சனி பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2020
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் அக்டோபர் 25, 2017 விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகி ஜனவரி 23, 2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.
பொதுவாக ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் கள் கூட சனி கிரகத்தின் பெயரை கேட்டால் சற்று உள்ளுக்குள் பயம் கொள்வர், சூரிய குடும்பத்தில் மெதுவாக நகரும் கோளான சனி ஒரு ராசியை கடக்க சுமார் 2 1/2 வருடங்கள் எடுத்து கொள்கிறது, ராசி மண்டலத்தை கடக்க சுமார் 30 வருடங்களை எடுத்து கொள்கிறது. இதில் ஒருவரின் பிறந்த ராசி (ஜென்ம ராசி ), அதற்கு முன் (12),பின் (2) உள்ள ராசி களில் சஞ்சரிக்கும் பொழுது, ஏழரை சனி என அழைக்கபடும். மற்றும் ராசிக்கு 4ல் அர்த்தாஷ்டம சனி, ராசிக்கு 7ல் கண்ட சனி, ராசிக்கு 8ல் அஷ்டம சனி,எனவும் அழைக்கபடுகிறது, இந்த காலகட்டங்களே கோச்சார சனியால் தீமைகள் அதிகம் தரும், இதில் ஏழரை சனி காலம், அஷ்டம சனி காலம் இரண்டும் மற்றவற்றை விட அதிக தீமை தரும் அமைப்பில் வருபவை
ராசிக்கு 3, 6, 11 இடங்களுக்கு வரும் பொழுது நன்மை தரும், ராசிக்கு 5, 9, 10 இடங்களுக்கு வரும் மத்திமமாக இருக்கும்.
சனி கோள் கால புருஷ தத்துவத்தில் 10, 11 வீடுக ளுக்கு ( மகரம், கும்பம் )அதிபதி இதன் குணம் தா மசம், ஆயுள் காரகன் என அழைக்கபப்டுகிறது, கர்மம் என்னும் தொழிலை (வேலை ) குறிக்கும் மேலும் தடை, தாமதம், நோய், உடலின் ஊனம், இருட்டு, கருப்பு நிறம், எண்ணெய், எள் ஆகியவற் றிற்கு முக்கியமாக காரகம் வகிக்கிறது, இவர் பார்வை பட்ட இடங்கள் தீமைகளை அதிகம் தருபவை.
அளப்பரிய ஆற்றல்மிக்க ஒளியுடைய சூரியனின் புதல்வன் சனி என புராண கதைகள் கூறுகிறது. சூரியன் , சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு பகைவர், புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு நண்பர்
இந்த சனி பெயர்ச்சி
ரிசபம் - அஷ்டம சனி
மிதுனம் - கண்ட சனி
கன்னி - அர்த்தாஷ்டம சனி
விருச்சிகம் - பாத சனி (ஏழரை சனி)
தனுசு - ஜென்மசனி (ஏழரை சனி)
மகரம் - விரைய சனி (ஏழரை சனி)
என்ற அமைப்பில் இருக்கிறது.
இந்த சனிபெயர்ச்சியால் பொது பலனினால் வரும் தீமைகளை சமாளிக்கும் தன்மை உங்கள் பிறந்த ஜாதக திசா புத்தியின் படி இருக்கும்.
ஒரு ஜாதகரின் வாழ்வில் ஏழரை சனி சுமார் மூன்று வரை வர வாய்ப்புள்ளது, இவற்றில் முதல் முறை மங்கு சனி எனவும், இரண்டாம் முறை பொங்கு சனி எனவும், மூன்றாம் முறை மரண சனி எனவும் அழைக்கபடுகிறது.
முதல் சுற்று நடப்பவர்களுக்கு ( மாங்கு சனி ) போராடி வெல்லும் நிலையும். இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு ( பொங்கு சனி ) அதிரடியான முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் தரும். மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு இட மாற்றங்களையும், உடல்ரீதியான உபாதைகளை தரும்.
முதல் சுற்று நடப்பவர்களுக்கு ( மாங்கு சனி ) போராடி வெல்லும் நிலையும். இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு ( பொங்கு சனி ) அதிரடியான முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் தரும். மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு இட மாற்றங்களையும், உடல்ரீதியான உபாதைகளை தரும்.
இந்த சனி பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் தரும் பலன்கள் இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment