துலாம் ராசி
உங்கள் ராசிக்கு சனி பகவான் 2ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார், ராசிக்கு 4,5 ம் இடத்திற்கு அதிபதி.
ஏழரைசனி காலம் முடிகிறது, இது வரை தொழிலில் தேக்கம், பணியிடங்களில் பிரச்சனை, பொருளாதாரத்தில் பின்னடைவு போன்றவற்றால் மனகவலை அடைதிருப்பீர்கள்,
இனி வரும் 2 1/5 ஆண்டுகள் மிக சிறந்த பலன்கள் கிடைக்கும். தடைகள் அகலும், உங்கள் எண்ணங்கள் , திட்டங்கள் வெற்றி பெறும்.
இதுவரை இருந்த எதிர்பாரா இழப்பு, கடன், நம்பியவர்களால் ஏமாற்றம், காரிய தாமதம் போன்ற சாதகமற்ற சூழ்நிலை கடந்து விட்டது. தொழில், வியாபாரம், உத்தியோத்தில் நல்ல முன்னேற்றமான காலமாகும். உடல், மன ரீதியான சோர்வு, கவலை நீங்கும்.
தொழில், வேலை காரணமாக குடும்பத்தினரை பிரிந்து வெளிநாடு, வெளியூரில் இருப்பவர்கள் குடும்பத்துடன் ஒன்று சேர்வர்.குடும்பத்தில் கருத்துவேறுபடடால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.
தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும், வருமானம் பெருகும். இருக்கும் கடன்கள் அடை படு ம்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும், பலருக்கு புதிய தொழில், வேலை வாய்ப்புகள், உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
மனக்கவலை அகன்று மகிழ்ச்சி உண்டாகும்.
சனி பகவான் ராசிக்கு 5,9,12 ம் இடங்களை பார்வை செய்கிறார் பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், நீண்ட நாள்களாக இருந்த உடல் நல கோளாறுகள் நீங்கும்,
தீர்த்த யாத்திரை செல்ல வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வெற்றி தரும்,
கடந்த கால அனுபவங்கள் உங்களுக்கு உண்மையாக உங்கள் மீது நம்பிக்கையும், அக்கறையும் கொண்டவர்கள் யார் என்பதை உணர்த்தியிருக்கும்.
கவலையை விடுங்கள், நன்கு திட்டமிட்டு செயல்பட நீங்கள் நினைத்த வெற்றியை தரும் காலமாகும் இது.
இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள் சாதகமாக இருந்தால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
குல தெய்வ வழிபாடு செய்வதால் மேன்மையடையலாம்.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment