கடக ராசி
உங்கள் ராசிக்கு 5 ல் இருந்த சனி ராசிக்கு 6 ல் பெயர்ச்சியாகிறார், உங்கள் ராசிக்கு 7,8 ம் பாவக அதிபதி
சனி பகவானுக்கு உகந்த இடங்களில் இதுவும் ஒன்று, 6 ல் சனி இருப்பது அஷ்டலட்சுமி யோகம் என்பர்.
இனிவரும் காலம் உங்களுக்கு மிகவும் சாதகமான காலம்,கடன்கள் அடைப்படும், தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும், நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும்.
புதிய சிந்தனை , செயல்களில் ஆர்வமும், வேகமும் கொள்வீர்கள்,
திருமணம் போன்ற சுப முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றி,
கணவன், மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிட்டும்.
கூட்டு தொழில், புதிய வர்த்தக ஒப்பந்தம், வெளிநாடு தொடர்பு வியாபாரத்தில் முதலீடுகளால் லாபம் ஏற்படும், தொழில், வியாபார கடன்கள் எளிதாக கிடைக்கும். தொழில், வேலையில் விரும்பிய இடமாற்றம் , ஊதிய உயர்வு போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாரா திடீர் தனவரவு உண்டு.
தொழில்,உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியையும், வருமானத்தையும், வழக்குகளில் வெற்றியையும், நல்ல தன வரவையும் தரும்
பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் தீரும், பகைவர்களும் நண்பர்கள் ஆவர்.
சனி ராசிக்கு 12, 3, 8ம் இடங்களை பார்க்கிறார்,
வெளிநாடு செல்ல முயற்சி உடையவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், சகோதரர்கள் மூலம் நன்மை கள் ஏற்படும், எனினும் சிறிது விரிசல் ஏற்பட வாய் ப்புண்டு, உடல் நலக்கோளாறுகள் கட்டுக்குள் இருக் கும்.
சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும், மனோபலம் கூடும், எண்ணங்கள் செயலாகும் நேரமிது.
இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள் சாதகமாக இருந்தால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
பரிகாரம்
திங்கட்கிழமை சிவ வழிபாடு, செவ்வாய்கிழமை துர்க்கை, காளி அம்மன் வழிபாடு செய்வதும், ஆதரவற்றோர், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலன்களை தரும்.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment