தங்கம், வெள்ளி விலை உயரும், பசு, எருமை போன்ற கால்நடைகளின் விலை குறையும், எள்ளு, எண்ணெய் , பஞ்சு, போன்றவற்றின் உற்பத்தி பெருகி, வியாபாரம் சிறக்கும்.
காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விளைச்சல் பெருகும், விலை உயர்வு சீராக இருக்கும், ( மிக அதிக விலையேற்றம் இருக்காது ).
தொழில் சார்ந்த இயந்திரங்களின் உற்பத்தி பெருகும், அதே நேரத்தில் இயந்திரங்களின் விலை உயரும், தொழிலாளர் பிரச்ச்னைகள் தீரும்.
போலி ஆன்மிக வாதிகள், சாமியார்கள் , மத போதகர்களுக்கு அறியப்படுவர் மற்றும் மதம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும், நீண்ட தூர புனித யாத்திரை செல்பவர்கள் கவனமுடன் இருத்தல் நலம், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, கலைத்துறையினருக்கு ஆன்மிக சாந்தவர்களுக்கும் இடையே கருத்து மோதல் போன்றவை ஏற்படும்.
நீதி துறைக்கு எதிரான விமர்சனங்கள் அதிகம் ஏற்படலாம், நீண்ட நாள் பொதுநல வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வங்கி, நிதித்துறையில் குளறுபடிகளால் மக்களிடம் அதிருப்தி உண்டாகும், கந்து வட்டி போன்ற நிதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
அடுத்த 2 1/5 ஆண்டுகளுக்கு பங்குசந்தை வளர்ச்சி சீராக இருக்கும், (மிக பெரிய ஏற்ற இறக்கம் வாய்ப்பில்லை) தங்கம், வெள்ளி நகைகள், வங்கி, பைனான்ஸ் , வாகனங்கள், இரும்பு , இயந்திரம், எண்ணெய் போன்றவற்றின் பங்குகள் உயரும்.
மழை மிதமாக இருக்கும், புயல், சூறாவளி காற்றினால், நெருப்பினால் பாதிப்பு உண்டு, விமான கோளாறுகள், விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.
நாடுகளுக்கிடையிலான பிரச்சனைகள் அதிகரிக்கும், வெளிநாட்டு தொடர்பு தொழில், வர்ததகம் தேக்கம் அடையும்.
குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள், குழந்தைகள் நல காப்பகங்களில் பிரச்சனைகள் ஏற்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் கவனம் தேவை.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment