சிம்ம ராசி
உங்கள் ராசிக்கு சனி பகவான் 4ல் இருந்து ராசிக்கு 5ல் பெயர்ச்சியாகிறார். ராசிக்க 6, 7 ம் பாவகங்களுக்கு அதிபதி. இதுவரை இருந்த அர்த்தாஷ்டம சனி காலம் விலகுகிறது. அஷ்டமத்தில் (8) பாதி அர்த்தாஷ்டமம் (4) ஆகும்.
இதுவரை உடல் நலக்கோளாறுகள், வீடு, நிலம், கல்வி பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டிருக்கும். 4ம் இட சனியின் கடந்த காலத்தை விட இந்த காலம் சிறந்ததாக இருக்கும் பிரச்சனைகளில் இருந்து மெதுவாக விடுபடும் காலமாகும், 5ம் என்பது மத்திமாக இருக்கும்.
குடும்பத்தில் தடை பெற்றிருந்த சுப காரியங்கள் மன நிறைவாக நடைபெரும். சுப செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை நிலம், வீடு, போன்றவற்றில் முதலீடாக மாற்றி கொள்வது சிறப்பு. தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். மறைமுக போட்டியாளர்கள் பின் வாங்குவர்.
நீண்ட நாள் இருந்த இனம்புரியா நோய்கள், வலிகள் நீங்கும், உடல் ஆரோக்கியம் கூடும், மருத்துவ செலவுகள் குறையும்.
தேவைக்கேற்ற பண வரவு நனறாக இருக்கும், வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வரவேண்டிய பணம் வந்து கைவந்த சேரும்.
இன்சூரன்ஸ், மெடிக்கல் பாலிசி தொடர்பான தொழில் செய்ப்வர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.
சனி பகவானின் பார்வை ராசிக்கு 11, 2, 7 ம் இடங்க ளை செய்கிறார், லாபம், காரிய வெற்றி தாமதமாக கிடைக்கும், பண புழக்கம் முன்பைவிட குறைவாக இருக்கும், திருமண முயற்சி உடையவர்களுக்கு சாதகமான காலம்.
புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்றிருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் கிடைக்கும்.
தொழில், வேலைக்கு தகுந்த தொழிலாளர்கள் அமைவார்கள்.
ஏற்கெனவே வாங்கிருந்த கடன்கள் குறையும், நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களின் பேரில் புதிய கடன்கள் கிடைக்கும்.
நிலுவையில் உள்ள நீண்ட நாள் வழக்குகளில் சாதகமான வெற்றி கிடைக்கும்.
சிறிய விஷயங்களையும் பெரியதாக எண்ணி கவலை கொள்ள வேண்டாம், குடுபத்தில் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுக்கு பிடித்த கலைகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் மன அமைதியும், மகிழ்வும் கிடைக்கும்.
இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள் சாதகமாக இருந்தால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
குல தெய்வம், காவல் தெய்வங்கள் வழிபாடு செய்வதும், மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது போன்றவை நற்பலனை தரும்.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment