Wednesday, 20 December 2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2017- 2020 மேஷம்


மேஷம்

உங்கள் ராசிக்கு சனிபகவான் 8ம்(அஷ்டமம்) இடத்திலிருந்து 9ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் உங்கள் ராசிக்கு 10, 11 ம்   இடத்திற்கு அதிபதி. 

அஷ்டம சனிகாலம் முடிந்தது  இதுவரை தொழிலில்  தேக்கம், வியாபாரத்தில் நஷ்டம், வேலையில்  திருப்தியற்ற  நிலை, பொருளாதாரத்தில்  பற்றாக்குறை  போன்ற தீய பலன்களை  அதிகம் சந்தித்திருப்பீர்கள்.

இனி தொழிலில்  இருந்த மந்த நிலை மாறும்,  தொழில்  ரீதியான கடன்கள்  கிடைக்கும்,  கூட்டு தொழில் இருந்த பிரச்சனைகள் சுமுகமாக முடியும்,  தொழில்,  வியாபாரம்,  வேலையில்  இருந்த  மறைமுக போட்டிகள்,   போட்டியாளர்களின்  இடையூறுகள்   குறையும்.


புதிய வாடிக்கையாளர்கள் மூலம்  லாபம் கிடைக்கும்,  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு  மேலாதிகாரிகள்,   உடன் பணிபுரிபவர்களுடன்  ஏற்படட  பிரசனைகள்  நீங்கி சமாதானம்  கிடைக்கும்,.



வேலை  தேடுவோருக்கு   வேலை வாய்ப்பு  மற்றும்   வெளிநாட்டு  வேலை  முயற்சியில் இருப்பவர்களுக்கு  வெற்றி கிடைக்கும்,  சிலருக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம்  ஏற்படும்.



 பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகள் தீர்ந்து,   வரவேண்டிய  பணம் கைவந்து  சேரும்.    நல்ல  பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில்  மருத்துவ  செலவுகள் குறையும்.



உடல், மன ரீதியான சோர்வு, கவலை நீங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும்.  நீண்ட  நாள் முயற்சிகள்  கைக்கூடும்,  வீண் அலைச்சல்,  செலவுகள்  குறையும். திடீர்  தனவரவு,  அந்நிய  நபர்களால்   எதிர்பாராத  நன்மை,  வெளிநாட்டு  தொடர்பு  வர்த்தகம், வியாபாரம்  மூலம்  லாபம் கிடைக்கும்.



வங்கி  கடன் மூலம்  புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைக்கூடும்.  புதிய நண்பர்களால் நன்மை, முன்னேற்றம்  ஏற்படும்.


சிலருக்கு புண்ணிய  ஸ்தலங்களுக்கு  செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து  ஒற்றுமை ஏற்படும்.


சனிபகவான்   ராசிக்கு 11, 3, 6ம்  இடங்களை பார்வை செய்கிறார். சகோதரர்களிடம்  பிரச்சனை ஏற்படலாம், கடன்கள் எளிதில் கிடைக்கும், தொழில் முறை போட்டிகள் உருவாகும். விருப்பங்கள் நிறைவேறுவதில் சிறிது தாமதம் ஏற்படலாம்.  லாபத்தின் ஒரு பகுதியை  சேமிப்பு , மூதலீடு போன்றவற்றை செய்வது எதிர்காலத்திற்கு  சிறந்த பயனளிக்கும்.   


நன்மைகள்   இனி   அதிகமாக  கிடைக்கும். கடந்த கால கவலைகள் மறைந்து  உற்சாகம் பெருகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள்  சாதகமாக இருந்தால் தீய பலன்கள்  குறைந்து  நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.


குல தெய்வ வழிபாடு,  செவ்வாய்க்கிழமைகளில்  முருகன் வழிபாடு செய்வதும்,  இயன்றவர்கள்  திருச்செந்தூர்   சென்று முருகனை வழிபடுவதும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு  உணவளிப்பதும்  சிறந்த பலன்களை தரும்.


நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

No comments:

Post a Comment