மிதுன ராசி
உங்கள் ராசிக்கு 6ல் இருந்த சனி 7ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்,
சனி உங்கள் ராசிக்கு 8, 9 பாவகங்களுக்கு அதிபதி, 7ல் உள்ள காலம் சிறப்பானது அன்று, இது கண்ட சனி என அழைக்கபடுகிறது.
புதிய செயல்கள், கூட்டு தொழில் போன்றவற்றில் கவனமாக இருப்பது நன்று. புதிய முதலீடுகள், தொழில் விரிவாக்கம், புதிய நபர்களை வேலைக்கு சேர்ப்பது போன்றவற்றை நன்கு ஆலோசித்து செய்யுங்கள்.
உடல், மனோ ரீதியான சோர்வு வந்து விலகும், மறதி அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, எங்கும், எதிலும் தேவையானவற்றை முன்பே தயார் செய்து கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள், செயல்களில் ஈடுபடுவதை தவிருங்கள்.
தொழில், வேலை தொடர்பான நீண்ட தூர பயணங்கள் அதிகம் ஏற்ப்படும். புதியதாக கூட்டு தொழில், வர்த்தகத்தில் ஈடுபடுவது சிறப்பல்ல, நம்பியவர்கள் ஏமாற்ற வாய்ப்புண்டு, வேலையில் உடன் பணிபுரிவோர், மேலதிகாரிகள் உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும், அவசரம் வேண்டாம்.
கணவன், மனைவி உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும், விட்டு கொடுத்து செல்வது நலம், உறவினர்கள், நண்பர்களிடமும், கூட்டு தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் புதிய முயற்சிகள், செயல்கள் தாமதத்திற்கு பிறகு வெற்றி பெறும். பொறுமை அவசியம்.
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை, மறதி ஏற்படவாய்ப்புண்டு,
முக்கிய பாடங்களில் கவனம் செலுத்தினால் அச்சம் கொள்ள தேவையில்லை.
கவலையை விடுங்கள், எதிலும் மற்றவர்களை எதிர்பார்க்காமல், உங்கள் சுய முயற்சியில் சற்று கவனத்துடன் செயல்படுங்கள்,
சற்று தாமதமானாலும், வெற்றி உங்கள் வசமாகும்.
புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது, தொழில், வியாபாரத்தில் சிறிது சரிவை சந்திக்க நேரிடலாம், நண்பர்களும் எதிரிகள் ஆகும் வாய்ப்பு உண்டு.
பாக்கிய அதிபதியாக சனி இருப்பதால், தீமைகளின் அளவு குறையும், பிரச்சனைகள் ஏற்ப்பட்டாலு ம் இறுதியில் வெற்றி உங்களுக்கு சாதகமாக இரு க்கும்.
பலருக்கு தொழில் ரீதியாக இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற் படும், அலைச்சல் அதிகரிக்கும்,
சனியின் பார்வை ராசி, 4, 9 இடங்களில் விழுவதால், தாய், வீடு, வாகனம், தந்தை வகைகளில் பிரச்சனைகள் தரும்,
மன குழப்பம் தரும், கவன சிதறல் ஏற்படும், சிறிய பிரச்சனைகளை கூட பெரியதாக நினைத்து கொள்ள வேண்டாம், காரிய தாமதம் ஏற்படும். பெற்றோர், குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது அவசியம்.
இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள் சாதகமாக இருந்தால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
சனி,புதன் கிழமைகளில் பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை போன்ற இயன்ற உதவிகளை செயவது சிறந்த பலன்களை தரும்.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment