மீன ராசி
உங்கள் ராசிக்கு சனிபகவான் 9 ம் இடத்திலிருந்து 10ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் உங்கள் ராசிக்கு 11, 12ம் இடத்திற்கு அதிபதி.
இதுவரை 9 ம் இடத்தால் நீண்ட தூர பயணம், நல்ல பண புழக்கம் போன்ற சாதகமான பலன்களும் மற்றும் தொழிலில் அதிக ஈடுபாடு இன்மை, தந்தை வழியில் சில பிரச்சனைகள் தந்திருக்கும்.
தொழில், வேலையில் போட்டிகள் ஏற்படும், வேலைபளு அதிகரிக்கும், உங்கள் திறமைகள் வெளிபடும், சிறிது அலைச்சல், சோர்வு தரும்.
பொது சேவை, சமூக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சிலருக்கு தொழில், வேலை இடமாற்றம் ஏற்படும், தொழில் கடன்கள் கிடைக்கும்.தொழில் மூதலிடுகளில், வேலையாட்களிடம் கவனம் கொள்வது நல்லது.
அதே நேரத்தில் புதிய நண்பர்கள், தொழில் பங்குதாரர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும், வீடு, நிலம், தொழில் தொடர்பான பத்திரங்களில் கையெழுத்திடும் முன் சரிபார்ப்பது நலம்.
தொழில் ரீதியான வெளிநாடு முயற்சி வெற்றி பெறும். புதிய வேலைக்காக முயற்சிபவர்களுக்கு வேலை கிடைக்கும்
சனிபகவான் ராசிக்கு 12, 4, 7ம் இடங்களை பார்வை செய்கிறார்.
சிலருக்கு வீடு, வாகனங்கள் விற்கும் அல்லது மாற்றும் நிலையும், உடல் நலனில் சிறிது பிரச்சனைகளும் உருவாகலாம். கணவன், மனைவிடையே சிறிய பிரச்சனைகள் தரலாம். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து செல்வது நலம்.
திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் நீண்ட நாள் கனவுகள், எண்ணங்கள் செயலாகும் நேரமிது.
வியாழக்கிழமைகளில் குரு பகவான் வழிபாடு, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை போன்ற இயன்ற உதவிகளை செய்வது சிறந்த பலன்களை தரும்.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment