Friday 5 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 -2016


திருக்கணித  பஞ்சாங்க  கணக்கின் படி  இந்த  மன்மத வருடம்  ஆனி மாதம் 29ம் தேதி   (14-7-2015)  செவ்வாய்க்கிழமை   காலை 6.23 - க்கு   மகம் நட்சத்திர முதல் பாதத்தில் குரு பகவான்   சிம்ம ராசியில்  பிரவேசிக்கிறார்.

கோச்சர  ரீதியாக  குரு  ஒருவரின்  ஜென்ம ராசிக்கு  2,5,7,9,11 இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது  நன்மையான பலன்களை  அதிகம் பெறுவார்,    

இந்த குரு  பெயர்ச்சியால்  மேஷம்,கடகம்,துலாம், தனுசு,கும்பம்   ஆகிய  5  ராசியினர்  அதிக   நன்மையான  பலன்களை அடைவர்.

ரிசபம், சிம்மம்,விருச்சிகம்  ஆகிய  3 ராசியினர்  மத்திமமான பலன்களை அடைவர்.

மிதுனம், கன்னி, மகரம்,மீனம்  ஆகிய  4  ராசியினருக்கு  அனுகூலம் இல்லை. 

இவை பொதுவான  குரு பெயர்ச்சியால்  ஏற்படும் பலன்கள் 
உங்கள் பிறந்த ஜாதகத்தில் நடைபெறும்  திசா புக்திகள் அடிப்படையில்  நல்ல ,தீய  பலன்கள்  மாறுபடும்.


12 ராசிகளுக்கான  குரு  பெயர்ச்சி  பலன்கள்   மேஷம் முதல் ஒவ்வொன்றாக  தொடர் பதிவுகளில்  வெளிவரும்.

வியாழன். ( குரு )  பற்றிய  சில தகவல்கள் 

சூரிய  குடும்பத்தில்  சூரியனுக்கு  அடுத்த படியாக   உருவத்தில்  பெரிய கோள் குரு   எனும்   வியாழ கோளாகும் .  வாயு  நிறைந்த கோளாகும், வானவியல் ரீதியாக  சூரியனிலிருந்து  777  மில்லியன் கிலோ  மீட்டர்   தொலைவில் உள்ளது.  சூரியனை  11 வருடம் 86 நாட்களில் சுற்றி வருகிறது.

சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்ள் வழங்கப்படுகிறது.
அந்தணன்,அமைச்சன்,அரசன்,ஆசான்,ண்டனப்பான் ,குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா, தாரபதி,தெய்வமந்திரி,நற்கோள் , பிரகற்பதி, வீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.

நவக்கிரகங்களில்   முழு முதல் இயற்கை சுபர் குரு  பகவான், இவர்  பார்வை பட்ட   இடங்கள்  தோஷங்கள்  குறைத்து   நன்மை தரும்.

எனிலும் ஆதிபத்திய  ரீதியாக  உபய  மிதுனம், கன்னி   இலக்கினங்களுக்கு பாதகாதிபதி குரு வலு  பெறுவது   நன்மை அல்ல. அசுர  குரு  சுக்கிரனின் ரிசப, துலாம்  இலக்கின, ராசியினருக்கு   இவரின்  திசா, புக்தி   அனுகூலம்  இல்லை. 

மேசம், கடகம், சிம்மம், தனுசு இலக்கினங்களுக்கு திரிகோனதிபதி மற்றும் தனுசு, மீன  இலக்கின  ராசிக்கு  அதிபதி    நற்பலன்களை  அதிகம்  தருபவர்,  


பால் : ஆண் கிரகம்.
நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).
வடிவம் : உயரம்.
அவயம் : இருதயம்.
உலோகம் : பொன்.
ரத்தினம் : புஷ்பராகம்.
மலர் : முல்லை.
வாகனம் : யானை.
சமித்து : அரசு.
சுவை : தித்திப்பு.
தான்யம் : கொத்துக்கடலை.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : வாத நாடி.
திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ). 
அதிதேவதை : பிரம்மா, .
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக்கோள்.
குணம் : சாந்தம்.
ஆசன வடிவம் : செவ்வகம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
பகை கோள்கள் : புதன், சுக்கிரன்.
சம கோள்கள் : சனி, ராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 வருடம்.
திசா புத்திக் காலம் : 16 ஆண்டுகள்.

நட்பு வீடு : மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
பகை வீடு : ரிஷபம்,மிதுனம், துலாம்.
ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.
நீசம் பெற்ற இடம் : மகரம்.
உச்சம் பெற்ற இடம் : கடகம்.
மூலதிரிகோணம் : தனுசு.
உப கிரகம் : எமகண்டன்.
காரகத்துவம் : புத்திர காரகன்.

புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி, இவைகளுக்கு வியாழன் காரகன். சுப கோளான குரு ஒருவரின் ஜாதகத்தில் வலுவாக இருப்பது சுப பலனை தரும்.  


ஆஸ்ட்ரோ  கண்ணன் 

No comments:

Post a Comment