Thursday, 28 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020 மகரம்



மகர ராசி

உங்கள் ராசிக்கு  சனி பகவான் 11ம் இடத்திலிருந்து 12 ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்,  உங்கள் ராசி  மற்றும்   2ம் இடத்திற்கு அதிபதி. 


ஏழரைசனி காலத்தில் விரைய சனிகாலம் ஆரம்பிக்கிறது. 



இதுவரை  11ம்  இட சனி   லாபம், மேன்மை,  தொழில் வெற்றி போன்ற நற்பலன்கள் அதிகம் நடைபெற்றிருக்கும்.

இனி விரையசனி காலத்தில்  தொழில், வேலையில்  சிலருக்கு எதிர்பார்த்த  லாபம்  இன்மை, மந்தநிலை, ஊர், வீடு  இடமாற்றம் போன்றவை நடக்கும்.


நம்பிக்கைக்குரியவர்  என்றாலும்  பிறருக்காக  ஜாமீன்  போடுவது, பணம்  கொடுக்கல், வாங்கல்  போன்றவற்றை  ஆலோசித்து செய்தல் நலம்.


தொழில், வேலையில்   தொழில்  போட்டியாளர்கள்  உருவாக  வாய்ப்புண்டு.    இடமாற்றம்  விரும்புபவர்கள்   புதிய வேலை வாய்ப்பு  உறுதியான  பின்பே  இருக்கும்  வேலையை  விடுதல் நலம்.  புதிதாக  வேலை தேடுவோருக்கு  வெளிநாடு, வெளியூர்  வேலைவாய்ப்புகளே  அதிகம்  வரும்.



சிலருக்கு குடும்பத்தை  விட்டு பிரிந்து இருக்கும் நிலையும்,  தன் சொந்த வீட்டை  வாடகைக்கு  விட்டு,  தான்  வாடகை வீட்டு  செல்லும் நிலையும் உருவாகும், இதற்கு  தொழில், வேலை காரணமாக  அமையும்.



புதிய  சொத்துக்கள், இடம், நிலம் போன்றவை  வாங்கும் போது  கவனம் தேவை, நிதி பற்றாக்குறை  ஏற்படும், உணவு முறைகளால் உடல் நல  பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு   மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.



பயணங்களில் கவனமாக செல்வது நல்லது, பொருளிழப்பு  ஏற்படலாம். வெளிநாடு முயற்சி உடையவர்களுக்கு  வெற்றி  தரும்.

குடும்பத்தினர், உறவினர்களிடம், தொழில், வேலையில் பகை ஏற்படலாம், வீண் விவாதங்களை  தவிர்ப்பது  நல்லது.  



சனிபகவான்  ராசிக்கு 2, 6, 9 ம்  இடங்களை பார்வை செய்கிறார். குடும்ப  மற்றும் சகோதரர்கள் வழியில் செலவுகள் அதிகரிக்கும், கடன்கள் எளிதில் கிடைக்கும்,  பூர்வீகம்,  தந்தை வழி  உறவுகளால் பிரச்சனை  ஏற்படலாம் .



முதல் சுற்று  நடப்பவர்களுக்கு (மங்கு சனி)  கலக்கம்  தந்து  தெளிவாக்கும். இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு ( பொங்கு சனி )   மாற்றம்  தந்து  ஏற்றம்  தரும். மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு சிறிய பிரிவினை, இடமாற்றம் ஏற்பட்டு சரியாகும்.


இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.


சிவன்  வழிபாடு, பைரவர் வழிபாடு,  பொதுநல  சேவைகளுக் நன்கொடை அளித்தால், அன்னதானம் செய்தல் மன உறுதி  தரும்.



நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

No comments:

Post a Comment