடைகள் அகலும்,   உங்கள் எண்ணங்கள் , திட்டங்கள்  வெற்றி பெறும்.


 இதுவரை  இருந்த எதிர்பாரா  இழப்பு, கடன்,  நம்பியவர்களால்  ஏமாற்றம், காரிய  தாமதம்  போன்ற  சாதகமற்ற  சூழ்நிலை   கடந்து  விட்டது.  தொழில்,  வியாபாரம், உத்தியோத்தில்  நல்ல  முன்னேற்றமான  காலமாகும்.  உடல், மன  ரீதியான  சோர்வு, கவலை  நீங்கும்.   


தொழில், வேலை  காரணமாக குடும்பத்தினரை  பிரிந்து  வெளிநாடு, வெளியூரில்  இருப்பவர்கள்  குடும்பத்துடன்  ஒன்று சேர்வர்.குடும்பத்தில்  கருத்துவேறுபடடால்  பிரிந்தவர்கள்  ஒன்று சேருவர். 



தொழில், வேலையில்  முன்னேற்றம்  ஏற்படும், வருமானம் பெருகும். இருக்கும் கடன்கள் அடை படு ம்.



குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், திருமணம்  ஆகாதவர்களுக்கு  திருமணம் நடைபெறும், பலருக்கு  புதிய தொழில், வேலை வாய்ப்புகள், உத்தியோகத்தில்  உயர்வு கிடைக்கும்.



மனக்கவலை  அகன்று  மகிழ்ச்சி  உண்டாகும்.



சனி  பகவான்  ராசிக்கு 5,9,12 ம் இடங்களை பார்வை  செய்கிறார்  பூர்விக  சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்,   நீண்ட நாள்களாக  இருந்த  உடல் நல கோளாறுகள் நீங்கும்,



தீர்த்த  யாத்திரை  செல்ல  வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு  செல்ல முயற்சிப்பவர்களுக்கு வெற்றி தரும், 





கடந்த  கால அனுபவங்கள் உங்களுக்கு  உண்மையாக உங்கள் மீது  நம்பிக்கையும், அக்கறையும் கொண்டவர்கள்  யார் என்பதை  உணர்த்தியிருக்கும். 


கவலையை  விடுங்கள்,  நன்கு  திட்டமிட்டு  செயல்பட  நீங்கள் நினைத்த  வெற்றியை  தரும்  காலமாகும்  இது.  

இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.


குல தெய்வ வழிபாடு செய்வதால் மேன்மையடையலாம்.



நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Sunday, 24 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 கன்னி



கன்னி ராசி

உங்கள் ராசிக்கு சனி  பகவான்  3ல் இருந்து 4ம் இட த்திற்கு பெயர்ச்சியாகிறார்,   ராசிக்கு 5, 6 ம் இடத்திற்கு  அதிபதி.



இது வரை  இருந்த  இடம்  அனுகூலமான பலன்களை  அதிகம்  தந்திருக்கும், இனி அர்த்தாஷ்டம சனி காலமாகும், அஷ்டமத்தில் (8) பாதி அர்த்தாஷ் டமம் (4)   ஆகும். 

புதிய முயற்சிகள், நண்பர்களிடம், பணபரிவர்தத்தினை ,   வாகன போக்குவரத்து  போன்றவற்றில் சற்று  கவனம்  தேவை.  பிறருக்கு கடன்  கொடுப்பது, ஜாமீன் போடுவது  போன்ற விஷயங்களில்  நன்கு ஆலோசித்து  இறங்குங்கள்.  உடல் ரீதியாக சற்று  சோர்வு நிலை,  மருத்துவ  செலவு  ஏற்படலாம்.


மாணவர்களுக்கு  படிப்பில்  ஆர்வம்  அதிகரிக்கும்,    உயர்கல்வியில் தடை  ஏற்படடவர்களுக்கு   மீண்டும் படிப்பினை   தொடர்ந்து வெற்றி அடைய  வாய்ப்புண்டு. 



எதிலும்  இரண்டு  யோசனை என்பது  உங்களது  ராசிக்குரியது, எனினும் ஒரே  நேரத்தில்  பல  செயல்களில்  ஈடுபடுவது  எதிலும் முழுமையான பலன் தராது என்பதை கவனத்தில் கொண்டு  புதிய செயல்களில்  நன்கு  ஆலோசித்து  விவேகத்துடன்  செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே. 



சிலருக்கு வீடு, வேலையில்  இடமாற்றம்  ஏற்படும், அலைச்சல்  அதிரிக்கும்,   வாகன போக்குவரத் துகளில் கவனம் தேவை.


வீடு கட்டுவதற்கும், புதிய வாகனம் வாங்குவதற்கும்  கடன்கள்  ஏற்படும், தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை.


சனி  ராசி, 6, 10 ம் இடங்களை பார்வை செய்கிறார்.


வீண்  கவலை,  தடுமாற்றம்  ஏற்படலாம், வேலை பளு அதிகரிக்கும்,  வேலை, தொழில்  போட்டி உரு வாகும், இதனால் உங்கள் திறமைகள்  வெளிபடும், வெளிநாடு  செல்ல  முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும், நெடுநாள்  விற்காமல் இருந்த நிலம் போன்ற  ஸ்திர  சொத்துக்கள் விற்பனையாகும்.


நாளைய  வெற்றிக்காக  உழைக்கும்  நேரமிது.

இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.



பைரவர் ,  ஆஞ்சநேயர்   வழிபாடு மற்றும்   கால் நடை , வீட்டு விலங்குகளுக்கு  உணவளிப்பதும்   மனவலிமையை தரும், சங்கடங்கள் நீக்கி  மன சாந்தி தரும்.  





நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Saturday, 23 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 சிம்மம்



சிம்ம ராசி

உங்கள் ராசிக்கு சனி பகவான் 4ல் இருந்து  ராசிக்கு 5ல் பெயர்ச்சியாகிறார். ராசிக்க 6, 7 ம்  பாவகங்களுக்கு அதிபதி. இதுவரை  இருந்த   அர்த்தாஷ்டம சனி காலம் விலகுகிறது. அஷ்டமத்தில் (8) பாதி அர்த்தாஷ்டமம் (4)   ஆகும். 


இதுவரை  உடல் நலக்கோளாறுகள், வீடு, நிலம், கல்வி பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டிருக்கும். 4ம் இட சனியின் கடந்த  காலத்தை விட  இந்த காலம்  சிறந்ததாக இருக்கும் பிரச்சனைகளில் இருந்து மெதுவாக விடுபடும் காலமாகும்,  5ம் என்பது மத்திமாக இருக்கும்.



குடும்பத்தில்  தடை பெற்றிருந்த   சுப காரியங்கள்  மன  நிறைவாக   நடைபெரும்.   சுப  செலவுகள் அதிகரிக்கும்.   செலவுகளை   நிலம், வீடு,  போன்றவற்றில்   முதலீடாக   மாற்றி  கொள்வது  சிறப்பு. தொழில்,  உத்தியோகம்,  வியாபாரத்தில்  இருந்த   இடையூறுகள்  விலகும்.  மறைமுக   போட்டியாளர்கள்   பின்  வாங்குவர்.

நீண்ட  நாள்  இருந்த  இனம்புரியா  நோய்கள்,  வலிகள்  நீங்கும்,   உடல்  ஆரோக்கியம்  கூடும்,  மருத்துவ  செலவுகள்  குறையும். 

தேவைக்கேற்ற  பண வரவு  நனறாக இருக்கும்,  வீண்  செலவுகள்  குறைந்து  சேமிப்பு  அதிகரிக்கும்.   உறவினர்கள்,  நண்பர்களிடம்  இருந்து  வரவேண்டிய  பணம்  வந்து  கைவந்த  சேரும்.

  இன்சூரன்ஸ்,  மெடிக்கல்  பாலிசி  தொடர்பான  தொழில் செய்ப்வர்களுக்கு நல்ல  ஆதாயம்  கிடைக்கும்.

சனி பகவானின்  பார்வை ராசிக்கு 11, 2, 7 ம் இடங்க ளை செய்கிறார்,  லாபம்,  காரிய வெற்றி தாமதமாக கிடைக்கும், பண புழக்கம் முன்பைவிட  குறைவாக இருக்கும், திருமண  முயற்சி  உடையவர்களுக்கு சாதகமான  காலம்.

புதிய  வேலைக்கு  முயற்சிப்பவர்களுக்கு  வேலைவாய்ப்புகளும்,   உழைப்புக்கேற்ற  ஊதியம்  இல்லை  என்றிருப்பவர்களுக்கு   ஊதிய  உயர்வும்  கிடைக்கும்.   

தொழில், வேலைக்கு  தகுந்த  தொழிலாளர்கள் அமைவார்கள்.
ஏற்கெனவே  வாங்கிருந்த  கடன்கள் குறையும், நிலம்,  வீடு  போன்ற அசையா  சொத்துக்களின்  பேரில் புதிய  கடன்கள்  கிடைக்கும். 

நிலுவையில் உள்ள நீண்ட நாள்  வழக்குகளில்  சாதகமான   வெற்றி  கிடைக்கும். 


சிறிய  விஷயங்களையும்  பெரியதாக எண்ணி கவலை கொள்ள வேண்டாம்,  குடுபத்தில் அனுசரித்து  செல்வது  நல்லது. உங்களுக்கு பிடித்த கலைகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, தியானம் போன்றவற்றில்  ஈடுபட்டால் மன அமைதியும், மகிழ்வும் கிடைக்கும்.


இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.



குல தெய்வம், காவல் தெய்வங்கள் வழிபாடு செய்வதும், மற்றும்  ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது போன்றவை நற்பலனை தரும்.



நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Friday, 22 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 கடகம்



கடக ராசி

உங்கள் ராசிக்கு 5 ல் இருந்த சனி ராசிக்கு 6 ல் பெயர்ச்சியாகிறார், உங்கள் ராசிக்கு 7,8 ம்  பாவக அதிபதி

சனி பகவானுக்கு  உகந்த இடங்களில் இதுவும் ஒன்று,  6 ல்  சனி இருப்பது  அஷ்டலட்சுமி யோகம் என்பர்.



இனிவரும்  காலம் உங்களுக்கு மிகவும்  சாதகமான காலம்,கடன்கள் அடைப்படும்,  தொழில், வேலையில்  முன்னேற்றம் ஏற்படும்,  நீண்டநாள் விருப்பங்கள்  நிறைவேறும்.  



புதிய  சிந்தனை , செயல்களில் ஆர்வமும்,  வேகமும்  கொள்வீர்கள், 
திருமணம் போன்ற சுப  முயற்சிகளில் எதிர்பார்க்கும்  வெற்றி,    
கணவன், மனைவி  வழி  உறவினர்களால்  ஆதாயம் கிட்டும். 

கூட்டு தொழில்,  புதிய வர்த்தக  ஒப்பந்தம், வெளிநாடு  தொடர்பு  வியாபாரத்தில்   முதலீடுகளால்  லாபம்  ஏற்படும்,  தொழில், வியாபார  கடன்கள் எளிதாக  கிடைக்கும்.  தொழில், வேலையில் விரும்பிய   இடமாற்றம் , ஊதிய  உயர்வு  போன்ற  சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாரா திடீர்  தனவரவு உண்டு. 


தொழில்,உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியையும், வருமானத்தையும், வழக்குகளில்  வெற்றியையும்,  நல்ல  தன  வரவையும்   தரும்

பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் தீரும்,  பகைவர்களும் நண்பர்கள்  ஆவர். 

சனி  ராசிக்கு  12, 3, 8ம்  இடங்களை  பார்க்கிறார்,
வெளிநாடு  செல்ல  முயற்சி  உடையவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், சகோதரர்கள் மூலம் நன்மை கள்  ஏற்படும், எனினும் சிறிது விரிசல்  ஏற்பட வாய் ப்புண்டு,  உடல் நலக்கோளாறுகள்  கட்டுக்குள் இருக் கும்.

சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி  பிறக்கும், மனோபலம் கூடும், எண்ணங்கள்  செயலாகும்  நேரமிது.


இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.

பரிகாரம்
திங்கட்கிழமை சிவ வழிபாடு,    செவ்வாய்கிழமை  துர்க்கை, காளி அம்மன்  வழிபாடு செய்வதும், ஆதரவற்றோர், ஏழைகளுக்கு  அன்னதானம்   செய்வது   சிறந்த பலன்களை தரும்.




நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 மிதுனம்





மிதுன ராசி

உங்கள் ராசிக்கு 6ல் இருந்த சனி  7ம்  இடத்திற்கு பெயர்ச்சியாகிறார், 
சனி  உங்கள் ராசிக்கு 8, 9 பாவகங்களுக்கு அதிபதி,  7ல் உள்ள காலம் சிறப்பானது  அன்று, இது கண்ட சனி என அழைக்கபடுகிறது. 

புதிய செயல்கள், கூட்டு தொழில் போன்றவற்றில்  கவனமாக  இருப்பது  நன்று.  புதிய முதலீடுகள்,  தொழில்  விரிவாக்கம்,   புதிய  நபர்களை   வேலைக்கு  சேர்ப்பது போன்றவற்றை  நன்கு  ஆலோசித்து   செய்யுங்கள். 

உடல்,  மனோ  ரீதியான சோர்வு  வந்து  விலகும்,  மறதி அதிகம்    ஏற்பட  வாய்ப்புண்டு,  எங்கும், எதிலும் தேவையானவற்றை  முன்பே  தயார்  செய்து  கொள்ளுங்கள். ஒரே  நேரத்தில்  இரண்டு  வேலைகள்,  செயல்களில்  ஈடுபடுவதை தவிருங்கள்.  


தொழில், வேலை தொடர்பான  நீண்ட  தூர பயணங்கள்  அதிகம் ஏற்ப்படும்.   புதியதாக  கூட்டு  தொழில், வர்த்தகத்தில்  ஈடுபடுவது  சிறப்பல்ல,  நம்பியவர்கள்  ஏமாற்ற வாய்ப்புண்டு,    வேலையில்    உடன்  பணிபுரிவோர்,  மேலதிகாரிகள் உடன்  கருத்து  வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். இடமாற்ற  சிந்தனை  அதிகரிக்கும், அவசரம்  வேண்டாம். 


கணவன், மனைவி  உறவில் சிறிய  கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்,   விட்டு கொடுத்து செல்வது  நலம்,  உறவினர்கள், நண்பர்களிடமும், கூட்டு தொழிலில்  பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.  உங்கள்  புதிய முயற்சிகள், செயல்கள்  தாமதத்திற்கு  பிறகு  வெற்றி பெறும். பொறுமை  அவசியம்.    


மாணவர்களுக்கு  கல்வியில்  மந்த நிலை, மறதி  ஏற்படவாய்ப்புண்டு,
முக்கிய பாடங்களில்  கவனம்  செலுத்தினால்  அச்சம்  கொள்ள தேவையில்லை.


கவலையை  விடுங்கள், எதிலும்  மற்றவர்களை  எதிர்பார்க்காமல்,  உங்கள்  சுய முயற்சியில்   சற்று  கவனத்துடன்  செயல்படுங்கள், 
சற்று  தாமதமானாலும்,  வெற்றி  உங்கள்  வசமாகும்.


புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது,  தொழில், வியாபாரத்தில்  சிறிது சரிவை சந்திக்க நேரிடலாம், நண்பர்களும் எதிரிகள்  ஆகும் வாய்ப்பு உண்டு.



பாக்கிய அதிபதியாக சனி  இருப்பதால்,  தீமைகளின்  அளவு  குறையும்,  பிரச்சனைகள் ஏற்ப்பட்டாலு ம்  இறுதியில்  வெற்றி உங்களுக்கு  சாதகமாக இரு க்கும்.


  பலருக்கு தொழில் ரீதியாக  இட மாற்றம்,  ஊர்  மாற்றம் ஏற் படும்,  அலைச்சல் அதிகரிக்கும்,



சனியின்  பார்வை  ராசி, 4, 9 இடங்களில் விழுவதால்,  தாய், வீடு, வாகனம்,  தந்தை வகைகளில்   பிரச்சனைகள் தரும்,

மன குழப்பம் தரும்,  கவன  சிதறல்  ஏற்படும், சிறிய பிரச்சனைகளை  கூட  பெரியதாக நினைத்து கொள்ள வேண்டாம், காரிய தாமதம் ஏற்படும். பெற்றோர், குடும்பத்தினரிடம்  அனுசரித்து செல்வது அவசியம்.


இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.



சனி,புதன் கிழமைகளில்   பெருமாள்,  ஆஞ்சநேயர்   வழிபாடு செய்வதும்,  ஆதரவற்ற  குழந்தைகளுக்கு  உணவு, உடை போன்ற  இயன்ற உதவிகளை செயவது   சிறந்த பலன்களை தரும்.


நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Thursday, 21 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 ரிஷபம்

  



ரிஷபம்  


உங்கள் ராசிக்கு  இதுவரை  7ல் இருந்த சனி   8ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்,  ராசிக்கு 9, 10 ம் பாவக அதிபதி,  அகப்பட்டவனுக்கு  அஷ்டம சனி என்ற பழமொழி  உண்டு.



 2020  வரை உங்கள் செயலில் வேகத்தை விடுத்து விவேகத்தை கடை பிடிப்பது நல்லது,    உங்கள்  புதிய  முயற்சிகளில் சற்று கவனமாக  செயல்படுவது   நலம்.    தொழில், வியாபாரத்தில்,  புதிய முதலீடுகளில் கூட்டு தொழிலில் ,   புதிய  நண்பர்கள், வாடிக்கையாளர்கள்,   தொழில்  பங்குதார்கள்  இவர்களுடன்  பிரச்சனைகள்  ஏற்பட  வாய்ப்புண்டு.

உங்கள் தேவைக்கேற்ற பண வரவு நன்றாக  இருக்கும்,   விரையங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு,  சிலருக்கு வீடு மற்றும்  தொழிலில்  இடமாற்றம்  ஏற்படும்.

 வெளிநாடு தொடர்பு வர்த்தகம், பங்கு சந்தை  முதலீடு, தொழில்  விரிவாக்கம், புதிய வாகனம்,  வீடு , நிலம்  வாங்குவது  பணம் கொடுக்கல், வாங்கல்,  ஒப்பந்த பத்திரங்கள்  போன்றவற்றில்  கையெழுத்திடும் பொழுது  ஒருமுறைக்கு மேல் சரிபார்த்து   செய்வது நலம்.

 அவசரப்பட்டு பிறருக்கு  ஜாமீன் கொடுப்பதை  தவிர்த்தல்.  வாகன போக்குவரத்தில்  கவனம்  தேவை,  குடும்பத்தில்  மருத்துவ செலவுகள்  அதிகரிக்க வாய்ப்புண்டு.  

மாணவர்கள்  கல்வியில்   கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 


உங்கள் எண்ணங்களில், செயல்களில்  நம்பிக்கையை  அதிகரிக்க வேண்டிய  நேரமிது. செயலில்  வேகத்தை குறைத்து  விவேகத்தை  கடை பிடித்தால்  எதிர்பாரா  நஷ்டம், இழப்புகளை தவிர்க்கலாம்.  காரியங்களில்  தாமத வெற்றிகள்  கிடைக்கும்.



சனியின்  10, 2, 5 பாவங்களை பார்வை செய்வதால், தொழில், குடுமபம், குழந்தைகள் வழியில் பிரச்ச னைகள் தரும்.


தொழில், பணிகளில்  கவனம் தேவை, குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது, சிலருக்கு குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்கும் நிலை ஏற்படும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை  கொள்வது  அவசியம். அச்சம் கொள்ள தேவையில்லை .


இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.


வெள்ளிக்கிழமைகளில்  அம்மன்  வழிபாடு செய்வதும்,  முதியோர், உடன் ஊனமுற்றோர்களுக்கு உணவு, உடை போன்ற  இயன்ற உதவிகளை செயவது     சிறந்த பலன்களை தரும்.உடல் ஊனமுற்றோர், ஏழைகளுக்கு உணவளிப்பது, உதவுவது அஷ்டம சனியால் ஏற்படும் துன்பங்களை எதிர் கொள்ளும்  மனோ பலத்தை தரும்





நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Wednesday, 20 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017- 2020 மேஷம்


மேஷம்

உங்கள் ராசிக்கு சனிபகவான் 8ம்(அஷ்டமம்) இடத்திலிருந்து 9ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் உங்கள் ராசிக்கு 10, 11 ம்   இடத்திற்கு அதிபதி. 

அஷ்டம சனிகாலம் முடிந்தது  இதுவரை தொழிலில்  தேக்கம், வியாபாரத்தில் நஷ்டம், வேலையில்  திருப்தியற்ற  நிலை, பொருளாதாரத்தில்  பற்றாக்குறை  போன்ற தீய பலன்களை  அதிகம் சந்தித்திருப்பீர்கள்.

இனி தொழிலில்  இருந்த மந்த நிலை மாறும்,  தொழில்  ரீதியான கடன்கள்  கிடைக்கும்,  கூட்டு தொழில் இருந்த பிரச்சனைகள் சுமுகமாக முடியும்,  தொழில்,  வியாபாரம்,  வேலையில்  இருந்த  மறைமுக போட்டிகள்,   போட்டியாளர்களின்  இடையூறுகள்   குறையும்.


புதிய வாடிக்கையாளர்கள் மூலம்  லாபம் கிடைக்கும்,  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு  மேலாதிகாரிகள்,   உடன் பணிபுரிபவர்களுடன்  ஏற்படட  பிரசனைகள்  நீங்கி சமாதானம்  கிடைக்கும்,.



வேலை  தேடுவோருக்கு   வேலை வாய்ப்பு  மற்றும்   வெளிநாட்டு  வேலை  முயற்சியில் இருப்பவர்களுக்கு  வெற்றி கிடைக்கும்,  சிலருக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம்  ஏற்படும்.



 பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகள் தீர்ந்து,   வரவேண்டிய  பணம் கைவந்து  சேரும்.    நல்ல  பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில்  மருத்துவ  செலவுகள் குறையும்.



உடல், மன ரீதியான சோர்வு, கவலை நீங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும்.  நீண்ட  நாள் முயற்சிகள்  கைக்கூடும்,  வீண் அலைச்சல்,  செலவுகள்  குறையும். திடீர்  தனவரவு,  அந்நிய  நபர்களால்   எதிர்பாராத  நன்மை,  வெளிநாட்டு  தொடர்பு  வர்த்தகம், வியாபாரம்  மூலம்  லாபம் கிடைக்கும்.



வங்கி  கடன் மூலம்  புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைக்கூடும்.  புதிய நண்பர்களால் நன்மை, முன்னேற்றம்  ஏற்படும்.


சிலருக்கு புண்ணிய  ஸ்தலங்களுக்கு  செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து  ஒற்றுமை ஏற்படும்.


சனிபகவான்   ராசிக்கு 11, 3, 6ம்  இடங்களை பார்வை செய்கிறார். சகோதரர்களிடம்  பிரச்சனை ஏற்படலாம், கடன்கள் எளிதில் கிடைக்கும், தொழில் முறை போட்டிகள் உருவாகும். விருப்பங்கள் நிறைவேறுவதில் சிறிது தாமதம் ஏற்படலாம்.  லாபத்தின் ஒரு பகுதியை  சேமிப்பு , மூதலீடு போன்றவற்றை செய்வது எதிர்காலத்திற்கு  சிறந்த பயனளிக்கும்.   


நன்மைகள்   இனி   அதிகமாக  கிடைக்கும். கடந்த கால கவலைகள் மறைந்து  உற்சாகம் பெருகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.


குல தெய்வ வழிபாடு,  செவ்வாய்க்கிழமைகளில்  முருகன் வழிபாடு செய்வதும்,  இயன்றவர்கள்  திருச்செந்தூர்   சென்று முருகனை வழிபடுவதும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு  உணவளிப்பதும்  சிறந்த பலன்களை தரும்.


நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Tuesday, 19 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020




சனி பெயர்ச்சி பலன்கள்  -  2017 - 2020


திருக்கணித பஞ்சாங்கத்தின் படி  சனி பகவான்   அக்டோபர் 25, 2017  விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகி   ஜனவரி 23, 2020  வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். 


பொதுவாக ஜோதிடத்தில்  நம்பிக்கை இல்லாதவர் கள்  கூட சனி கிரகத்தின்  பெயரை கேட்டால் சற்று உள்ளுக்குள் பயம் கொள்வர்,  சூரிய குடும்பத்தில் மெதுவாக நகரும் கோளான  சனி ஒரு ராசியை கடக்க  சுமார் 2 1/2 வருடங்கள் எடுத்து கொள்கிறது,  ராசி மண்டலத்தை  கடக்க சுமார் 30 வருடங்களை எடுத்து கொள்கிறது. இதில்  ஒருவரின்  பிறந்த ராசி (ஜென்ம ராசி ), அதற்கு முன் (12),பின் (2) உள்ள  ராசி களில்  சஞ்சரிக்கும் பொழுது, ஏழரை சனி  என  அழைக்கபடும். மற்றும்  ராசிக்கு  4ல்  அர்த்தாஷ்டம சனி,   ராசிக்கு 7ல்  கண்ட சனி, ராசிக்கு 8ல்  அஷ்டம சனி,எனவும் அழைக்கபடுகிறது,  இந்த காலகட்டங்களே  கோச்சார சனியால் தீமைகள் அதிகம் தரும், இதில்   ஏழரை சனி காலம், அஷ்டம சனி  காலம் இரண்டும்  மற்றவற்றை  விட அதிக தீமை தரும் அமைப்பில் வருபவை



ராசிக்கு 3, 6, 11  இடங்களுக்கு  வரும் பொழுது  நன்மை தரும், ராசிக்கு  5, 9, 10 இடங்களுக்கு  வரும் மத்திமமாக இருக்கும்.



சனி கோள்  கால புருஷ தத்துவத்தில் 10, 11 வீடுக ளுக்கு  ( மகரம், கும்பம் )அதிபதி  இதன் குணம் தா மசம்,  ஆயுள் காரகன்  என அழைக்கபப்டுகிறது, கர்மம்  என்னும்  தொழிலை (வேலை  )  குறிக்கும் மேலும் தடை, தாமதம், நோய், உடலின் ஊனம், இருட்டு, கருப்பு நிறம்,  எண்ணெய்,  எள்  ஆகியவற் றிற்கு முக்கியமாக  காரகம்  வகிக்கிறது, இவர் பார்வை பட்ட இடங்கள்  தீமைகளை அதிகம் தருபவை.




அளப்பரிய  ஆற்றல்மிக்க  ஒளியுடைய சூரியனின் புதல்வன் சனி என  புராண கதைகள் கூறுகிறது. சூரியன் , சந்திரன், செவ்வாய்  ஆகிய கிரகங்களுக்கு பகைவர், புதன், சுக்கிரன், ராகு, கேது  ஆகிய கிரகங்களுக்கு நண்பர் 





இந்த சனி பெயர்ச்சி


ரிசபம்         -  அஷ்டம சனி

மிதுனம்         -   கண்ட சனி

கன்னி           -  அர்த்தாஷ்டம சனி

விருச்சிகம்      -   பாத சனி  (ஏழரை சனி)

தனுசு    -   ஜென்மசனி  (ஏழரை சனி)

மகரம்     -   விரைய  சனி  (ஏழரை சனி)

என்ற அமைப்பில் இருக்கிறது.



இந்த சனிபெயர்ச்சியால் பொது பலனினால் வரும் தீமைகளை  சமாளிக்கும்  தன்மை உங்கள்  பிறந்த ஜாதக  திசா புத்தியின் படி  இருக்கும்.



ஒரு  ஜாதகரின்  வாழ்வில்  ஏழரை சனி சுமார் மூன்று வரை வர வாய்ப்புள்ளது, இவற்றில்  முதல் முறை  மங்கு சனி எனவும், இரண்டாம்  முறை பொங்கு சனி எனவும், மூன்றாம்  முறை  மரண சனி எனவும்  அழைக்கபடுகிறது. 

முதல் சுற்று  நடப்பவர்களுக்கு ( மாங்கு சனி ) போராடி வெல்லும் நிலையும்.  இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு ( பொங்கு சனி )   அதிரடியான முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் தரும். மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு இட மாற்றங்களையும், உடல்ரீதியான  உபாதைகளை தரும். 



இந்த சனி  பெயர்ச்சி  மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும்  தரும் பலன்கள் இனி வரும் பதிவுகளில்  பார்க்கலாம்.



நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Monday, 18 December 2017

தனுசு சனி பலன்கள் ( 2017-2020)





இது வரை செவ்வாயின் வீடான  விருச்சிகத்தில்   இருந்த சனி பகவான்   இப்பொழுது  குருவின்  வீடான தனுசு  ராசியில்  பிரவேசிப்பதால் உலகில், நாட்டில்   ஏற்படும்  நிகழ்வுகள்,  பொருளாதாரம்,  பொருட்களின் உற்பத்தி,  விலை  ஏற்ற, இறக்கங்கள் போன்ற  பொது   பலன்களை பார்ப்போம்.


தங்கம், வெள்ளி விலை உயரும்,  பசு, எருமை போன்ற கால்நடைகளின்  விலை குறையும், எள்ளு, எண்ணெய் , பஞ்சு,  போன்றவற்றின் உற்பத்தி பெருகி, வியாபாரம் சிறக்கும்.  

காய்கறி, மளிகை  போன்ற  அத்தியாவசிய பொருட்கள்  விளைச்சல்  பெருகும்,  விலை உயர்வு சீராக இருக்கும்,  ( மிக அதிக விலையேற்றம் இருக்காது ).

தொழில் சார்ந்த இயந்திரங்களின் உற்பத்தி  பெருகும், அதே  நேரத்தில் இயந்திரங்களின்   விலை உயரும், தொழிலாளர்   பிரச்ச்னைகள்  தீரும்.   


போலி ஆன்மிக வாதிகள்,  சாமியார்கள் , மத  போதகர்களுக்கு  அறியப்படுவர்   மற்றும் மதம் சார்ந்த  பிரச்சனைகள்  அதிகரிக்கும், நீண்ட  தூர  புனித  யாத்திரை செல்பவர்கள் கவனமுடன் இருத்தல் நலம், விபத்துக்கள்  ஏற்பட வாய்ப்புண்டு, கலைத்துறையினருக்கு ஆன்மிக சாந்தவர்களுக்கும்  இடையே  கருத்து  மோதல் போன்றவை ஏற்படும்.  

நீதி  துறைக்கு  எதிரான  விமர்சனங்கள் அதிகம்  ஏற்படலாம்,   நீண்ட  நாள்  பொதுநல வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும். 


வங்கி, நிதித்துறையில்  குளறுபடிகளால்  மக்களிடம்  அதிருப்தி  உண்டாகும்,  கந்து வட்டி  போன்ற  நிதி சார்ந்த பிரச்சனைகள்  ஏற்படும்.


அடுத்த 2 1/5  ஆண்டுகளுக்கு பங்குசந்தை வளர்ச்சி சீராக இருக்கும்,  (மிக பெரிய ஏற்ற இறக்கம் வாய்ப்பில்லை)  தங்கம், வெள்ளி  நகைகள்,  வங்கி,  பைனான்ஸ் , வாகனங்கள், இரும்பு , இயந்திரம்,  எண்ணெய்  போன்றவற்றின்  பங்குகள் உயரும்.

மழை மிதமாக இருக்கும்,   புயல், சூறாவளி  காற்றினால்,  நெருப்பினால்  பாதிப்பு  உண்டு,  விமான  கோளாறுகள்,  விபத்துகள்  ஏற்பட வாய்ப்புண்டு.


நாடுகளுக்கிடையிலான  பிரச்சனைகள் அதிகரிக்கும்,  வெளிநாட்டு  தொடர்பு  தொழில், வர்ததகம்  தேக்கம் அடையும். 


குழந்தைகள் சார்ந்த   பிரச்சனைகள்,   குழந்தைகள்  நல காப்பகங்களில் பிரச்சனைகள்  ஏற்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் கவனம் தேவை.


நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்










Sunday, 27 August 2017

சனி, செவ்வாய் பரஸ்பர பார்வை பாதிப்புகள் (கோச்சாரம்)

 

வணக்கம்  நண்பர்களே 

கோச்சார கிரக சஞ்சார  ரீதியான ஜோதிட ஆய்வு  பதிவு  மட்டுமே  இது,  (அச்சுறுத்தும்  நோக்கம்  கொண்டதல்ல )

இயற்கை பாப கிரகங்களான சனி, செவ்வாய்  சேர்க்கை,  பரஸ்பர பார்வை தீய பலன்களை அதிகம் தரக்கூடியவை, தற்பொழுது ( திருக்கணித ரீதியாக )   ஆவனி 11,  27-8-2017 முதல் புரட்டாசி 27,13-10-2017 வரை.    சனி  விருச்சிகத்தில், செவ்வாய்  சிம்மத்தில், (உடன் சூரியன்)
சனி  தனது 10ம் பார்வையால் செவ்வாயையும், செவ்வாய் தனது 4ம் பார்வையால்  சனியையும் பார்வை செய்வது  மேலும் இவை  நெருப்பு, நீர்   ராசியில் ஏற்படுவது உலகியல் ஜோதிட ரீதியாக பாதிப்பை  தருபவையே. 

நிலநடுக்கம், புயல், வெள்ளம், மலை சரிவு, கடல் உள்வாங்குதல், நெருப்பினால் பெரும் விபத்துகள் போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து  அவற்றால் பல இழப்புகளும்  ஏற்பட வாய்ப்புண்டு.    கடலோர பகுதி, மலை பகுதிகளில் இருக்கும் மக்கள் சற்று எச்சரியுடன்  
இருப்பதும், பயணங்கள் மேற்கொள்வதும்  சிறப்பு.                                                                                                   மேலும் பாதிப்படைய வாய்ப்புடைய நாடுகள்,  மாநிலங்கள்,  தமிழகம், கேரள, தெலுங்கானா, ஹிமாச்சல், குஜராத், ஒரிசா,  இத்தாலி, பிரான்சு, இலங்கை, ருமேனியா, ஆப்கானிசுத்தான்,     பிரேசில், ஷ்வீடன், சிரியா, நார்வே,   அல்ஜீரிய, பெங்கால்                                                                                    அஷ்ட்ரோ கண்ணன்                                    பரம்பரை ஜோதிடர்,  ஜோதிட ஆய்வாளர்