Wednesday 29 October 2014

கோச்சார ராசிபலனும் - தனி மனித ஜாதகமும்

கோச்சார  ராசிபலனும் - தனி  மனித  ஜாதகமும்

ஒவ்வொருவரும் பிறந்த  பொழுது ( நாள், நேரம், ஊர்  அடிப்படையில் )  உள்ள  கோள்சார  நிலையை கொண்டு ஜாதகம் கணிக்கபடுகிறது, இலக்கினம் என்னும் மைய புள்ளியை கொண்டும், பாவக மற்றும் கோள்களின் நிலையை  கொண்டும்   விதியை  அறிந்து கொள்ளலாம்.

தசா புத்தி  பலன் 

இதில் சந்திரனின்   இருப்பு நிலையை  கொண்டு தசா புத்தி மூலம் ஜாதகருக்கும் வாழ்வில் ஏற்படும்  கல்வி, செல்வம், புகழ், வீடு, வாகனம், நோய்,  திருமணம், கண்டம், பாக்கியம், தொழில், லாபம், நஷ்டம்  இன்ப-துன்பங்கள், வளர்ச்சி-வீழ்ச்சி,  என்பன உள்பட்டவைகள்   எப்பொழுது,  எவ்வாறு  நடக்கும் என்றும் அறிந்து கொள்
லாம்.   இவையே ( தசா புத்தி ) பிரதான அமைப்பு

கோள்சாரம் பலன் 
 
ஜாதகர் பிறக்கும் பொழுது  சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜென்ம  நட்சத்திரம்  ஆகும்,  ஜென்ம நட்சத்திரம் எந்த ராசியில் அமைகிறதோ அதுவே ஜாதகரின் ஜென்ம ராசியாகிறது. இதன் அடிப்படையில்  ராசி மண்டலத்தில்  நகர்ந்து கொண்டிருக்கும்  கோள்கள்  ஒவ்வொரு  ராசிக்கும் மாறி கொண்டிருக்கும் நிலையை கொண்டு  ஒருவருக்கும் ஏற்படும் நன்மை-தீமைகளை   ஆண்டு, மாத, வார, நாள்  பலன்களாக கூறுவது  கோச்சரா பலன்  இவை  இரண்டாம் நிலை

இவற்றில் தசா புத்தி  அமைப்பை பற்றி ஜோதிடம்  அறியாத பெரும்பாலோருக்கு  தெரிவதில்லை, ராசி  அடிப்படையில் பார்க்கப்படும்  கோச்சார  பலனை பிரதானமாக கவனத்தில் கொள்கின்றனர்.


இதில் மெதுவாக நகரும் கோள்களான  சனி, ராகு, கேது, குரு ஆகியவற்றின் பெயர்ச்சி பலன்களே பிரதானம்,  இவைகளே  நாளேடு, வார, மாத  பத்திரிகைகளில் வருகிறது , அதனை அறிந்து கொள்வதை  மக்கள் விரும்புகின்றனர்.

இங்கு கவனிக்க வேண்டியவை கோச்சார ராசி பலன் என்பது உலகில்  இருக்கும்  மொத்த மக்கள் தொகை  720 கோடி, இதில் ஒரு ராசிக்கு 
60 கோடி மக்கள் என  பொதுவாக வரும், ஒரே ராசியில் பிறந்த அனைவருக்கும் ஒரே  பலன்களாக நடக்க  வாய்ப்பில்லை,   ஆனால்  அவரவரின்  ஜாதக அமைப்பின்படி திசா புத்திகளை பொருத்து  அதிகரிக்கும்- குறைக்கும்.

திசா புத்தி  சுமார்  முக்கால் பங்கு (
75%
)  என்றால்,  கோச்சார பலன் கால் பங்கு ((25%) என கொள்ளலாம்.

திசா புத்தி நன்றாக இருந்தால்  கோச்சார  தீமையை  சமாளிக்கும் நிலையை  தரும்,  திசா புத்தி தீமையாக  இருந்து கோச்சாரம்   நன்றாக   இருந்தால் அந்த காலம் சற்று ஆறுதாலாக  இருக்கும்.

திசா புத்தியும், கோச்சரமும்  நன்மையாக இருந்தால்  அது  ஒரு பொற்காலம்,  திசா புத்தியும், கோச்சரமும் தீமை தரும் அமைப்பில் இருந்தால் சொல்ல வேண்டியதில்லை, சற்று கடினமே.

எனவே பொதுவான ராசி பலன் அமைப்பை மட்டும் பார்க்காமல் அவர்வர்  சுய ஜாதக   அமைப்பை  கருத்தில் கொள்ள வேண்டும்.

தின, வார, மாத, ஆண்டு  மற்றும்  கோள்களின்  பெயர்ச்சி பலன்களை  பார்ப்பது  தவறில்லை,  ஆனால் அவற்றை மட்டுமே பிரதானமாக கருத  வேண்டாம் என்பதே  இந்த பதிவின் நோக்கம். ஏனென்றால் ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை  வாய்ந்தது.

நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

No comments:

Post a Comment