கன்னி ராசி
உங்கள் ராசிக்கு சனி பகவான் 3ல் இருந்து 4ம் இட த்திற்கு பெயர்ச்சியாகிறார், ராசிக்கு 5, 6 ம் இடத்திற்கு அதிபதி.
இது வரை இருந்த இடம் அனுகூலமான பலன்களை அதிகம் தந்திருக்கும், இனி அர்த்தாஷ்டம சனி காலமாகும், அஷ்டமத்தில் (8) பாதி அர்த்தாஷ் டமம் (4) ஆகும்.
புதிய முயற்சிகள், நண்பர்களிடம், பணபரிவர்தத்தினை , வாகன போக்குவரத்து போன்றவற்றில் சற்று கவனம் தேவை. பிறருக்கு கடன் கொடுப்பது, ஜாமீன் போடுவது போன்ற விஷயங்களில் நன்கு ஆலோசித்து இறங்குங்கள். உடல் ரீதியாக சற்று சோர்வு நிலை, மருத்துவ செலவு ஏற்படலாம்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், உயர்கல்வியில் தடை ஏற்படடவர்களுக்கு மீண்டும் படிப்பினை தொடர்ந்து வெற்றி அடைய வாய்ப்புண்டு.
எதிலும் இரண்டு யோசனை என்பது உங்களது ராசிக்குரியது, எனினும் ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவது எதிலும் முழுமையான பலன் தராது என்பதை கவனத்தில் கொண்டு புதிய செயல்களில் நன்கு ஆலோசித்து விவேகத்துடன் செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே.
சிலருக்கு வீடு, வேலையில் இடமாற்றம் ஏற்படும், அலைச்சல் அதிரிக்கும், வாகன போக்குவரத் துகளில் கவனம் தேவை.
வீடு கட்டுவதற்கும், புதிய வாகனம் வாங்குவதற்கும் கடன்கள் ஏற்படும், தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை.
சனி ராசி, 6, 10 ம் இடங்களை பார்வை செய்கிறார்.
வீண் கவலை, தடுமாற்றம் ஏற்படலாம், வேலை பளு அதிகரிக்கும், வேலை, தொழில் போட்டி உரு வாகும், இதனால் உங்கள் திறமைகள் வெளிபடும், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும், நெடுநாள் விற்காமல் இருந்த நிலம் போன்ற ஸ்திர சொத்துக்கள் விற்பனையாகும்.
நாளைய வெற்றிக்காக உழைக்கும் நேரமிது.
இதனுடன் உங்கள் ஜாதகத்தில் நடப்பு திசா, புக்திகள் சாதகமாக இருந்தால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
பைரவர் , ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் கால் நடை , வீட்டு விலங்குகளுக்கு உணவளிப்பதும் மனவலிமையை தரும், சங்கடங்கள் நீக்கி மன சாந்தி தரும்.
நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்
No comments:
Post a Comment