தனுசு ராசி
உங்கள் ராசிக்கு சனி பகவான் 12ம் இடத்திலிருந்து உங்கள் ஜென்மராசிக்கு பெயர்ச்சியாகிறார், ராசிக்கு 2,3 ம் இடத்திற்கு அதிபதி.
ஏழரை சனி காலத்தில் விரைய சனி முடிந்து ஜென்ம சனி காலம் ஆரம்பிக்கிறது. இதுவரை எதிர்பாராத வைகையில் பல இழப்புக ளையும், நஷ்டத்தையும் அதிகம் சந்தித்திருப்பீர்கள், சிலருக்கு புதிய தொழிலுக்காக சொத்துக்களை வங்கியில் அடமானம் வைக்கும் நிலை ஏற்பட்டி ருக்கும்.
பொதுவாக ஜென்ம சனி காலத்தில் சுறுசுறுப்பாக செயல்பட வைத்து உங்கள் திறமையை வெளிப்படுத்தும், குடும்பத்தினர், உறவினர்களிடம் விரோதம் ஏற்படலாம், முன்பு இருந்த சிறிய பிரச்சனைகள் கூட இப்பொழுது பெரியதாக தெரியும், சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்க நேரலாம், இதற்கு வேலையில் இடமாற்றம் காரணமாக இருக்கும். பலருக்கு வீடு, பணியிட மாற்றம் ஏற்படும், பணியில் வேலை பளு அதிகரிக்கும்.
புதிய முயற்சிகள், செயலிகளில் சற்று கவனம் தேவை, குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும் நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புண்டு என்பதால் வீண் வாக்குவாதம், மற்றவர்களின் பிரசனைகளில் தலையீடு போன்றவற்றில் கவனம் தேவை.
நம்பிக்கைக்குரியவர் என்றாலும் பிறருக்காக ஜாமீன் போடுவது, பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றை ஆலோசித்து செய்தல் நலம்.
பலருக்கு தொழில், வேலையில் இடமாற்றம் மற்றும் தொழில் போட்டியாளர்கள் உருவாக வாய்ப்புண்டு. இடமாற்றம் விரும்புபவர்கள் புதிய வேலை வாய்ப்பு உறுதியான பின்பே இருக்கும் வேலையை விடுதல் நலம். புதிதாக வேலை தேடுவோருக்கு வெளிநாடு, வெளியூர் வேலைவாய்ப்புகளே அதிகம் வரும்.
வீடு, நிலம், நகை மூலம் கடன்கள் எளிதாக கிடைக்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும், பலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். வீண் அலைச்சல், உடல், மன சோர்வு அடிக்கடி ஏற்ப்பட்டு விலகும். தியானம், யோக போன்றவற்றை கடைபிடித்து வருவது நலம்.
புதிய நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, கூட்டு தொழில், முதலீடுகளில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு படிப்பில் சற்று கவனம் தேவை, மறதியும், சோம்பலும் அடிக்கடி ஏற்படும், முக்கிய பாடங்களில் கவனமாக படித்து வர கவலை இல்லை
சனிபகவான் ராசிக்கு 3, 7, 10 ம் இடங்களை பார்வை செய்கிறார். பணம் கொடுக்கல், வாங்கல், பிறருக்கான ஜாமீன் கையெழுத்து ஈடுதல் போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வேலையில் போட்டி உருவாகும் உங்களின் உண்மையான நண்பர்கள் யார்? என்பதை அறிந்து கொள்ள உதவும் நேரமிது.
முதல் சுற்று நடப்பவர்களுக்கு ( மாங்கு சனி ) போராடி வெல்லும் நிலையும். இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு ( பொங்கு சனி ) அதிரடியான முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் தரும். மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு இட மாற்றங்களையும், உடல்ரீதியான உபாதைகளை தரும்.
கவலையை விடுங்கள், வளமான எதிர்காலத்திற்காக உழைக்கும் நேரமிது. இறையருளை துணை கொண்டு உங்கள் முயற்சியை முன்னெடுத்து செல்லுங்கள்.
உங்கள் பிறந்த ஜாதக அமைப்பின்படி நல்ல திசா புக்திகள் நடைபெற்றால் தீமைகள் குறைந்து வளர்ச்சி, முன்னேற்றம் தரும்.
ஆஞ்சநேயர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, திருக்கோவில் மற்றும் பொது பணிகளை செய் வதால் மன சாந்தி பெறலாம்.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment