விருச்சி ராசி
உங்கள் ராசியில் இருந்த சனி பகவான் (ஜென்ம சனி ), ராசிக்கு 2ம் இடத்திற்கு பெயர்ச்சி யாகிறார், ராசிக்கு 3,4 ம் பாவக அதிபதி,
இந்த ஏழரை சனி காலத்தில் ஜென்ம சனி காலம் முடிந்து 2ம் இட பாத, வாக்கு சனி காலம் தொடர்கிறது,
இது வரை மன குழப்பம், தடுமாற்றம், காரிய தாமதம், உடல் நலக்கோளாறுகள் போன்ற வைகளை அனுபவித்தீர்கள், இனி வரும் காலம் இவற்றில் இருந்து மெதுவாக வெளிவ ருவீர்கள்,
பிரச்சனைகளும், சங்கடமும் குறையும், எனினும் இன்னும் 2 1/2 வருடம் ஏழரை சனி காலம்.
குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம், விட்டு கொடுத்து செல்வது நலம், பொது இடங்கள், வேலையில் வீண் விவாதங்களை தவிருங்கள்.
முக்கிய சுப காரியங்களில், முயற்சிகளில் இருந்த தடை , தாமதம் விலகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த போக்கு நீங்கும். பலருக்கு தொழில், வியாபாரம், வேலையில் இடமாற்றத்திற்கு பிறகு முன்னேற்றம் ஏற்படும்.
பூர்விக சொத்துக்களில் பிரசனைகள் இருப்பவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் கொள்வீர்கள். குழந்தை செல்வம் தாமதித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
பலருக்கு கட்டிய வீடு வாங்கும் யோகமும், பல காரணங்களுக்கா சொந்த வீடு கட்டியும் அங்கு குடியிருக்க முடியாமல் இருப்பவர்களுக்கு சொந்த வீட்டிற்கு மாறும் காலமாகும்.
கடந்த காலங்களில் பிறருக்காக உதவ ஜாமீன் போட்டு, பணம், வேலை வாய்ப்பு போன்ற உதவிகளை செய்து அவர்களால் ஏமாற்றத்தை சந்தித்திருப்பீர்கள், இது போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள். தொழில், வேலை காரணங்களுக்காக குடும்பத்தினரை விட்டு வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்கள் சிலருக்கு குடும்பத்தினோடு சேர்ந்திருக்கும் காலமாகும்.
சிலருக்கு வீடு, தொழில், பணியில் இடமாற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் இப்பொழுது கிடைக்கும்.
சனிபகவான் ராசிக்கு 4, 8, 11 ம் இடங்களை பார் வை செய்கிறார். வீடு கட்டுவதற்கும், வாகனம் வாங்குவதற்கும், கல்விக்கும் வங்கியில் கடன் கிடைக்கும், சிலருக்கு நீண்ட நாள் நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். உங்கள் முயற்சி சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றியாகும்.
இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள் சாதகமாக இருந்தால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
சிவன் வழிபாடு, குல தெய்வ வழிபாடு, ஏழை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் செய்வது மன சாந்தி தரும்.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment