ரிஷபம்
உங்கள் ராசிக்கு இதுவரை 7ல் இருந்த சனி 8ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார், ராசிக்கு 9, 10 ம் பாவக அதிபதி, அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்ற பழமொழி உண்டு.
2020 வரை உங்கள் செயலில் வேகத்தை விடுத்து விவேகத்தை கடை பிடிப்பது நல்லது, உங்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனமாக செயல்படுவது நலம். தொழில், வியாபாரத்தில், புதிய முதலீடுகளில் கூட்டு தொழிலில் , புதிய நண்பர்கள், வாடிக்கையாளர்கள், தொழில் பங்குதார்கள் இவர்களுடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
உங்கள் தேவைக்கேற்ற பண வரவு நன்றாக இருக்கும், விரையங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு, சிலருக்கு வீடு மற்றும் தொழிலில் இடமாற்றம் ஏற்படும்.
வெளிநாடு தொடர்பு வர்த்தகம், பங்கு சந்தை முதலீடு, தொழில் விரிவாக்கம், புதிய வாகனம், வீடு , நிலம் வாங்குவது பணம் கொடுக்கல், வாங்கல், ஒப்பந்த பத்திரங்கள் போன்றவற்றில் கையெழுத்திடும் பொழுது ஒருமுறைக்கு மேல் சரிபார்த்து செய்வது நலம்.
அவசரப்பட்டு பிறருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்த்தல். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை, குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.
மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
உங்கள் எண்ணங்களில், செயல்களில் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய நேரமிது. செயலில் வேகத்தை குறைத்து விவேகத்தை கடை பிடித்தால் எதிர்பாரா நஷ்டம், இழப்புகளை தவிர்க்கலாம். காரியங்களில் தாமத வெற்றிகள் கிடைக்கும்.
சனியின் 10, 2, 5 பாவங்களை பார்வை செய்வதால், தொழில், குடுமபம், குழந்தைகள் வழியில் பிரச்ச னைகள் தரும்.
தொழில், பணிகளில் கவனம் தேவை, குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது, சிலருக்கு குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்கும் நிலை ஏற்படும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை கொள்வது அவசியம். அச்சம் கொள்ள தேவையில்லை .
இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள் சாதகமாக இருந்தால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும், முதியோர், உடன் ஊனமுற்றோர்களுக்கு உணவு, உடை போன்ற இயன்ற உதவிகளை செயவது சிறந்த பலன்களை தரும்.உடல் ஊனமுற்றோர், ஏழைகளுக்கு உணவளிப்பது, உதவுவது அஷ்டம சனியால் ஏற்படும் துன்பங்களை எதிர் கொள்ளும் மனோ பலத்தை தரும்
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment